விருந்தும் மருந்தும் மூன்று நாள்
• உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு ஆற்றலின் நுட்பமான செயல்பாடுகளை, விழிப்புணர்வுடன் கவணித்து, உணர்ந்து உதவும் அறிவியலையே மருத்துவம் என்கிறோம்.
• நம் உடலில் கண்கள், காதுகள், நாக்கு, முடி, நகங்கள், உள்ளங்கால், உள்ளங்கை, தோல், நாடித்துடிப்பு, வாசியோட்டம், உமிழ்நீர், குரல் போன்றவைகள் நமது உடலின், மனதின் நிலையைத் தெளிவாக காட்டும் தன்மையுடையது.
• இதைவிட சிறந்த நோயறியும் கருவிகள் இல்லை. நோயுற்றவரின் வார்த்தைகளை பொறுமையாக கேட்டு அவரது உடல், மனம், மற்றும் பழக்கங்களை ஆராயும் மருத்துவருக்கு தன்னை நாடிவந்தோர்க்கு சுகம் பெறவழிகாட்டுவது மிக எளிதே.
• இந்த வழியில் மருத்துவருக்கு நோய்க்கான காரணம் அறிய நிமிடங்கள் போதும். நோய்க்குக் காரணம் அறியாத நிலையில் நோயைத்தடுப்பதோ, குணப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ இயலாத காரியம்.
• ஒரு மருத்துவருக்கு, தங்களிடம் வருவோரின் துன்பத்தின் அடிப்படைக் காரணமறிந்து சுகமளிக்கவும், நம்பிக்கையூட்டி நலவாழ்வுக்கு வழிகாட்டவும் மூன்று நாட்கள் மிக அதிகமே
யாரோ வணிக நோக்கில் செய்து தரும் கருவிகளையும், அதன் அளவுக் குறிப்புகளையும், அடிப்படையற்ற கருத்துகளையும பயன்படுத்தினால் எந்த நொயையும் அறிய முடியாது. இந்த வகையில் நோயறிந்து! யாரோ வணிக நோக்கில் செய்து தரும் மருந்துகளை, வணிக முகவர்கள் தரும் சிற்ப்புச் சலுகைகளுக்காக மருந்தென்று எழுதிக் கொடுப்பவர்கள் தரகர்களாக மட்டுமே இருக்கலாம் - எப்படி மருத்துவர்களாக முடியும்? சிந்தியுங்கள்.
மருத்துவர்கள் என்போர் விழிப்புணர்வுடன் கூர்ந்து அறியும் ஆற்றலும், மனித நேயமும் மிக்கவர்களாக – நன்மை, தீமைகளை சிந்தித்து உணர்ந்து நன்மையை நாடுபவர்களாக இருக்க வேண்டும்.
• தமது பெருமைக்காகவும், அறியாமையிலும் கண்டதைச் சொல்லி வழிகெடுக்கும் சுற்றத்தாரை விட்டு விலகுவதும், தான் சிந்தித்து முடிவெடுப்பதும் நலம் விரும்புபவர் கடமை.
• பொறுமையாகவும், விழிப்புணர்வுடனும், நொயுற்றவர்க்கு உதவுவதும், நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதலாக இருப்பதுமே உடனிருப்போர் கடமை.
• நோய்க்குக் காரணம் புரியாது வாழ்நாள் முழுவதும் மருந்து கொடுப்பதோ, அறிவுரை கூறுவதோ மருத்துவர்க்கும் -மருத்துவ முறைக்கும் அழகல்ல.
• இவ்வாறு அறியாமையில் இருக்கும் ஒரு மருத்துவரையும் - மருத்துவ முறைகளையும் உடனிருப்போரையும் விட்டு விலகி, சரியான மருத்துவத்தை நாடிச் செல்வதே ஒருவர் தன் உடலையும், மனதையும், பணத்தையும், உயிரையும் காக்கும் ஒரே வழி.
சுலபமாக இருப்பதால் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள். மக்களுக்கு வாழ்க்கையில் வன்முறையும், சிக்கல்களையுமே பார்த்து பழகி விட்டது. அதனால் எளிதில் வரும் எதையும் ஏற்கும் மனபக்குவத்தை தொலைத்து விட்டார்கள்..வேறென்ன அதெல்லாம் அவரவர் விதி பயன். வாழ்க்கையில் அலோபதி மறுத்தவர்கள்/மருந்துகளிடம் சென்று அவதிப்பட வென்றும் என்பது அவர்கள் தலைஎழுத்து போலும்.
பதிலளிநீக்குசுலபமாக இருப்பதால் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள். மக்களுக்கு வாழ்க்கையில் வன்முறையும், சிக்கல்களையுமே பார்த்து பழகி விட்டது. அதனால் எளிதில் வரும் எதையும் ஏற்கும் மனபக்குவத்தை தொலைத்து விட்டார்கள்..வேறென்ன அதெல்லாம் அவரவர் விதி பயன். வாழ்க்கையில் அலோபதி மறுத்தவர்கள்/மருந்துகளிடம் சென்று அவதிப்பட வென்றும் என்பது அவர்கள் தலைஎழுத்து போலும்.
பதிலளிநீக்குஅன்புள்ள திரு தமிழவேள் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கள் தெளிவாகவும்,நல்ல சிந்தனையுடனும் எழுதப்பட்டிருக்கிறது.எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்.மற்றவை அவர்கள் கையில்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அருமையான பகிர்வு
பதிலளிநீக்குஎன்று நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilthottam.nsguru.com
எதார்த்தமான பகிர்வு. உண்மை எப்போதும் எளிமையானதாகவும்,இனிமையானதாகவும் தான் இருக்கும். நன்றி. தங்கள் சமுதாயப்பணி சிறக்கட்டும். - சே. தியாகராஜன்.
பதிலளிநீக்கு