அன்புத் தமிழ் மக்களே,
முகநூலில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்க்கும் போது உலக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களை உருவாக்கி வரும் ஈழத்தமிழர்களின் கொடுமையான நிலை தமிழர்கள் மட்டுமல்லாது, மனித நேயம் உள்ள, தனது விடுதலையை விரும்பும் மனிதர்களின் இதயங்களில் தாங்க முடியாத வலியை நிரந்தரமாக்கி உள்ளது.
விடுதலை வேண்டுபவர்கள் ஒன்றினையவும், தமது வழிமுறைகளை சரிபார்த்து மாற்றிக்கொள்ளவும் வேண்டும்.
எதிரி மனித நேயமில்லாதவன்-மனிதனாகவே இல்லாதவன் என மிகத் தெளிவாக உணர்த்திவிட்டான். அவனை இவ்வாறு மாற்றிய தற்பொதய சூழல் தான், வழிமுறைகள், வாழ்க்கை முறைக்ள தான் நம்மையும் இந்த அழிவுகளை எதிர்க்க முடியாத - நமது அறியாமையால் நம்மைத் தேடிவரும் தீமையைப் பற்றியும் விளங்கிக் கொள்ளாது ஆக்கியுள்ளது.
மனித குல எதிரியினது வழிகள், ஆயுதங்கள், வாழ்க்கை முறைகளை நாம் கையாளுவது தவிர்க்க முடியாமல் அவனை விட மோசமான நிலைக்கு த்தான் நம்மைக் கொண்டு செல்லும்.
நம்மை வழிகெடுக்கும் -நம்மைத் தூண்டிவிடும் ஆர்ப்பாட்டமான தலைவர்களை - நமது விழிப்புணர்வற்ற சிந்தனைகளை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டியது முகாமையான பணி
தலைமை- தலைவனை துதிபாடுவது தமிழர்களின் சாவக் கேடுகளில் ஒன்று.
ஆமாம். நமது தலைவர் நல்லவர் தான், வல்லவர் தான், அவர் வாழ்ந்த காலத்தின் கட்டாயத்தால் தாம் தலைவரானார். அவரது கூரிய சிந்தனையும் ,தம் கருத்துகளின் மீது அவர் காட்டிய உறுதியும் அவரைப் பெரும் தலைவராக்கியது. அவரது உண்மைக்காக அவரை மதிக்கிறோம்.
இப்போது அவர்கள் நம்முடன் இல்லை. அவர்களது காலத்தில் இருந்த சூழலும் இல்லை. இப்பொது நாம் தான் விழிப்பாகச் சிந்திக்க வேண்டும்.
நமக்காக. நாம் நமது நிகழ்காலத்தில் வாழ்ந்தால் தான், நிகழ்காலத்தை விழிப்புடன் ஆய்வு செய்து நமது வழிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். நாம் நல்வாழ்வுக்காக, அமைதிக்காக, வாழ்க்கைக்காகப் போராடுகிறோம்,
எந்த கருத்துகளுக்காகவும், பழிவாங்குதலுக்காகவும், தியாகத்துக்காகவும், தலைவர்களின் விசுவாசத்துக்காகவும் நாம் களத்தில் நிற்கவில்லை.
நம்மிடம் வெறுப்பும், விரக்தியும், அமைதியின்மையும் சேர்ந்தால், வன்முறை இரசிகர்களின், தீமையை விரும்புபவர்களின், நம்மை வளர்த்து அடையாளம் கண்டு அழிக்க நிணைக்கும் எதிரிகளின் ஆரவாரத்துக்கு பலியாகிவிடக் கூடும்.
நாம் எப்படிப்பட்ட அமைதியான கூட்டுவாழ்க்கை சமூகத் தேவையை விரும்புகிறோம் என்பதை வைத்தே - நம்மால் நமது எதிரிகளையும், நண்பர்களையும் அடையாளம் காண முடியும். நமது களத்தையும், ஆயுதத்தின் தன்மையையும் முடிவு செய்ய முடியும்.
நாம் முடிவெடுப்பது நமது பழைய தலைவர்களுக்கு நேர் மாறாக இருக்கலாம். விடுதலைக்கான வழிகளை காலமும் சூழலும் தான் முடிவு செய்யும்.
தலைவர்களிடம் இருந்து நாம் பெற வேண்டியது அவர்கள் தனது விடுதலையின் தேவை மீது வைத்திருந்த புரிதலும், அவர்களது விழிப்பணர்வும், மனித நேயமும் தான்
நம்முடைய தனிப்பட்ட விடுதலையின் தேவையின் அழுத்தம் தான் - நன்மையைத் தேடியே போராட்டத்தில நம்மை இணைத்தது என்பதை மறக்க கூடாது.
.
நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நமது தலைமைத் துதியே நம்மை அழித்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.