திங்கள், 28 பிப்ரவரி, 2011

மக்கள் போராட்ட திசைவழி’ மாறல் வேண்டும  ‘மக்கள் போராட்ட திசைவழி மாறல் வேண்டும்
-தமிழியம். பறம்பை அறிவன்   27-02-11
அரசின் பிடியிலும், அரசின் சார்பு அமைப்புகளின் கட்டிலும் மக்கள் உள்ளனர். அரசை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகளும் கூட அரசின் பெரும் பணமுதலாளியக் கொள்கையை எதிர்க்கும் வலுவன்றி உள்ளன. அவைகளின் ‘நோக்கம்மக்கள் நல வாழ்வு என்று கூறப்படினும், அரசின் அமெரிக்க, பன்னாட்டுக் கொள்கைகளால் உருவாகி வரும் ‘உயர் தொழில் நுட்பம்என்ற பெயரில் மரபு சார்ந்த்தும தீங்கற்றதுமான விளைப்பு (உற்பத்தி) களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்கும் திறனற்று உள்ளனர்.

தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதில் அரசு நிறுவன ஆதரவு என்பது நல்லதா? விளைப்பு (உற்பத்தி) யில் மக்கள் நலம் என்பது முதன்மையாதல் வேண்டும் என்பது தேவையா? நிறுவன் எதிர்ப்புக்கு முன் அதன் விளைப்பின் (உற்பத்தியின்) விள்வுகளால் ஏற்படும் நன்மை தீமை பற்றிய கவனம் வேண்டும்.

‘மருந்துகுழந்தைகளுக்குத் ‘தடுப்பு ஊசி மருந்துஎன தரப்படுவன, குழந்தைகளுக்கு இயற்கையான தடுப்பாற்றலைக் கெடுப்பனவாக உள்ளன. இம் மருந்தும், ஊசியும் தவறானவை. இவற்றைக் கண்டுபிடித்து ‘உலகம் எங்கும் பரப்ப  அரசுகளைப் பன்னாட்டு முதலாளிய அமைப்புகள் கட்டாயப் படுத்துகின்றன. தனியார் (பெருமுதலாளிகள்) களுடன் கூட்டு வைத்துள்ள அரசு, தன் நிர்வாக வசதி கருதியும், தன் ‘அரசியல் முகவர்கள் நலன் கருதியும் ‘ உற்பத்தியை, நிர்வாகத்தைத் தனியார் துறைக்கு மாற்றுகிறது. இதில் ‘மக்கள் நலம்‘,  ‘குழந்தைகள் நலம் எங்கே உள்ளது?

எனவே, போராட்டத்தின் அடிப்படையில் உள்ள குறையைச் சிந்திப்பது நல்லது... யாருக்காக! மக்களைத் திரட்டுகிறோம் என்று கருதிப்பார்ப்பது தேவையாகும்! 

நூறு ஆண்டுகளுக்கு முன் பிரான்சு நாட்டுப் பேராசிரியர் அன்டாயின் பிச்சாம்ப் கண்டுபிடித்த நுண்ணுயிரி மூலம் கிருமியியல் (bacteriology) துறை தோன்றியது இந்த நுண்ணுயிரிக் குறிப்பைக் கொண்டு பிரஞ்சுக்காரரான லூயி பாயிசிட்டர் என்ற மருந்து விற்பனையாளர் உத்தியில் உருவானதே தடுப்பூசி. இவரே நுண்ணுயிரிகளால் கேடு எதுவும் விளைவதில்லை என்று தமது மரண வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். (-தமிழ் வாணன் நூல்)

குழந்தை பிறக்கும் போது எவ்வகை நோய் எதிர்ப்பாற்றலும் இல்லாமல் தான் பிற்க்கிறது. ஆனால், எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ளும் பண்புகளை ஏந்தியே பிறக்கிறது.’’ எனவே, தடுப்பூசித் திட்டம் மக்களை – தமிழர்களை வஞ்சிக்கும் ஏற்பாடுதான் என மருத்துவர் சு.வீரபாகு விரிவாக விள்க்கியுள்ளார்.
எனவே, தடுப்பூசி மருந்து குழந்தைகளைக் காப்பது என்று ஆங்கில அடிமைகள் பரப்பிவரும் பொய்களை அப்படியே நம்பி மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்பவர்களிடம் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

‘மக்கள்திரள் பெரும் போராட்டம்‘ என்ற பேரில் தமிழக அரசோடு பேரம் பேசும் முயற்சியில் இறங்கியுள்ளவர்கள் தான் இந்தியக் கூட்டாளியாகவுள்ள தமிழக ஆளுங்கட்சிகளிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

மக்களின் உயிர்வாழ்க்கையை உயிர்சூழல் உயிர்ம நேயம் உள்ளவர்களால் மட்டுமே காக்க இயலும். இவர்களே உண்மையான, மனிதநேயம் உள்ளவர்கள். தமிழீழத்தில் நடந்த தமிழினப் படுகொலையை ஞாயப்படுத்தியவர்களும், அதைத் தடுக்கும் அதிகாரம் இருந்தும் கரவாக கண்டுகொள்ளாமல் இருந்தவர்களும் ‘குழந்தைகள் பேரால் புலம்புவது, அக்கறையால் அன்று. மருந்து வணிக ஆதாயம் கருதியே. தேவைகளை உருவாக்கி, மருந்துகளைச் சந்தைக்குக் கொண்டுவரும் ‘மக்கள் பகைவர்களின் கூட்டாளிகள் மக்கள் பேரால் போராட முயல்வது வழக்கமாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவது ‘தமிழ் தேசியர்களுக்கும் பிற தேசிய மக்களுக்கும் உள்ள பொறுப்பாகும்.

இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதை விட இந்திய தரகுமுதலாளிகளுக்கு ஆதரவான போராட்டம் என்பது வெட்டவெளிச்சம். எதிர்மருத்துவ (அலோபதி)க்கு ஆதரவாக என்பது, தேசிய மருத்துவ நலங்களுக்கு’ (தமிழ், ஆயுர்வேத, ஓமியோ மருத்துவங்களுக்கு) எதிரான என்றாகி விடும்.
தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் என்கின்ற ‘எதிர் மருத்துவம்ஏற்படுத்திவரும் கேடுகளை மக்கள் நல மருத்துவர்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இது ஒரு பாலாக ‘நஞ்சைஅரசு தருவதா, தனியார் தருவதா என்று பேசி மக்கள் நலனை மறப்பது வெறும் கட்சி அரசியலாகி விடுகிறது. யார் தந்தாலும், உற்பத்தி செய்தாலும் ‘நஞ்சை ஏற்பது அறிவீனம். மேலும் சொல்லப்போனால். அக்குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவது குற்றத்திலும் குற்றமாகும்!

மக்கள் நலனைத் தீர்மானிக்கும் ‘மக்கள் நல இயக்கம் தேவை. அது தமிழ் தேசிய நோக்கில் மட்டுமே தெளிவான முடிவுகாண இயலும்! இன்றை ‘இந்திய அரசு எதிர்ப்பு- இந்திய ‘காங்கிரசு எதிர்ப்பு மட்டுமன்று, இந்திய தரகு பெருமுதலாளிகளின் எதிர்ப்பும் ஆகும்! இதனை அடிப்படையான ‘தமிழ்த் தேசமக்கள் நலனுடன் எண்ணீப்பார்த்து, இந்தியத்துடன் சிக்கிச் சீரழியும் தேசிய இன மக்களின் எழுச்சிக்கான போராட்டமாக்கப் பெறல் வேண்டும்.
இந்த வகையில் ‘தமிழ்த் தேசிய மக்களின் நலவாழ்வு இயக்கம் செயல்படுதல் வேண்டும்!
இந்திய அரசின் பன்னாட்டுக் கொள்கையை எதிர்ப்பதாக்க் காட்டிக் கொண்டு அதன் ‘ஆளுங்கட்சியோடு கூட்டனி வைத்துக் கொள்வதும், பதவிக்காக ஒட்டுண்ணி அரசியல் நடத்துவதும் இந்தியவியல் கட்சிகள் தன்மையாவதால், அவை ‘தரகு முதலாளியத்துடன் மறைவாகவோ, நேரடியாகவோ உறவு கொண்டு ‘தேசிய இன நலன்களைப் புறக்கணிக்கின்றன.

சென்னை கிண்டியில் உள்ள B.C.G. -VL,  குன்னூரில் உள்ள பாசுட்டர் நிறுவனம், இமாச்சல் பிரதேசத்தில் கசௌலிய்ல் உள்ள CRI ஆகிய பொதுத்துறை திறுவனங்கள்தான் நூற்றாண்டுகளுக்கு மேலாக நோய்தடுப்பு மருந்துகளை (vaccine/anti-Rabies/-Tetanus) மிக்க குறைந்த விலையில் தயாரித்து அளித்து வந்த்து.
இது இந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கே பயனளித்து வந்த்து. இந்த மூன்று நிறுவனங்களையும் மூட அரசு முயன்ற போது வலுவான மக்கள் போராட்டத்தின் (strong Strong Cvic  Moverment)மூலமாக அதைத் தடுத்தோம்’’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தலைவர்கள் – அமைப்புக்ள் சிந்திக்க...

‘குழந்தைகள் உயிருடன் விளையாடாதேஎன்று மக்களைத் திரட்டி நடத்தும் இப்போராட்டம், ‘குழந்தைகளை ஆங்கில எதிர் மருத்திவத்தில் ஆயுள் முழுதும் வைத்து வளர்த்து ஆளாக்க நினைப்பதாகும். நோய் குடியிருக்கும் குடிமக்களை உருவாக்கும் இந்த மருத்துவத்தை எதிர்க்காமல் ‘அரசு எதிர்ப்பு என்பது பொய்யானது- குழந்தைகளைச் சொல்லி ‘மலிவான வாக்குவங்கிக்கு அலையும் போலி அரசியலாகும்.
kமருத்துவச் சிந்தனை ;

27. 02. 2011 ஞாயிறன்று தமிழகம் முழுவதும் உள்ள 66 இலக்கம் குந்தைகளுக்கும் ‘போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாகச் செய்தி (தினமணி 28-02-2011 சென்னை) கூறுகிறது. போலி(யோ) ச் சோட்டு மருந்து ‘இயற்கையான குழந்தைகளின் நோய்எதிர்ப்பாற்றலைத் தடுத்துச் செயற்கையான எதிர்விளைவை  உண்டாக்கக் கூடியது. சென்னையில் மட்டும் 4,51,077 குழந்தைகளுக்கு இச் சொட்டு மருந்தைத் தமிழக அரசு தந்துள்ளது. இதனை அரசு செய்தால் நன்மை, தனியார் செய்தால் தீமை என்று பார்பது முற்போக்கானது என்று கருதப்படுகின்றது. மாற்று மருத்துவச் சிந்தனையாளர்கள் இதுபற்றிக் கருத்துச் சொல்வது காலத்தின் கட்டாயம் ஆகும்!

குழந்தைகள் உயிரோடு விளையாடும் அரசின் போலி(யோ) சொட்டு மருந்து குறித்துப் பேசாமல் இதனை அரசுத்துறை உற்பத்தி (விளைப்பு) ஆக்குதல் வேண்டும் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு இந்திய முதலாளிகளுக்கும் துணை போவதாகும்,,! இந்திய அரசுக் கொள்கையின் அடிப்படைத் தவறுகளை எதிர்ப்பதற்க்கு மக்களை அணி திரட்டாமல் இந்திய அரசு எதிர்ப்பு என்பது தேர்தலில் பதிவிப் பங்கீடு பெற அல்லது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர என்ற குறுகிய தன்னல நோக்கம் கொண்டதென்றே தெரியலாம்!

தேர்தல் களத்தில் ஆளும் கட்சி எதிர்ப்பு, எதிர்க்கட்சி எதிர்ப்பு என்பது ‘பதவி நாற்காலி யில் அமர்வதற்கான ‘இசை நாற்காலிப் போட்டி யாகவே உள்ளது.

எனவே குடிநாயகத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இத் தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் ‘குழந்தைகள் ஆகிவிடுதல் கூடாது என்பதே நம் வேண்டுகோள் ஆகும்.

                  -தமிழியம். பறம்பை அறிவன்