செவ்வாய், 14 டிசம்பர், 2010

சித்தமருத்துவம் இவர்களிடம் இல்லை.

விஜய் தொலைக்காட்சியில் நீயா? நான? பார்த்தேன். சித்த மருத்துவத்தை மக்கள் ஏன் நாடுவதில்லை. அதன் சிறப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள வழி என்ன என விவாதித்தனர்.

 இது குறித்த எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேற்கண்ட விவாத்தில் கலந்துகொண்டவர்களில் பொரும்பான்மையோர் தங்களுடைய நோக்கம் லேகியம் விற்பதாகவோ, இரசமணி எனும் பெயரில் ஈய மணி விற்பவர்களாகவோ இருந்தது கண்டேன்.

பொதுமக்கள் சார்பாக கல்ந்து கொண்டவர்களும் பொதுவாக தமக்கோ பிறர்க்கோ நன்மை நாடுபவர்களாக இல்லை. வீண் பெருமையையும், தங்கள் அறியாமையையும் ஊரறியச் செய்ய வந்தவர்களை போன்றிருந்த்து அவர்கள் பேச்சு.

சிறப்புப் பேச்சாளர்கள் இவர்களுடைய சிறந்த பிரதிநிதிகள் என்பதை – மிகத் தெளிவாக தங்கள் அறியாமையை -பொறுப்பின்மையை வெளிப்படுத்தினர்.

மொத்தத்தில் இப்பொழுதுள்ள மருத்துவர்கள், மக்கள், மக்களுக்கு வழிகாட்டுபவர்கள் நன்மையை நாடுபவர்களாக இல்லை என்பதை இந் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டியது.  
சித்த மருத்துவத்தின் குறைகளாக பொதுமக்கள் சார்பாக குறிப்பிடப் பட்டவை சில. (எனக்கு ஞாபகத்தில் இருந்த்தை எழுதுகிறேன்.)
1.       மருந்துகள் குப்பிகளில் அடைக்கப் பட்டு ஆங்கில மருந்துகள் போல எடுத்தேன் போட்டுக்கொண்டேன் என இருந்தால் நல்லது.
2.       பல்வேறு இடங்களில் பல்வேறு மூலிகைகளை ஒரே விதமான நோய்க்குப் பயன்படுத்துவது குழப்பத்தை தருகிறது.
3.       ஒவ்வொரு இடத்திலும் விலை வித்தியாசம் உள்ளது.
4.       நோய் பற்றிய விபரங்களைச் சேர்த்து வைப்பது இல்லை.
5.       விரைவில் நோய் குணமாவதில்லை.
6.       எல்லா இடங்களிலும்  மருத்துவமனைகள் இல்லை.
7.       உண்மையான மருத்துவர்களை அடையாளம் காண முடியவில்லை.
-          என்பன போன்றவற்றை குறையாகக் கூறினர்.
இதற்கு மருத்துவர் பகுதியில் இருந்து வந்த பதில்,
1.       இப்பொழுது பல்வேறு மருந்து நிறுவனங்கள் மருந்துகளைக் குப்பியில் அடைத்து விற்பனை செய்கின்றன. அவற்றைத் தான் நாங்கள் எழுதித் தருகிறோம்.
2.       இப்பொது ஒரே விதமான மருந்துகள் மஞ்சள் காமாலைக்குக் கூட 50க்கு மேற்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது வாங்கிப் பயன்படுத்துங்கள்.
3.       அரசு மருந்து செய் நிலையங்களில் இருந்து வரும் மருந்துகளை பயன்படுத்தலாம். விலை சரியாக இருக்கும்.
4.       நோய் பற்றிய விபரங்களை நாங்கள்லாம் முறையா சேர்த்து வைக்கிறோம் என்றனர் சிலர்.
5.       இது பற்றி விளக்கம் சொல்லவில்லை. ஏற்றுக் கொண்டதாகக் கருதலாம்.
6.       எல்லா கிராம மருத்துவ மனையிலும் சித்த மருத்துவர் வேண்டும் என்ற கருத்துக்கு கைதட்டல் தான் பதில்.
7.       உண்மையான மருத்துவர்னா கிரேடு 1 (பி.எஸ.எம்.எஸ் போன்ற படிப்பு முடித்தவர்) கரேடு 2 (70.களில் சிறிது காலம் கொடுத்த சில ஆர் எம்,பி கள்) இவர்கள் மட்டும் தான் சித்த மருத்துவர்கள் மற்றவர்கள் எல்லாம் பொலிகள். முன்பு பாரம்பரிய மருத்துவர்கள் எல்லாம் எழுதிவைத்ததை புத்தகமாக்கி விட்டார்கள். அதை பாடமாக்கி விட்டோம் இதற்கு மேல் அவர்கள் (பாரம்பரிய மருத்துவம்) தேவை இல்லை என விள்க்கமும் கொடுத்தனர்.

என்னுடைய புரிதலின் படி இவர்கள் சொல்வது அல்ல சித்த மருத்துவம்,
சித்த மருத்துவம் என்பது மிக எளிமையானது. எளிய மக்களுக்காக சான்றோர்களால் தொகுத்து, எளிமையாக்கிக் கொடுக்கப்பட்ட இறைஞானங்களை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையே சித்த மருத்துவம்.
இது தனியுடைமை ஆக்க முடியாதது. வணிகர்களின் சார்பற்றது. நம் நாட்டு மக்கள் அனைவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத வகையில் அவர்களது உணவோடும், உணர்வோடும் வாழ்க்கை நெறிகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது சித்த மருத்துவம்.
மனிதர்க்கு வரும் எந்த ஓர் நோயையும் நம் வீடுகளில் சமையலுக்குப் பயன்படும் பொருள் மற்றும் நமது வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகளைப்  பயன்படுத்தியே முழுமையாகத் தீர்க்க இயலும் வகையில் ஆழ்ந்த, விரிந்த அறிவை உடையவர்கள் நம் நாட்டு மக்கள்.
நோயணுகாவிதிகளை தான் உள்ள சூழலுக்குத் தகுந்த்து போல் உருவாக்கி தனது வாரிசுகளுக்குப் பழக்கப் படுத்தியுள்ளார்கள் நம் மக்கள்.
பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு மூலிகைகளை, மருத்து செய் முறைகளைப் பயன் படுத்துவது நமது மக்களின் சிறப்பு அறிவியல் அனுபவ அறிவின் விரிவை அல்லவா குறிக்கிறது.
பல்லாயிரம் கோடி முதலீட்டில் மொத்தமாக தயாரிக்கும் மருந்துகள் வெளி வருவதற்க்கு முனபே அம் மருந்துகள் வியாபாரம் குறையால் காப்பதற்க்கான முறைகளையும், அந்த வியாபாரத்தால் வரும் புதிய நோய்களால் தமது வளத்தைப பெருக்கும் வழிகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் தற்கால அறிவியலாளர்கள உழைக்கிறார்கள் தவிர மக்கள் நலம் காக்க இல்லை என்பது சிறிது சிந்திப்பவர்களுக்கு கூட தெரிந்துவிடும்.
இந்த மனித நேயமற்ற வணிகர்களின் சரக்கை மக்கள் தலையில் கட்டுவதற்கான அனைத்து நுட்பங்களையும் கல்வியென கற்றுள்ள இந்த  ஆங்கில மருந்து வியாபார உதவிகள் (மருத்துவர்கள்!) தங்களது நடிப்பாலும், உத்திகளாலும் மக்களின் மருத்துவ அறிவை மழுங்கடிப்பதையே தங்கள் வியாபாரத்துக்கு அடிப்படை என மிக நன்றாக அறிந்துள்ளார்கள்.
இந்த வணிக உதவிகளை நம்பி தாங்கள் சிந்திப்பதை விட்ட மனிதரகளிடம் இருந்து எண்ணெய் குளியலில் ஆரம்பித்து இப்போது குளிப்பதையே கூட தடுத்துவிட்டனர். இவர்கள் வருமானத்திற்காக தம்மை நோயாளிகளாக்குவதை உணரா பேதைகள் இந்த படித்த மேதைகளின் வாக்கை வேத வாக்காக எண்ணி கெட்டழிந்தும் பின் இதனால் வரும் நோய்களுக்கும் இவர்களையே சரணடைகிறார்கள்.
உமிழ்நீரைத் தான் அமுதம் என்பர் சான்றோர். இந்த அமுதம் கலவாது வயிற்றுள் செல்லும் எதுவும் முறையாக சீரணமாகாது. தண்ணீருக்கும் உணவுக்கும் இது விதி எனும் போது மருந்துகளுக்கும் அது தானே விதி.
இதையறிந்த முன்னோர்கள் உடல் நலத்துக்கான மருந்துகளை தகுந்த அனுபானங்களில் (துணை மருந்துகளில்) கலந்து சுவைத்து உண்ணுத்ல் வேண்டுமென்றார்கள்.
எந்த மருந்தும் நேரடியாக நோயைத் தீர்க்காது மருந்துகள் நமது உடலின் தற்காப்பு ஆற்றலைத் தூண்டி விடுக்ன்றன அவ்வளவு தான் மருந்துகளின் தேவை. துணை மருந்துகள் உடலின் எந்தப் பகுதியில் ஆற்றல் தூண்டப்பட வேண்டும் என்பதை உடலுக்கு அறிவிக்கத்தான் பயன்படுகிறது. இது தெரியாத குமரி மைந்தர் ரொம்பத்தான் கோப்பட்டுக் கொள்கிறார். அவருக்கு கொஞ்சம் நல்ல எண்ணம் இருந்தாலும் சித்த மருத்துவத்தை முன்னேற்ற இவ்வளவு அவ சரம் கூடாது உடம்பு கெட்டுடும் ஐயா.
உடலில் ஏதாவது தொல்லை என்பது நமக்குள் தற்காப்பு ஆற்றல் நோய் சூழலை நீக்க இயங்க ஆரம்பித்து விட்டது என்பதற்க்கு அடையாளமே. ஆங்கில மருந்துகள் அனைத்தும் நமது உடலின் தற்காப்பு ஆற்றலை அழிப்பதன் மூலம் அத்தகைய துன்பங்களை நாம் அறியாமல் தடுக்கிறது. ஆதாவது நமது உடல் நோய்ச் சூழலில் இருந்து விடுபடுவதைத் தடுத்து (ஆங்கில மருந்து எனும் கொடிய விசத்தை தனிக்க) நமது மதிப்பதற்கரிய தற்காப்பு ஆற்றல் திசைதிருப்பி விடப் படுகிறது. அல்லது அழிக்கப்படுகின்றது.
இந்த விசத்தை நேரடியாக கொடுத்தால் உடல் ஏற்றுக் கொள்ளாது. எனவே தான் குப்பியில் கட்டி உள்ளே போடுகிறார்கள். நேரடியாக இரத்தத்தில் ஊசி வழியே திணிக்கிறார்கள்.
உடல் ஆற்றலுக்கு உதவும் சித்த மருந்துகளுக்கு இம் முறை (குப்பி, ஊசி) உதவாது.
இந்த விவாத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் சித்த மருந்துக் கம்பெனிகளுக்கு உதவிகளாகத் தான் நடந்து கொள்ளக் கற்றவர்கள். தங்கள் மரபுவழி மருத்துவ அறிவை மக்கள் பயன்படுத்தினால் வணிகம் பாதிக்கும் என அஞ்சுபவர்களாகத் தெரிகிறது.
மக்கள் பகுதியிலிருந்தவர்கள் கூறிய அனுபவ மருந்துகள் இவர்களை தூங்க விட்டிருக்காது, ‘இவ்வளவு விபரம் தெரிஞ்சிருக்கிறதால தான் மக்கள் நம்மட்ட இவங்க வரலை என புரிந்து கொண்டிருப்பார்கள்.
மக்கள் தமது மருத்துவ அறிவை மதித்து நமது மரபுவழி வாழ்க்கை நெறிகளைக் கைக் கொண்டால் தான், அவர்களுக்கு உதவும் சித்த மருத்துவர்களுக்கு வாழ்வு ஆங்கில மருந்து வணிகர்களின் உத்திகளைப் பயன்படுத்தினால் தாழ்வு தான் நிச்சயம்.
எந்த கம்பெனி மருந்து விலை குறைவு என தேடி திரிவதை விட்டு விடுங்கள்.
நாம் நமது மக்களின் மரபுவழி மருத்துவ அறிவைப் பெருக்கிக் கொள்வதும், உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள கூடியது என அறிந்து உடல் அடையாளம் காட்டும் தேவைகளுக்கு உதவுவதும். உடலின் தற்காப்பு ஆற்றலின் செயல்களைப் புரிந்து கொள்வதும். நோயணுகா விதிகளைப் பயில்வதும் செலவற்ற- நோயற்ற நல வாழ்வுக்கு வழி.
இதைவிட எளிய வழி படைப்பாற்றலை அதனருளால் உணர்ந்து இறைவழியில் நடப்பதே ஆகும்.
நேற்று தினமணியில் கை விரல் ரேகையை வைத்த உடன் நோயாளியின் மருந்தெடுத்த-தூன்ப வரலாற்றை-பணம் செலவழித்த பெருமையைக் காட்டும் மென்பொருள் தயாரித்துள்ளதாக செய்தி பார்த்தேன். மகிழ்ச்சி.
விருந்தும் மருந்தும் மூன்று நாள் என வந்தவர்கள் நாம். மாற்றம் தான் நிலையானது என்பது அறிவோம். நாடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நோயாளி தனது துன்பங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவர்கள் துன்பத்திலிருந்து விடுவித்துவிடக் கூடிய - அவர் சொல்லி முடிக்கு முன் குணப்படுத்தக் கூடிய நுட்பங்களை இறைஞானங்களாக பெற்ற சித்தர்களுக்கு பஞ்சமில்லை இந்த நாட்டில் அறிவீர்களா? இறைவழியில் பல்லாயிரம் பேர்களுக்கு தொடர்ந்து வினாடிகளிகளில் சுகம் அளிக்க முடிந்தவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும் கொம்பன் யார்? இவர்களுக்கு டாக்குமன்டேசன் எதற்கு.
நம் மக்களிடம் ஓர் நம்பிக்கை உள்ளது. சித்த மருத்துவர்களெல்லாம் ஆரோகயமாக இருப்பார்கள் வாழ்க்கையை அமைதியாகவும் முழுமையாகவும் வாழ்வார்கள் என்றும் கூறுவார்கள். உண்மைதான் தான் சான்றோர்களிடம் கற்றுக் கொண்டதைத் தான் கடைப்பிடிப்பதால், சாகாக் கல்வியை கற்க முணைவதாலும் அவர்கள் தேடலில் கிடைத்த பலனைப் பொறுத்து அவர்கள் வாழ்வு அமைதியாக அறிகிறோம்.
எனது குருநாதர்களில் ஒருவரான புலவர் அப்துல் மஜீது 105 வயதுக்கு மேல் நல்ல உடல் மற்றும் மனநிலையில் இறையாற்றலுடன் ஒன்றி வாழ்ந்தவர். அவரது கடைசி நாட்களில் அவரைச் சந்தித்த போது (நான் அவரைச்சென்று பார்க்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே பேச முடியாத நிலையில் உள்ளதாக கூறினர்)
அவர் மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற உணர்வு எனக்கோ அவருக்கோ இல்லை. அழகிய ஆரோக்யமான கண்கள் சிரிக்கும் கண்கள் சுற்றியிருப்பவர்கள் நான் இறந்து கொண்டிருப்பதாக நிணைக்கிறார்கள் நான் அடுத்த நிலை அடைந்துவிட்டேன் இவர்களுக்காக இப்படி ஓர் நடிப்பு என என்னுடன் பேசி சிரித்தது. அவரது உதட்டிலும் புன்னகை. நான் எப்பொழுதும் பார்த்திருந்த புலவரை விட மிக அழகாக உணர்ந்தேன். பக்கத்தில் அவர் துணைவியாரும், மகளும், என் உடன் வந்த நண்பர் முருகேசனும் அறியாத பல விசயங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.
நேரம் போனதே தெரியவில்லை. புலவர் மகன் கனடாவில் இருந்து வரவில்லை. அவன் வராத குறையை மருத்துவ வாரிசான நீ வந்தது நீக்கிவிட்டது அவர் இனி மகிழ்ச்சியாக பிரிந்து செல்வார் என்றார் அவரது துணைவியார். பிறகு அவர்களுக்காக புலவரை வாயால் பேச வைக்க விரும்பினேன்.
அவரிடம் ஐயா நீங்கள் மருத்துவ ஞானங்களை முழுமையாக அளித்தீர்கள் ஆனால் ஞான மார்க்கத்தில் எனக்கு நேரடியான பயிற்சிகள் கொடுத்ததில்லை. ஆனாலும் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல் பல இறையனுபவங்களும் இறைவழி மருத்துவ ஞானமும் கிடைக்க பெற்றுள்ளேன்.
இந்த விசயத்தில் எனக்கு உங்கள் நேரடியான தீட்சை தேவை என்றேன். இறையருளால் எல்லாம் பெறுவாய். இறையனுபவங்களில் நிலைத்து நில் என்றார். பின் சில மருத்துவ குறிப்புகளும் தந்தார். அவரது கடைசிக் காலம் என்பதை மறந்து விடைபெற்று வந்தேன். பிறகு என்னிடம் பேசிய பின் முடிவு வரை ஏதும் பேசவில்லை என்றனர். அது முடிவல்ல புதிய பாய்ச்சலாக உணர்கிறேன்.
நேற்று ஹெல்த் டைம் பழைய இதழில் தினத்தந்தியில் வந்த சேதியைப் படித்த ஞாபகம் வருகிறது. ஒரு நெடிய ஆய்வின் படி சாதாரண மனிதர்களை விட ஆங்கில மருத்துவர்கள் பத்து ஆண்டுகள் முன்னதாக செத்து விடுகிறார்கள் என்பதே அந்த ஆய்வின் முடிவு. ஆதாவது ஆங்கில மருத்துவர்களின் சராசரி ஆயுள் காலம் சாதாரண மணிதர்களை விட பத்து ஆண்டுகள் குறைவாம். இது குறித்த தினதந்தி குறிப்பை விரைவில் தேடிச் சேர்க்கிறேன்.
சித்த மருத்துவ துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ள பலரின் கடைசிக் காலங்கள் ஆங்கில மருத்துகளின் பக்கவிளைவாலும், அறுவைகளாலும் கோரமானதாக அமைவதை பார்க்க முடிகிறது. தனது மருத்துவ அடிப்படைக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படைக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள ஒற்றுமை தான் என உணராதவர்களாகவே சாகிறார்கள்.
இதை கேட்கும் போது ஒரு விசயம் ஞாபகம் வருகிறது. முன்பு நவீன விவசாயத்தை அறியாத மரபுவழி விவசாயிகள் இரசாயன உரத்தை தங்கள் நிலங்களில் பயன்படுத்துவதில்லை. அதிகாரிகள் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம் இவர்களை ஏமாற்றி வழிக்கு கொண்டுவர விவசாயிகளின் அனுமதி இல்லாமலே நமது படிப்பாளிகள் இரவு நேரத்தில் பயிரில் யூரியாவை தூவிவிட்டு வந்துவிடுவார்களாம் வந்து பார்க்கும் விவசாயிகள் பச்சை அதிகரித்துள்ளதால் இது நன்மையோ என எண்ணி இவர்களது வலையில் விழுந்து அழிந்து போன கதைகளை வேளாண்மை சித்தர் நம்மாழ்வார் கூறிக் கேட்டுள்ளேன்.
அது போலத்தான் மரபுவழி வாழ்க்கை முறைகளில் இருந்து நம் மக்களை தனது வியாபாரத்துக்குத் திருப்ப ஆங்கில மருத்துவமும் ஊர்த் தலைமைகளில் இருந்த கிராம மருத்துவர்களுக்கு ஆசை காட்டி போலி மதிப்பளித்து மயக்கி உங்களுக்கு இந்த அலோபதி மருத்துவத்தை சொல்லித்தாறோம் சில மருந்துகள் தருகிறோம் நீங்களும் ஊசி போடலாம் என ஆசைகாட்டி மோசம் செய்த்தன் வாயிலாகத் தான்  உள்ளே நுழைந்தது. பிறகு தான் வளர்ந்த பின் இவர்களைப் போலி மருத்துவர் என்றது. படித்த சித்த மருத்துவர்களை தனது தொழில் போட்டியால் போலி மருத்துவர் என கேவலப்படுத்திய ஆங்கில மருத்துவம் இப்போது தனது முகத்திரை நன்கு கிழிந்து சீர் செய்ய முடியாது போனதால் மீண்டும் தாங்கள் நன்மைக்காக வளர்த்த படித்த சித்த-ஆயுர்வேத யுனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை கையாளலாம் என்று சட்டம் இயற்றியுள்ளது. இது எப்படிச் சரியாகும்?.


  • சித்தமருத்துவம் இவர்களிடம் இல்லை. அது மக்களிடம் உள்ளது. விழிப்படைந்த மனிதர்களிடம் உள்ளது. அது மீண்டும் உலக மனிதர்களுக்கு பயன் படும் காலம் வந்துவிட்டது.




  

1 கருத்து:

  1. நண்பரே!தங்கள் இடுகை மிகவும் சிறப்புடையதாக அமைந்துள்ளது. இதைப் படிக்கும் உண்மையான சமுதாய ஆர்வலர்கள் தங்களுக்கு நட்பை அளிப்பர். தங்களின் கருத்தாழமிக்க அனுபவங்கள் பலரின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரப்போகிறது. உங்களின் தரமான சிந்தனை உண்மை நிலையை அறியத்துடிக்கும் அன்பு உள்ளங்களுக்கு உரம். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் சமுதாய தொண்டு.

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.