உடல் நலத்துக்கான விதி முறைகள்
இன்னும் சிறிது காலத்துக்குள் நம் நாட்டின் விழிப்புணர்வற்ற மக்கள் மிகப் பெரிய அழிவை சந்திக்க இருக்கிறார்கள்.அவர்களின் மிகப் பெரிய செல்வங்களான குழந்தைகளைத் தாங்களே கொன்றோம் என்று வருந்தப் போகும் காலம் வந்துகொண்டிருக்கிறது. ஆங்கில மருத்துவர்களும் தற்பொதய அறிவியலும் உலகின் சிந்திக்க மறந்த மக்களை வேகமாக இந்த நிலைக்கு இட்டுச் சென்று கொண்டுள்ளது.
அரசு பொது குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் சென்று பாருங்கள் குழந்தைகளின் நரகத்தை நேரில் பார்க்கலாம். எளிதில், வினாடிகளில் தீர்க்க கூடிய நோய்களுக்கெல்லாம் அறியாமையால் நவீன அறிவியல் செய்யும் கொடுமைகளை - கண்கொண்டு காண முடியாது.
ஆனால், ஆங்கில மருத்துவர்கள் பயம் அல்லது கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த இழப்பு வந்தாலும் உங்களை மக்கள் குறை சொல்லப் போவதில்லை.கடைசி உயிர் உள்ள வரை காசு பன்னலாம் அது உங்களுடைய வாரிசாக கூட இருக்கலாம். பரவாயில்லை உங்களுக்கு காசு தானே முக்கியம்.
நடுத்தர வயதில் இருக்கும் அனைவருக்கும் நம்மை நமது தாய் தந்தையர் எப்படி வளர்த்தார்கள் என்று தெரியும். நமது பெற்றோர்க்குத் தெரியாத விதிகளை நமது குழந்தைகள் - பேரக்குழந்தைகளின் மீது ஆங்கில மருத்துவம திணித்து வருகிறதே கவணித்தீர்களா?
அரசு ஊட்டி வளர்க்கும் ஆங்கில மருத்துவம் எனும் குழந்தை
இப்பொழுதெல்லாம் பிறக்கும் குழந்தைகளை குளிப்பாட்டுவதில்லை.முன்பு நம்மை நமது பாரம்பரிய நோயணுகாவிதிகளில் ஒன்றான எண்ணெய் குளியலில் இருந்து தடுத்த மருந்து வணிகர்கள், நமது பேரப்பிள்ளைகளை குளிக்கவே விடாது தடுக்கிறார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை சுடுநீரில் துணியை நணைத்து துடைத்தாலே போதும் என்கிறார்கள்
இப்பொழுதெல்லாம் பிறக்கும் குழந்தைகளை குளிப்பாட்டுவதில்லை.முன்பு நம்மை நமது பாரம்பரிய நோயணுகாவிதிகளில் ஒன்றான எண்ணெய் குளியலில் இருந்து தடுத்த மருந்து வணிகர்கள், நமது பேரப்பிள்ளைகளை குளிக்கவே விடாது தடுக்கிறார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை சுடுநீரில் துணியை நணைத்து துடைத்தாலே போதும் என்கிறார்கள்
பெரியவர்களும் ஆண், பெண் வேறுபாடின்றி வாரத்துக்கு ஒருமுறை வேண்டா வெறுப்பாக சுடுதண்ணீரில் குளிக்கிறார்கள். இன்னும் பலரும் தலைமுடிக்கான இளமை மற்றும் அழகுப் பூச்சை காரணம் வைத்து 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குளிக்கிறார்கள். பல இளைஞர்கள் தலையில் எண்ணை படுவதே தீபாவளிக்குத் தீபாவளி தான்.
நேரம் இல்லை என காரணம் சொல்லும் இவர்கள் அழ்கு நிலையங்களுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து இரசாயணங்களை உடலில் அப்பிக் கொள்ளத் தவறுவதில்லை. (500 வகையான இரசாயணங்களை பயன்படுத்துகிறார்களாம்) பல பேர் அழகு நிலைய சாம்பு வாஸ் மற்றும் பேஸ் பிளீச் தவிர முகம் கழுவுவது கூட இல்லை.
பலர் சோப்புகளையும், கிரீம்களையும், டியோடிரன்டுகளையும் வைத்து வேர்வைத் துளைகளை அடைத்து கொள்கிறார்கள் அதிலும் புத்திசாலிகள் இரசாயன நஞ்சான கிருமிக் கொல்லிகளை கலந்த சோப்பு அழுக்குகளால் தம்மை அடைத்துக் கொள்கிறார்கள்.
.இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களை அழகர்கள் என நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள்! என்பது தான். இந்த அழகர்களை லேசாக உரசிப்பார்த்தால் தெரியும் இவர்கள் எவ்வளவு அழுக்கு என்று.
உண்மையான மருத்துவர்கள் பார்த்தவுடன் சொல்லி விடுவார்கள் இவர்களின் உடல் நலமின்றி நாறிக் கொண்டிருப்பதை.
நமது முன்னோர்கள் உடல் நல்த்துக்கும், அழகுக்கும், சுகத்துக்கும் கற்றுத்தந்த ஆயிரமாயிரம் வழிகளை விட்டுவிட்டு இப்படி சிந்திக்காது கெட்டொழியும் மனிதர்களைப் பார்க்கையில் பரிதாபமாகத்தான் உள்ளது.
தகவல் தொடர்பு போன்ற பல நிறுவனங்களில் வேலைபார்க்கும் பலர் தனது விருப்பமில்லாவிட்டாலும் இந்த கேடுகளுக்கு ஆளாகிறார்கள். தலைக்கு எண்ணெய் வைத்தல், மருதானியிடுதல் இயற்கையான சாந்து பொட்டு வைத்தல், மஞ்சள் பூசுதல், பூக்களைச் சூடுதல், கொலுசுகள் அணிதல், மற்றும் உடல் நலத்துக்கு ஊறு விளைக்காத உடைகளை அணிவதற்கு தடை விதிக்கிறார்கள். கேடு விளைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் போன்ற அனைத்தையும் கட்டாயமாக்கியுள்ளனர்.
மனிதர்களின் அறிவிலிருந்து காப்பாற்று இறைவா
நான் சில மாதங்களுக்கு முன் திருத்தனி பக்கம் உள்ள சிறு கிராமத்துக்கு சென்றிருந்தேன அங்கு நண்பரின் வீட்டில் பிறந்து 70 நாட்களுக்கான குழந்தைக்கு உடல் நலமின்றி இருந்த்தை சொன்னார்கள். கடும் வலிக்குறிகளுடன், சளித்தொல்லைகளுடன் மூச்சுத் தினறலுடன் குழந்தை இருந்து. அங்கிருந்த இரண்டு முதியபெண்களிடம் என்னம்மா இப்படி வைத்திருக்கிறீர்கள்? தினமும் உரை மருந்துகள் கொடுக்கிறீர்களா? எண்ணெய் தேய்த்து ஊற்றுகிறீர்களா? என்றேன். அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை அளித்தது.
அதற்க்கு அவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்தவாறே அதெல்லாம் இல்லப்பா அவுக இங்கிலீசு வைத்தியம் தான் பார்பாக என கூறினார்கள்.
என்ன இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க நீங்க எங்களை இப்படித்தான் வளர்த்தீர்களா? என கடுமையாக கேட்டேன்.
என்னப்பா சொல்லுறது, பிள்ளை இந்த 70 நாளைல இரண்டு மூண்று நாள் தான் குளிப்பாட்டி இருக்கா. டாக்டர் சொல்றார்னு கண்ட கண்ட மருந்தெல்லாம் குடுக்கறா. டாக்டர்ட அடிக்கடி தூக்கிட்டு ஓடறா, ஆனா பிள்ளை தான் இப்படி சீக்கா இருக்கு என்றார்கள் விரக்தியாக. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டோம். இதற்க்கு மேல் சொன்னா எங்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்றார்கள்.
குழந்தையின் பெற்றோர் நாங்க டாக்டர் சொல்றததான் செய்யறோம். எவ்வளவோ மாத்திரை மருந்து தந்தாச்சு என்றனர். டாக்டர் குளிக்க வைக்க கூடாது 10 நாளைக்கு ஒருதடவை சுடு தண்ணீரில் துணியை நணைத்து தூடைத்தாலே போதும் என்கின்றார் எனவே நாங்கள் இது வரை 3, 4 முறைதான் குளிப்பாட்டியிருப்போம் ஆனாலும் சளி விடலை என்றனர்.
அடுத்த சில நாள் சென்று இராமநாதபுரத்தின் அருகாமை கிராம நண்பர் தொலைபேசி அழைப்பில் தனது குழந்தையும் இந்த நிலையில் உடல் நலம் இன்றித் தான் உள்ளது அதற்கும் ஆங்கில மருத்துவர்களின் வழிமுறைதான் காரணம் என்றார். இப்பொழுதெல்லாம் கிராமங்களில் நகரத்தை விட ஆங்கில மருத்துவர்களின் பாதிப்பு அதிகம் என்றார். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை, எப்படியோ போகட்டும் என்றார் அந்த சித்த மருத்துவம் தெரிந்த நண்பர்.
மருந்து வியாபாரிகளின் விளம்பரங்களும், அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற சுயநலமும், விழிப்புணர்வை அழிக்கும் சிந்தனை தேவையில்லா கல்வியும் நல்லதொரு தமிழ் அறிவியல் வழிவந்த சமூகத்தை அடிமையாக்கி அழித்து விட்டது.
நிறைய வீடுகளில் முதியவர்கள் இரவு 11.30 வரை சீரியல் பார்க்கும் இரகசியம் இது தான். இவர்களது அறிவுச் செல்வத்தைப பயன்படுத்தும் வாய்ப்பை நமது நாகரீக இளம் சமுதாயம் இழந்துவிட்டது. தங்களின் பிழைப்புக்காகவும், தங்களின் தனிமையை மறைக்கவுமே முதியவர்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கி விட்டார்கள்.
இப்போதய வாழ்க்கை முறை – மருத்துவமுறை எவ்வளவு கொடுமையானது என தெரிந்தும் நம்மை திருத்த முயலாதிருப்பது ஏன்? வாக்கிலே திருந்தாத கழுதையை போக்கிலே விட்டுத் திருத்த வேண்டும் என்பதாலா?
சிறிது நிதானமாக பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களது நிணைவுகளைத் தூண்டினால் மிக அற்புதமான அறிவியல் மருத்துவத்தைப் பெறலாம்.
முன்பு வீட்டுப் பெரியவர்கள், ஊர் மருத்துவச்சிகள் பேறுகாலத்தில் உதவி செய்து சுகப் பேறுக்கு உதவுவர். எப்போதாவது நடக்கும் சிக்கலான மகப் பேறுகளை அவர்கள் மிக எளிதாக சமாளிக்கும் முறைகள் வியக்கத் தக்கது. எனது அப்பாவின் அம்மா இந்தமாதிரி சிக்கலான பல பேறுகாலத்தை மிக எளிதாக்கி தந்த கதைகள அவர்கள் மறைந்து பல காலமாகியும் எங்கள் ஊரில் பேசப்படுவதை காணலாம். பேறுகாலங்களில் தாய்க்கு வரக்கூடிய அனைத்து இன்பங்களையும் எளிதாக்கித் தந்தவர்கள் நம் முன்னோர்.
இப்பொழுது சுகப் பேறு என்ற வார்த்தையையே பேறுகால நேரத்தில் கூட கர்பம் தாங்கும் பெண்கள் கேட்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அவர்களை நல்வார்த்தை கூறி ஊக்கப்படுத்தி நலப்படுத்துபவர்கள் அறிதாகி விட்டது. ஆங்கில மருத்துவத்துக்கு கர்ப்ப பை குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாததால் தான் கர்ப்ப பை சார்ந்த நோய்களுக்கு மருத்துவம் பார்க்க ஆங்கில மருத்துவர்களுக்கு தடை இருந்தும் (இந்திய மருத்துவ மற்றும் அழகு சாதனம் பற்றிய சட்டம் செடயூல் J 51 ன் படி) அது மக்களுக்கு அறிவுறுத்தப் படாததால்- மக்களுக்கு மறைவானதாக உள்ளதால் அந்த மருத்துவத்தை நம்பி தனது அதிஉன்னதமான பேறுகால சுகங்களை இழந்து தமது உடல்நலத்தையும் குழந்தைகளின் நலத்தையும் பெறும் பொருட் செலவு செய்து அழித்துக் கொள்கிறார்கள்.
அறுவை செய்து குழந்தையை எடுத்துக் கொண்ட தாய்மார்கள் வாழ்நாள் முழுவதும் படும் துன்பங்களை குறித்த விழிப்புணர்வு இல்லை. அறுவை செய்த புண்ணின் வலி தனது வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற நிலை பற்றிக் கூறி அதை வேண்டாம் எனச் சொல்லும் பாதிக்கப்பட்டோர் இருக்கிறார்களா?
உடலின் சத்தியோட்டம் பற்றி இம்மியும் அறியா ஆங்கில மருத்துவர்கள் அறுப்பதால் அடி வயிற்றில் உள்ள வர்ம –அக்குபஞ்சர் புள்ளிகள் –சத்தி நிலைகள் பாதிக்கப் படுவதால் அறுவைக்கு உட்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் பெறப் போகும் துன்பத்துக்கு இவர்களும் தான் காரணம்.
நிற்க, முன்பு குழந்தை பெற்ற வீடுகளில் காலையும், மாலையும் குழந்தைகளைக் குளிப்பாட்டத் தேவையான தண்ணீர், தாயார் கைப்பட அரைத்துச் செயத மருந்துகள், கலப்படமில்லா எண்ணை, துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு, ஊர் மருத்துவச்சி அல்லது முதிய அனுபவமுள்ளவர்களுக்காக காத்திருப்பர் கூடவே அதை வேடிக்கை பார்க்கவும் குடும்பத்தினர் சிலர் காத்திருப்பார்கள்.
நேரத்துக்கு வரும் மருத்துவச்சி அன்புடனும் நுட்பமான அறிவுடனும் லாவகமாகக் குழந்தையைக் குளிக்க வைக்கும் அழகே-அறிவே தனி தான். எண்ணெய் தேய்த்துக் கண்கள், காதுகளில் எண்ணெய்கட்டி, இயற்கையான வாசனை தரும் மருந்துப்பொடி தேய்த்து தட்டித் தடவி பிடித்துவிட்டு தலையை உருட்டித் தடவி தலைக்கு –குழந்தைக்கு மறு உருவம் கொடுக்கும் பிரம்மாவே அவர்கள்தான்.
குழந்தைக்கு குளிப்பாட்டி பின் சளியை லாவகமாக விரலாலோ உறிஞ்சியோ நீக்கி பின் உரை மருந்து கொடுத்து படுக்கையில் கிடத்திவிட்டுப்போனால் குழந்தைகள் பல மணிநேரம் அழகாகத் தூங்கும். தன்னைக் கவணித்த மருத்துவச்சியையும் வாழ்நாள் முழுதும் வணங்கும்.
இவர்களுக்கும் தற்கால நர்ஸ்களுக்கும் தேவதைக்கும் பிசாசுகளுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது என்பதை எனது அனுபவங்களில் பார்க்க முடிகிறது. டாக்டர்களுக்கு வரும்படி வரவேண்டும் என்பதற்காகவும் தனக்கு அன்பளிப்புக்காவும் இவர்கள் நடந்து கொள்ளும் முறைகள் மன்னிக்க முடியாதது.
குழந்தைகள் இருக்கட்டும் பெரியவர்களாகிய நாம் தலைக்கு குளிக்காவிட்டால் ஏற்படும் உடல் மன நோய்களைச் சொல்லி முடியாது. ஆண்களானால் ஆண்மைக் குறைவும் பெண்களானால் பெண்மைக் குறைவும் உறுதியாக ஏற்படும்.
பெண்களுக்கு முகப் பருவும், மீசை முளைத்தலும், தலையில் பொடுகு உருவாகுதலும், வெட்டை அதிகமாகி அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மாதவிடாய் வராது தடைப்படுதல், மூட்டு வலிகள் பிடறி வலி, தோள் மற்றும் முழங்கைவலி, சிறுநீர்ப் பைக் கற்கள், பித்தப் பைக் கற்கள், உடல் சோர்வு, உடல் எரிச்சல், நீரழிவு, கண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் என ஆயிரம் ஆயிரம் உடல் தொல்லைகள் வரும். ஆண்களுக்கும் இதுவே நிகழும்.
இதற்க்கு நீங்கள் எடுக்கும் ஆங்கில மருந்துகளும், அவர்கள் வைக்கும் புதுப்புதுப பெயர்களும், பத்தியங்களும், மன நோய்களை தரும். சிறிது சிறிதாக உறுப்புகளை அறுத்து கொடுப்பதுடன் உயிரையும் பணத்தையும் இழக்க வேண்டியது தான் முடிவு.
நமது தலையிலேயே முக்கிய புலன் கருவிகள் அனைத்தும் உள்ளது. உடலுக்கு மட்டும் நீர் ஊற்றும் போது நமது உடலின் அனைத்து வெப்பமும் தலைக்கேறி மூளையையும் புலன் கருவிகளின் நுண்ணிய அமைப்புகளையும் வெகுவாக பாதிக்கும். உடன் தலையைக் காக்க நமது தற்காப்பு அமைப்பு தலையில் நீர் மூலக தன்மையை அதிகம் உருவாக்கி நமது தலையைப் பாதுகாக்க முயலும் இவ்வாறு உருவாகும் அதிக நீர்ப் பொருளே தலையில் சைனஸ் தொல்லைகளுக்கும் காரணம். நன்கு குளிர தலைக்குக் குளித்தாலே தலையில் உள்ள நீர்த் தன்மை தேவை இல்லாத்தால் நீங்கி –வெளியேறி சுகம் கிடைக்கும்..
ஆனால், இந்நிலையில் வரும் வலி மற்றும் துன்பங்களுக்காக ஆங்கில மருத்துவத்தை நாடுவோர் அந்த மருத்துவர் கூற்றுப்படி உடல் குளிர்ச்சி தான் சைனஸ்க்கு காரணம் என கருதுவதால் எல்லா வகைகளிளும் தனது உடலை சூடாக்கிக் கொள்கின்றனர். நோய்த் தன்மை முற்றிக் கொண்டே போகிறது. (தலைக்கு குளிப்பதில்லை, பழங்கள் சாப்பிடுவதில்லை, நெய், ஆட்டிறச்சி, பச்சைப்பயறு பயன்படுத்துவதில்லை) சூடான தண்ணீர் குடித்தல், சூடான நீரில் உடம்புக்கு மட்டும் குளித்தல, கோழிக்கறி சாப்பிடுதல்,புளிப்பு அதிகம் சேர்த்தல், இட்லி, தோசை போன்ற மாப்பண்டங்கள் பயன்படுத்தல், என எல்லாமே தவறாகச் செய்கிறார்கள்.
என்றாவது குளிக்கும் போது அல்லது ஏதாவது காரணத்தால் உடல் சத்தி தன்னை குணப்படுத்திக் கொள்ள முயலும் போது - உடல் தன்னைக் காத்துக் கொள்ள தலையிலிருந்து நீரை கண்கள் மூக்கு வழியே நீராக அல்லது தும்மலாக வேளியேற்றினால், அப்போதும் தலையில் நீரிறங்கிடுச்சு, சளி பிடிச்சுருச்சு என கூறி ஆங்கில நஞ்சுகளை மருந்துகளாய் நினைத்து உட்கொள்ள ஆரம்பித்து உடலின் தற்காப்பு ஆற்றலை ஆரம்பத்திலேயே சாகடித்து விடுகிறார்கள்.
பிறகு, மூக்கு எலும்பு வளைந்துள்ளது. அறுவை வேண்டும். தலையில் நீர் தேங்கிடுச்சு உறிஞ்சி அல்லது அறுத்து எடுக்கனும் எனும் போது எப்படித்தான் நம்புகிறார்களோ.
மேலும் மூலம், பவுந்தரம், சீரணக் கோளாறுகள், ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறுகள்,கல்லீரல், பித்தப்பை கோளாறுகள், என நீண்டு கொண்டே போகிறது.
இது போன்ற விசயங்களை எழுதுவது மனதுக்கு பிடிக்கவில்லை தான். ஆனால், தனக்கு முன்னால் இது போல் கேடுகள் நடப்பதைப் பார்த்தும்- தனக்கு கேடு வந்த பின்னும் உணராத மனிதர்களுக்கு சொல்லித்தான் புரியுமா? என்ற கேள்வியையும் மீறி எழுதுகிறேன்.
இல்லை நண்பரே, எனது மருத்துவமணைக்குப் பக்கத்தில் உள்ள அழகு நிலையம் நடத்தும் கேரளத்துப் பெண் கேட்கிறார். நீங்கள் தான் அதிசயமாக குளியல் பற்றி பேசுறிங்க தமிழ்நாட்டுப் பெண்கள் யாருமே தினம் குளிக்கிற பண்பாடே எனக்குத் தெரிந்து இல்லையே என்கிறார்.
இவ்வாறு தினம் குளிக்காத மனிதர்கள் தங்கள் குழந்தைகளையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் குளிக்க விடுவதில்லை.
எனது மருத்துவமனை அருகில் எனது குழந்தைகள் படிக்கும் பள்ளி உள்ளது. இது கிறித்துவ நிர்வாகத்தால் இயங்கும் பள்ளி. இங்கு சேவை புரியும் சகோதரி இரண்டு மாதம் முன்பு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்.
தனக்கு மூளைக் கட்டிக்காக 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் கடும் தலைவலி, மூட்டுவலிகளில் துன்பப் படுவதாகவும், மற்றும் தனது குறிகளில் கடும் அரிப்பு மற்றும் வெள்ளைப் படுதல் மிக அதிகமாகவும் உள்ளதாக குறிப்பிட்டார்.
பழக்கங்களைக் கேட்டபோது பத்து நாட்களுக்கு ஒருமுறை குளிப்பதாகக் கூறினார். இரவுத் தூக்கமில்லை உடல் முழுவதும் ஒரே எரிச்சல் என்றார்.
இவருக்கு இறைவழி மருத்துவம் பார்த்தபின் உடல் வலிகள் உடன் நீங்கியதால், ஆங்கில மருந்துகளை விட்டுவிட்டு என்னிடம் வைத்தியம் பார்க்க சம்மதித்தார். ஆனால் தான் வைத்தியம் பார்ப்பது யாருக்கும் தெரியக் கூடாது என்றார். பெயரைக் கூட சொல்லவில்லை.
அவர் உடலிலும் மனதிலும் கிடைத்த நல்ல மாற்றங்களை தக்க வைக்கும் வழிகளாக நான் கூறினேன்,
நான் உங்களுக்காக, உங்களுக்குள் இருக்கும் இறையாற்றலிடம் வேண்டிக் கொண்டதால் எனது விருப்பத்துக்காகவும் நீங்கள் நன்மையை நாடியதன் பலனாகவும் தற்போது உங்களுடைய உடல் துன்பங்கள் நீங்கியுள்ளன. இந்த வினாடியிலிருந்து உங்களுக்குள் உள்ள இறையாற்றலிடம் உங்களைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். உங்கள் தற்காப்பாற்றல் உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் உங்கள் உயிராற்றலுக்கு உதவி செய்யுங்கள். இறை விதிகளை மதியுங்கள்.
காலை உதயத்துக்கு முன் எழுந்துகொள்ளுங்கள். 6.00 மணிக்குள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நன்கு உடலும், மனமும் குளிர குளியுங்கள்.
8.30 மணிக்குள் பொருந்திய உணவைச் சுவைத்துச் சாப்பிடுங்கள்
மூன்று வேளையும் உணவுக்கு முன் கால் வயிறு அளவு, இறைவன் தரும் நேரடி உணவான இனிப்புள்ள (நஞ்சு கலப்பு இல்லாத) பழங்களை நேரடியாக நன்றாக சுவைத்து உண்ணுங்கள். அதற்க்கு மேல் கிடைக்கும் - பொருந்தும் உணவுகளைக் கொள்க.
மதிய உணவை பசிவரும் போது உண்ணுக. மாலை முடிந்தால் மீண்டும் ஒரு குளியல் நல்லது. இரவு உணவை 8.30 க்குள் முடித்துக் கொள்க.
இரவு 8.00 மணிக்கு மேல் கண்களுக்கு வேலை தராதீர்கள்.
9.00 மணிக்குள் உடலுக்கும் மனதுக்கும் அமைதியையும் சமாதானத்தையும் வேண்டி உங்களுக்குள் உள்ள இறையாற்றலிடம் கேட்டுக் கொண்டு அமைதியாக தூங்குங்கள்.
தூக்கத்தில் ஏதேனும் இடையூறு எனில் சிறிது நேரம் இறையாற்றலிடம் நீங்கள் மன்னிப்பு வேண்டி கேட்டுக் கொள்ளுங்கள் தூக்கம் நன்கு வரும். காலையில் எழும் போது புதுத் தெளிவுடன் எழுவீர்கள்.
முக்கியமாக பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ நிணைக்காதீர்கள், நடத்தாதீர்கள்.
உடலில் ஏதேனும் துன்பம் வந்தால், அது நமக்குள் உள்ள நோய்சத்தி- நம்மைக் காக்க போராடிக் கொண்டுள்ளது என உணருங்கள். அதனை அழித்து விடாது, அதைப் புரிந்து கொண்டு, நம்மால் முடிந்த வரை அதன் செயல்களுக்கு உதவினால் அது தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு, நமக்கு நன்மையைத் தந்துவிட்டுச் செல்லும்.
தன்னை அறியாத மனிதன் பிறருக்கு உதவ முடியாது. உங்களைக் காக்கும் பொறுப்பை உங்களுக்குள் உள்ள இறையாற்றலிடம் ஒப்படைத்து நன்மை பெறுக. வணிக சார்புடைய மனித அறிவிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். என இது போல் சில உடல் நலத்துக்கான குறிப்புகள் கூறினேன்.
இதற்கு அவர் கூறியது நான் முதலாவதாக ஆங்கில மருந்துகளை கைவிட்டு உங்கள் மருத்துவ முறைகளை பயன் படுத்துவதை என்னுடன் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் உங்கள் முறைகளை கேட்ட பிறகு- உங்களிடம் சிகிச்சை பெற்ற பின் உடல் தொல்லைகள் நீங்கி உடலும் மனமும் சுகமாக உணர்வதால், எனக்கு நான் சுகமாகிவிடுவேன் எனும் நம்பிக்கை எனக்குள் பிறந்து விட்டது. எனவே உங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும், நீங்கள் சொல்லுவது போல தினமும் தலை குளிப்பது என்பது இயலாது ஏனென்றால் என்னுடன் விடுதியில் இருப்பவர்கள் மற்றும் விடுதி மாணவிகள என எல்லோருமே வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிப்பதே அதிகம். யாராவது தொடர்ந்து இரண்டு மூன்று நாள் குளித்து விட்டால் அத்தனை பேரும் சேர்ந்து மிரட்டியே (சுரம் வந்துவிடும், ஜன்னி வந்துடும், தலை வலி வந்துரும், சளி பிடிச்சுடும், தலையில நீர் இறங்கிடும் என) குளிக்க விடாது தடுத்து விடுவோம். நான் சிறு வயதிலிருந்து விடுதியில் தங்கி படித்தேன், வேலை செய்து வருகிறேன். இப்பொழுது 40 வயதாகி விட்டது இதுவரை நான் தங்கி இருந்த விடுதிகளில் தினமும் தலைக்குக் குளித்தவர்களைப் பார்த்ததில்லை என்றார். முன்பெல்லாம் இரண்டு நாளைக்கொரு முறை குளிப்போம் இப்பொழுது வாரம் ஒரு முறை என்றார்.
இரண்டாவது மருத்துவத்துக்கு ஆன பணத்தை எனது பெற்றோரிடம் கேட்டு பிறகு வாங்கித் தருகிறேன் என்றார். நான் உங்களுக்கு அதிகம் செலவு வைக்கப் போவதில்லை. எனக்கு கட்டணம் வேண்டாம். சிறிது பணம் மருந்துகளுக்கு தேவைப்படலாம் என்றேன். நீங்கள் தான் வேலை செய்கிறீர்களே இதை எதற்கு வீட்டில் கேட்க வேண்டும் என்றேன். என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு 20 அல்லது 25 சம்பளம் போட்டாலும், சகோதரிகளான எங்களுக்கு கையில் கொடுப்பது வெறும் 250 ரூபாய் தான் என்றார். எங்களுக்கு தேவையானதை வீட்டில் இருந்து தான் பெற்றுக் கொள்வோம் என்றார். இது எனக்கு புதிய செய்தி. எனது நண்பர்களிடம் கேட்ட போது ஆமாம் உண்மை தான் முன்பெல்லாம் 50 ரூபாய் வாங்கினார்கள் இப்பொது 250 ரூபாய் வாங்குறாங்க போலிருக்கு என்றார் தனது விடுதி அனுபவத்தைக் கூறி.
வெளியில் நாங்கள் அமைதியான தேவதைகளாக நடித்தாக வேண்டும் எங்கள் விடுதிகளில் கண்ணீரும் கவலையுமாகத் தான் காலம் போகிறது. நீங்கள் சொல்லும் படியாக மனதை அமைதியாக வைத்து கொள்ள முடியாது என்றார்.
என்ன செய்வது எல்லாவற்றுக்கும் இறையாற்றலிடம் பொறுப்பேற்படுத்துங்கள் எனக் கூறி அவ்வப்பொழுது ஊக்கப்படுத்தி வந்தேன். தற்போது இரண்டு மாதங்களாக மருந்து மாத்திரைகள் இல்லாது நல்ல முறையில் உடலும், மனமும் தேறி வருகிறார்.
சிறிய விசயங்கள் என உடல் நல விதிகளை புறக்கணிப்பது சரியல்ல.
உலகத்தையே கொடுத்தாலும் நமது உடல் நலத்துக்கு –மன அமைதிக்கு ஈடில்லை என்பதை புரிந்து வாழ்வோம்.
எப்படி அய்யா கருத்துக்கேற்ற படங்களை தெரிவு செய்கிறீர்கள். தலைக்கு குளிப்பதில் இவ்வளவு விசயம் இருக்கா?தங்கள் இடுகை அறியாமையில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு விழிப்பணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை. தொடர்க தங்கள் நற்பணி...
பதிலளிநீக்குஎன்னை போன்ற மூடர்களுக்கும் புரியும் வகையில் ஆன்மீகத்தை கொன்டு சேர்கும் உங்களுக்கு
பதிலளிநீக்குஎன்னுடைய பனிவான வனக்கம்,உங்களை நேரில் சந்திகக்க விரும்புகிறேன், நான் தற்பொழுது சென்னையில் வேலை செய்து வருகிறேன் கணினி
வரைகலை துறையில் உள்ளேன். எனது மின்அஞ்சல்முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
rajasekarmvn@gmail.com
I visited the healer on wednesday 2nd mar 2011. I have started taking head to toe wash/bath and feel much better now. Neck ache is totally gone. I feel very cool and even my son does not complain of head aches after making him have head to toe bath since then. I get a very good night's sleep and there are no dream/disturbances i can remember in the morning. Thanks a lot
பதிலளிநீக்கு'தான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்' கருத்துரையில் தங்கள் அனுபவத்தை கூறியது வரவேற்கத்தக்கது.வாழ்த்துக்கள் திருமதி.சித்ரா.
பதிலளிநீக்குdaily thalaicku kulippathu ithanai mukkiyama thanks follow panna poren.
பதிலளிநீக்கு