வெள்ளி, 28 ஜனவரி, 2011

மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....


மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....

நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது - உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.

கட்டிபட்டுப்போன சளியை - வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
நீங்கள் பார்க்கலாம் வீட்டுச் சுவற்றில் ஒட்டிய சளித் திவலையை அடுத்த நாள் பார்த்தால், அந்த இடத்தில் பளபளப்பாகத் தெரியும். கையை வைத்து தடவிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது ஆனால் சிறிது நீர் பட்டால் அது உப்பிப் பெரிதாகி இருப்பதைக் காணலாம். இது போன்ற நிலைதான் சளியால் பாதிக்கப்பட்ட உடல் கருவிகளுக்கும். உடல் சூடு அதிகரிக்கும் போது உடலுடன், நுரையீரலில் ஒட்டிக்கொள்ளும். 
உடல் தன்னிலை அடைந்து வெளியேற்றும் ஆற்றல் சீராக்கப் படும்போது சளி சுகமாக வெளியேறுகிறது. ஆனால் நாள்பட்ட கட்டிபட்ட சளியை வெளியேற்ற உடல்  மிகவும் துன்பமடைகின்றது.

எதிர்முறைய மருந்து வணிகர்கள் இதை தனது வியாபாரத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை நம்பும் மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கத் தேவையான எல்லா பத்திய முறைகளையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். 
எதிர்முறையர்களின் மருந்துகளும், அவர்கள் நன்மைக்காக நமக்குக் காட்டும் வாழ்க்கை முறைகளும் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. 
 இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் – சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும்-மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.
குழந்தைகளை சளித் தொல்லைக்காக எதிர்முறைய மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர் என்ன கூறுகிறார்.

குளிர்ச்சியான உணவுகளைத் தவிருங்கள், தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், சூடான தண்ணீர் மட்டும் கொடுங்கள், வாரம் அல்லது பத்து நாட்களுக்கோர் முறை சுடுநீரில் குளித்தால் போதும், பழங்களைத் தவிர்த்து விடுங்கள், காதுகளை நன்கு மூடிவையுங்கள் (சென்னையில் இந்த வெயிலிலும் காது மூடிகள் பயன்படுத்தும் ஆட்களை பார்க்க முடிகிறது) என பல பத்தியங்களோடு போதையூட்டும் டானிக்குகளையும், சளி வெளியேற்றாது தடுக்கும் மருந்து, மாத்திரைகளையும் கொடுத்து விடுகிறார்கள். 
உடலுடைய சுகமளிக்கும் ஆற்றலைத் தடுக்க முடியாததால் பிரைமரி காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு பல ஆண்டுகள் வைத்தியம் பார்க்கிறார்கள். இவர்களின் மருந்துகளால் உடலின் சுகமளிக்கும் ஆற்றல் மிக பலவீனமாகி அதன் காரணமாக வெளியேற்றும் முயற்சி தடைபட்டு நின்ற பின் அந்த டாக்டர் தான் கஸ்டப்பட்டு குணப்படுத்தினார் எனப் பேச ஆரம்பிக்கிறார்கள். 

வெளிக்காட்டாமல் -வெளியேற்றப்பட முடியாமல் உடலில் கழிவுத் தேக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

சில ஆண்டுகளுக்குள், மீண்டும் உடல் பருவத்தின் மாறுபாட்டால் உடல் சக்தி பெற்று தன்னைச் சுகப்படுத்த முயலுகிறது. அப்போதும் உடலின் மொழியறியாமல், புதிய நோயாக நினைத்து இளைப்பு, ஈளை (வீசிங் டிரபுள், ஆஸ்துமா, டி.பி) என்ற புதிய பெயரில் அதே அல்லது புதிய டாக்டரையோ தேடிப்போய் வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள் நமது கண்களுக்கு தெரிந்த இந்த காட்சிகள் மிக மலிந்துள்ளன நம் நாட்டில். டி.பி இது - இந்தியன் காமன் டிசிஸ் என முத்திரையும் கொடுத்திருக்கிறார்கள் விழாவும் எடுக்கிறார்கள்.

சளி - இதிலிருந்து விடுபட முடியாதா?

முடியும். மிக எளிதாக, சுகமாக விடுபட முடியும்.

எப்படி?

நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக சளி மட்டுமல்ல, அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். 

நோயற்ற வாழ்வைப்பெற உங்கள் ஞாபகத்துக்காக,

1.        
இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)
2.       இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)
3.      
இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)
4.     
  இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)
5.      
அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)
6.      
காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)
7.      
பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)
8.      
 நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)
9.     
  இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும். (சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)
10.    
வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும். (எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)
11.   காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)
12. 
  உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)
13. 
  மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)
14. 
  பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் 
-தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும். (எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)
15.  
கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். 
(உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)
16.  
மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)
17. 
  மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது.  
(இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)

முன் கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி உடல் நலம் பெருகும்.

உடல்நலம் என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால் எல்லாம் சுகமே. மேலும் நம்மைப்படைத்த படைப்பாற்றல் – இறைவன் எப்பொழுதும் நம்மை காக்க துணை வரும்.

நம்முள் இருக்கும் படைப்பாற்றலின் தன்மை அறிந்து - தன்னை உயர்த்திக் கொள்வது மனிதப் பிறப்பின் தேவை. 

நான் இங்கு எழுதியுள்ளது நமது முன்னோர்கள் வழிகளே. ஏதேனும் சந்தேகமோ, பயமோ, அல்லது உதவியோ தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம்.

மேலும் நீண்டகாலத் தவறுகளைச் சரி செய்யும் பொழுது ஏதாவது உடல் துன்பம் ஏற்பட்டால்  வினாடிகளில் இறைவழி மருத்துவத்தால் துன்பங்களை நீக்கி உங்களுக்கு உதவ இயலும். நீங்கள் இந்த அகிலத்தின் எந்தப் பகுதியில் இருப்பினும் இறைவழி மருத்துவத்தால் உங்களது சுகத்தை உறுதிப்படுத்த முடியும்.

என்னைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் செய்க. மிகவும் தேவையெனில் பேசுக.
எனது கைபேசி எண்; 93458 12080, 94447 76208

நன்றி.

ந.தமிழவேள்.
மரபுவழி நலவாழ்வு மையம்,
31.காந்தி நகர், 
ஆவடி,
சென்னை 600054. 
தமிழ் நாடு, இந்தியா



49 கருத்துகள்:

  1. உங்கள் பதிவு மிக்க உபயோகமாக இருக்கிறது. ஆனால் தினமும் தலை குளிப்பதில் இரண்டு பிரச்சனைகள் வருகிறது. ஒன்று, தலை kaayamal ஈரமாகவே இருக்கிறது. இரண்டு, எண்ணை எப்போது வைப்பது ? முடி வரட்சியாகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நண்பர்க்கு,

    அழுத்தி தலையைத் துவட்டுவது தலையைச் சூடாக்கும் அது தேவையில்லை.

    அதிக முடியுள்ளவர்கள் தலை குளித்தபின் குற்றாலம் துண்டு பொன்ற மென்மையான ஈரம் உறிஞ்சக்கூடிய துணியால் - முடியுடன் சுற்றி முடிந்து கொண்டை போல் போட்டுக் கொள்க.

    சிறிது நேரம் கழித்து துணியை எடுத்தால் தலை நன்கு காய்ந்திருக்கும்.

    தலையில் ஈரத் துணியுடன் இருந்த நிமிடங்கள் உடலைக் குளிர்வித்த்தால் முதுகெலும்பு கர்ப்பைக்கு நன்மை தரும்.

    எண்ணெய் வைப்பது பற்றி துன்பமில்லை.

    குளிக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணையை உச்சியில் வைத்துக் கொள்க. பின் தலை காய்ந்த பின் எவ்வளவு தேவையோ அவ்வளவு வைத்துக் கொள்க.

    காலை மாலை இரண்டு வேளை தலைக்கு குளித்துப் பாருங்கள் பிறருக்கு சொல்லுங்கள் அதன் சுகத்தை...

    பதிலளிநீக்கு
  3. ஐயா, வணக்கம்,
    நான் தினமும் வெந்நீரில் குளிக்கிறேன், குளிர்ந்த நீரில் குளித்தால் தலைவலி வருகிறது, எனவே வாரம் இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிக்கிறேன், சிறிய வயதில் ஏரியில் அடிக்கடி குளித்ததால், இரண்டு காதுகளிலும் ஓட்டை இருப்பதாக கூறி ஐந்து வருடங்களுக்கு முன்பு வலது பக்க காதில் அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பே ஒருபக்க தலைவலி அடிக்கடி வரும், ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகும் ஒரு பக்க தலைவலி சரியாக வில்லை,
    ஒரு வருடதிருக்கு முன்பு வேலைக்காக நைஜீரீயா வந்திருக்கிறேன்,
    தயவு செய்து,
    அறிவுரை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.

    குருவருள் காக்க,
    சரவணன்,
    நன்றி,
    மின்னஞ்சல்:saravanan_agni@yahoo.com

    பதிலளிநீக்கு
  4. நணபரே,
    தமிழவேள் வணக்கங்கள்.
    தினம் இருமுறை குளிர்ந்த நீரில் தைரியமாக குளித்துப் பாருங்கள். தலைவலி வராது உடலின் நோய்கள் அனைத்தும் மறைந்து போகும். தேவை இருப்பின் என்னால் இறைவழி மருத்துவத்தில் உடன் உதவ முடியும். வலி வந்தால் எனது கைபேசியில் தொடர்பு கொள்க.
    நன்மை உண்டாகுக.
    ந.தமிழவேள்

    பதிலளிநீக்கு
  5. ஐயா,
    வணக்கம்,

    தங்களின் பதிலுக்கு நன்றி,
    நான் குளிர்ந்த நீரிலேயே குளிக்க முயற்சிக்கிறேன்,
    ஏதேனும் வலி ஏற்படின் தங்களை தொடர்பு கொள்கிறேன்,

    குருவருள் காக்க,
    சரவணன்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஐயா,
    வணக்கம்,

    தங்களுடைய பதிலுக்கு நன்றி தெரிவித்தபின் இன்றுவரை தினமும் இருமுறை குளிர்ந்த நீரிலேயே குளித்து வருகிறேன், குளிக்க ஆரம்பிக்கு முன் சற்று தயக்கமாக இருந்தாலும், குளித்து முடிக்கும்போது நீங்கள் சொன்னதுபோல் சுகமாகவே இருக்கிறது, இதுவரை வந்துகொண்டிருந்த ஒற்றை தலைவலியும் வரவில்லை, நேரிடையாக மருத்துவரிடம் சென்று ஒரு பக்க காதில் அறுவை சிகிச்சை செய்தும் குணமாகாத தலைவலி தினமும் இருமுறை குளிப்பதால் சரியாகும் என்பதை நம்பவே முடியவில்லை, ஒருவேளை வேறு யாரவது இப்படி குணமடைந்தேன் என்றால் நானே நம்ப மாட்டேன்,

    நான் தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,

    குருவருள் காக்க,
    சரவணன்,
    நன்றி,

    பதிலளிநீக்கு
  7. அன்பு குருவருள் சரவணன் அறிவது,
    தமிழவேள் வணக்கங்கள்.

    தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் நோக்கில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    தங்களைப் போன்ற நல்லவர்களால் இவ்வுலகம் நலம் பெறும்.

    அன்பை மறவா,
    ந.தமிழவேள்

    பதிலளிநீக்கு
  8. எனக்கு மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே உடல்நிலை சரியாக உள்ளது. தற்போதுள்ள சளி நீங்க ஏதேனும் மருத்துவக் குறிப்புகள் தந்தால் நலமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. நண்பர்க்கு,

    மேலே பதிவில் உள்ளபடி பழக்கங்களை கைக்கொண்டால் நோய்களும் வராது வந்த நோய்களும் நீங்கிவிடும்.

    பொதுவாக சளி, காய்ச்சல், சுரம், சீரணக் கோளாறுகள் நீங்க் கீழ்காணும் கசாயத்தை நீங்களே செய்து கொள்ளலாம்.

    மிளகு-10

    சீரகம்- ஒரு சிட்டிகை(இரு விரலால் எடுக்கும் அளவு)

    வேப்பம் ஈர்க்கு -4

    இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர் ஊற்றி 4ல் 1 பாகமாக காய்ச்சி வடித்து ஆறியதும் குடிக்கவும் ஒன்று அல்லது இரண்டு வேளை சாப்பிட உடல் சுகம் பெறும். மேற் குறிப்பிட்ட துன்பங்கள் நீங்கும்.

    குறிப்பு- மிளகு, சீரகம் பொடிக்க தேவையில்லை அப்படியே போடலாம்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  10. AYYA ACCUPUNTURE PADIKA AASAI PADUKIREN THAGAVAL SOLLAVUM

    GOPI -CHENNAI
    RS.GOPIKRISSNA@GMAIL.COM

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. சார் வணக்கம்,
    இறைவழி மருதுவம் என்று எதை குறிபிடுகிறிர்கள்?

    பெ.சிவப்ரகாஷ் , சென்னை

    பதிலளிநீக்கு
  13. நண்பர் சிவபிரகாஷ் அறிவது,

    தமிழவேள் வணக்கங்கள்.

    இறைவழி மருத்துவம் என்ற லேபிளில் உள்ள கட்டுரைகள் உங்களுக்கு இறைவழி மருத்துவம் பற்றிய புரிதலைத் தரும்.

    மேலும் விபரம் தேவைஎனில் பேசுக. எனது கைபேசி எண். 93458 12080

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்,
      தங்கள் பதிலுக்கு நன்றி. எனக்கு சில நேரங்களில் குறிப்பாக இரவில் வீசிங் வந்துவிடும் . மருந்து இல்லை என்றல் மிக்க கவலை ஆகிவிடும் . அதனல்தான் அது மாதிரி நேரங்களில் அவசரத்துக்கு பேசலாமா இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரிந்து கொள்ள கேட்டேன்
      நட்புடன் பெ.சிவப்ரகாஷ் .

      நீக்கு
    2. iyya enaku iravil gas trouble problem irukku , enaku pethi agi 5 varudanga agirathu ithal ethenu prachanaya

      நீக்கு
    3. அன்பு ஏசுதாஸ் சேது அறிவது,

      தமிழவேள் வணக்கங்கள்.

      கீழே உள்ள பக்கங்கள் தங்கள் சீரண உறுப்புகளை நலமாக்க உதவும்.

      http://siddhahealer.blogspot.in/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88

      அன்பை மறவா,

      தமிழவேள் நளபதி

      நீக்கு
  14. எனக்கு சைனஸ், தொடர் தும்மல், வீசிங், இருக்கிறது, நான் நிறைய ஆங்கில மருந்து எடுத்தேன் நிரந்திர தீர்வு இல்லை...சரி செய்ய இயற்க்கை வைத்தியம் என்ன?

    பதிலளிநீக்கு
  15. அன்பர்க்கு,

    மேலே உள்ள பதிவை மீண்டும் படித்து பழகுங்கள் நலம் உண்டாகும்.

    இதுவே எளிய வைத்தியம். மேலும் கேள்வி இருப்பின் பேசிக.

    கைபேசி 9345812080

    அன்பைமறவா,

    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iyya ennaku mutchu vitta migavum kadinamaga irukirathu athigama sali ulathu 6mathamaga migavum kastapadukiren doctor kitta poi daily tablet pottu no use daily naraga vethanai

      நீக்கு
  16. என் மகனுக்கு 5 வயதாகிறது. இந்த ஒரு வருடமாக அடிக்கடி சளி தொல்லை. காது infection ஆகி விடுகிறது. ஜூரம் வந்து விடுகிறது. ஒரு வருடமாகத் தான் பள்ளிக்கு செல்கிறான். எதிப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். அவன் 14 கிலோ எடை தான் உள்ளான். நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். அடிகடி சளி வராமல் தடுக்க கை வைத்தியம கூறுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  17. அய்யா ,
    சிறந்த பதிவு .
    மண்டை சளி மட்டும் அல்ல அனைத்து விதமான நோய்களையும் நீக்க கொள்ள முடியும்
    நன்றி
    நந்தா
    தாம்பரம்

    பதிலளிநீக்கு
  18. anna en peyar rajesh kumar enaku marphu sali vanthal suvasam vida migavum siramamaga ullathu , mattrum eppothum sali nose valiyaga vanthu konde irukkirathu kunamaga vazhi kooravum

    பதிலளிநீக்கு
  19. அன்பு ராஜேஸ் குமார் அறிவது,
    தமிழவேள் வணக்கங்கள்.
    மேலுள்ள பதிவை மீண்டும் படித்து பழகுக. உங்கள் துன்பம் தீரும். பழகுகையில் தொல்லை அல்லது சந்தேகம் வரின் பேசுக.
    கைபேசி எண்-93458 12050
    நீச்சல் பழக நீரில் இறங்க வேண்டும்.

    நலம் உறுதி. செய்து பாருங்கள்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  20. எனக்கு தலை பாரம் ,சளி ,சிறு மயக்கம் இருக்கு...sinus இல்லைன்னு சொல்றாங்க ...இதுக்கு என்ன பண்ணலாம்னு சொன்ன கொஞ்சம் நல்லா இருக்கும் ...

    பதிலளிநீக்கு
  21. அன்பு விஜய் குமார் அறிவது,

    தமிழவேள் வணக்கங்கள். மேலே உள்ள நலவாழ்வு விதிகளை கற்று பயன்படுத்துக. நலம் பெறுவீர்கள்.
    அதற்கப்புறமும் தொல்லை இருந்தால் பார்ப்போம்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  22. Iiya, Enaku migrain enum thalaivali irrukerathu... Migavum avathi padukeran.. pathil alikavum..
    Nandri

    பதிலளிநீக்கு
  23. அன்பு மோகன் ராஜ்,
    வணக்கங்கள்.
    நலவாழ்வு விதிகளைக் கற்று பயன்படுத்துக. நலம் பெறுவீர்கள். அதற்கப்புறமும் தொல்லை இருந்தால்;
    வலி இருக்கும் போது என் கைபேசியில் வருக. சுகம் பெறலாம்.

    தமிழில் எழுத nhm writer உதவும். இலவசமாக வலையில் கிடைக்கும்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  24. அன்பு zertic,

    விரிவான விபரங்கள் தேவை. எனது கைபேசி அல்லது மின் முகவரியில் தொடர்பு கொள்க. நலம் உண்டாகட்டும்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  25. nan ungal phoneku emergency a koopidum pothu call connect akala

    பதிலளிநீக்கு
  26. அன்பு பிரியா,
    தமிழவேள் வணக்கங்கள்.
    நான் கடந்த இரு வாரங்கள் மலேசியா சென்றிருந்தேன்.
    ஆகவே எனது கைபேசி எண்கள் செயல்படாதிருந்தன. இது குறித்து வலைதளத்திலும் முகநூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.எனது மின்அஞ்சல் முகவரியைப் பயன்படுத்துமாறு கூறியிருந்தேன்.

    தங்களது தேவையின் போது உதவ இயலாததுக்கு வருந்துகிறேன். நேற்று நான் சென்னை திரும்பி விட்டதால் எனது கைபேசி எண்கள் செயல்படுகின்றன.

    நீங்கள் பிரியா என மட்டும் குறிப்பிட்டூள்ளதால் உங்களை அடையாளம் புரிந்து கொள்ள இயலவில்லை.

    எனது கைபேசிக்கு அழையுங்கள். நன்றி.

    கைபேசி எண்- 93458 12080, 94447 76208

    பதிலளிநீக்கு
  27. ஐயா, வணக்கம்..

    புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வழிகள் இருக்கின்றனவா??..(மனக்கட்டுப்பாட்டை தவிர)..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  28. என் பெயர் சர்மிளா எனக்கு அடிக்கடி தலைபாரம் முகம் காது எல்லாம் வலிக்குது ஏதோ பிடித்து இருப்பது போல் உள்ளது முகத்தில் உள்ள கண்ணம் வலிக்கிறது ஏதாவது இந்த வலிக்கு பதில் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  29. அன்பு சர்மிளா அறிவது,
    தமிழவேள் வணக்கங்கள்.
    நீங்கள் கூறுவதைப் பார்த்தால் தலையில் நீர்த்தேக்கம் உள்ளதாக தெரிகிறது. பதிவை நன்கு படியுங்கள். உள்ள செய்திகளை உள்வாங்குங்கள் செய்து பாருங்கள் நலம் பெறுவீர்கள் ஏதேனும் உதவி தேவையெனில் எனது கை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  30. தலையில் நீர்த்தேக்கம் போக என்ன வழி ஆவி பிடிக்கணுமா? மோர் குடித்தால் அல்லது லெமன் ஜீஸ் குடித்தால் தொண்டை வலிக்கிறது உடம்பு வலிகிறது சளி பிடிக்கிறது இதற்கு என்ன வழி

    பதிலளிநீக்கு
  31. தலையில் நீர்தேக்கத்தை எடுக்க ஆவி பிடிக்கணுமா? மோர், லெமன் ஜீ்ஸ் குடித்தால் உடனே தொண்டை வலிக்கிறது கை. கால், உடம்பு வலிக்கிறது இது ஏன் சளி போக என்ன வழி

    பதிலளிநீக்கு
  32. Thamizh vel sir I mailed to above mentioned mail i.d, but it got failed to reach, is the spelling is right sir?

    பதிலளிநீக்கு
  33. நன்றி. எழுத்துப் பிழை உள்ளது. வருந்துகிறேன். சரியான மின் அஞ்சல் முகவரி.

    எனது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்க. 9345812080
    அல்லது எனது மின்னஞைசல் முகவரிக்கு தங்களை பற்றிய விபரத்தை தெரிவிக்கவும். thamizhavel.n@gmail.com
    உதவுகறேன்.நன்றி
    அன்பை மறவா, தமிழவேள் நளபதி.

    பதிலளிநீக்கு
  34. iyya, maerkuria pathivil thirumathi regina avarkal eluthiya pathivukku pathil aliyunkal iiya.. intha prachanai enathu maganukkum ullathu.. aangilathil pathivai anupiyatharru manikkavum..

    பதிலளிநீக்கு
  35. அன்பு மோதி பாபா மற்றும் திருமதி. ரெஜினா அறிவது,

    தமிழவேள் வணக்கங்கள்.

    அதிக சூடு தான் சளித் தொல்லைகளுக்கு காரணம். உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள குளிர்ந்த நீரில் காலை, மாலை தலைகுளிரக் குளிப்பதும், இரவு விரைவாக உறங்கச் செல்வதும் உதவும்.
    பொருந்திய உணவை சுவைத்துண்பதும் முக்கியம். பால் போன்ற சீரண கோளாறுகளை உண்டாக்கும் பொருள்களைத் தவிர்க்கவும்.

    மிளகு 10ம், இரண்டுவிரலில் எடுக்குமளவு சீரகமும் உடைக்காமல் ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு குவளை நீர் ஊற்றி அதை அரைக் குவளையாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஆறிய பின் குடிக்கலாம். இது வயிற்றின் ஆற்றலை சீராக்கும், சளித் தொல்லையும் நீங்கும். தொல்லைகள் கடுமை நீங்கும் வரை இந்த கசாயத்தை பருகலாம் நலம் தரும்.

    தேவையெனில் எனது தொலைபேசியில் தொடர்பு கொள்க. தொலைவிலிருந்தே இறைவழி மருத்துவம் மூலம் எந்த நிலையிலும் சுகத்தைப் பெறலாம்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு
  36. iyya munpellam villayaduven ippolothu vegamaga oda kuda mudiyavillai iravanal mutchu vitta mudiyavillai daily tablet pottu than thungukiren sali rempa pidithu pogamattuthu irumal ah varukirathu doctor kitta pona 7 days nalla iruku apparam thirumpa vanduruthu ethume seiya mudila itharku marunde illaya pala per pala idea tharanga ellam try pantren no use rum drinks kuda try pannen ethum sari agala 6th month naraga vethanaya iruku nan smoke kuda panna matten ennaku ippadi mutchu vitta mudiyama iruku nan palaya mari sari aga ethathu marundu iruka

    பதிலளிநீக்கு
  37. எனது மின் அஞ்சல் முகவரி thamizhavel.n@gmail.com

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.