செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பெருக இவ் வையகம்

எனது அனுபவம் - உங்களது வலைபதிவிற்காக...
X
Inbox
X

Reply

M Maheswari

 to me
show details 5:26 PM (3 hours ago)
எனது அனுபவம் - உங்களது வலைபதிவிற்காக...

27th மார்ச் 2010 முதல்  ஏப்ரல் வரை விடுமுறை எடுத்திருந்தேன்...எனது இடது கை முறிவின் காரணமாக......
"......நாம் என்ன தவறு செய்தோம், ஏன் இந்த சோதனை , எத்தனை பேரை நம்ப வேண்டியிருக்கிறது, ஒரு சிறு வேலை கூட செய்ய முடியவில்லையே என்றெல்லாம் எண்ணி சோர்ந்து போனேன்....அப்பொழுது தான் அலுவலக தோழி (இந்த கை கட்டுடன் அலுவலக விருந்து ஒன்றில்) ஒருவர் கூறினார் : (அவருக்கும் இதே நிலை இருந்தது) - "ஏன் இப்படி இருக்கிறோம் என்று எண்ணாதே...எல்லாம் நன்மைக்கே என்று எண்ணிக்கொள். நன்றாக ஓய்வு எடு....நிறைய புத்தகங்கள் படி.....விட்டு போன வேலையை எல்லாம் முடிக்க கடவுள் கொடுத்த இடைவெளியாக நினைத்துக்கொள்...... "

அப்படி படிக்கும்பொழுது தான் மாலினி கொடுத்த "உங்கள் நலம் உங்கள் கையில்:" என்ற தேவேந்திர வோரவின் புத்தகத்தை படிக்க நேர்ந்தது....வெகு நாட்களாக ரத்னா எங்களை "Acupuncture " படிக்க எங்களை அழைத்ததும் நினைவுக்கு வர....இப்படி தான் பதஞ்சலி உடல் நல மையம் வந்து சேர்ந்தோம்....சிறு வயதில் எங்கள் வீட்டில் அண்ணி (17 ஆவது வயதில் திருமணம்) - தானும் மருத்துவராக விரும்பியதும் மனதில் ஓடியது. அது மட்டும் அல்ல, சமீப காலமாக அண்ணனும், அக்காவும் (சர்க்கரை மற்றும் குடல் புண்) -  "Acupuncture " - சிகிச்சை எடுத்து முன்னை விட (நோய் வாய் படும்போது இருந்ததை விட) நலமாக இருப்பதையும் கண்கூடாக கண்டவுடன், மேலும் நம்பிக்கை...........


ஜூன் 2010 -ல் "Diploma in Acupuncture " (Certificate Course by Planning Commission, Indian Government) - சேர்ந்தோம், நானும் கற்பகம் அண்ணியும்............15 நாள் விடுமுறையில் வந்த புவனாவும் இபடிப்பை முடித்து விட்டாள் ...

எனது அனுபவம்....,

இப்பயிற்சியில் சேரும் வரை -  கர்பப்பை நீர்கட்டிக்காக homeo மருந்துகள் எடுத்து வந்தேன்.....அந்த கட்டி எப்பொழுதாவது சிக்கலான நிலையில் இருக்கும்பொழுது, சில நேரங்களில் தாங்க முடியாத வலி வரும்.

ஒரு  நாள் வகுப்பிலேயே அந்த வலி வர , மருத்துவர் தமிழவேள் "Healing (இதன் தமிழ் வார்த்தை - "இறை வழி மருத்துவம் !!!)" கொடுத்து  ஐந்து நிமிடத்தில் அந்த வலியை நீக்கினார்...

பிறகு எனது  நாடி பார்த்து மருத்துவர் தமிழவேள் அவர்கள் கூறிய படி அவற்றை நிறுத்தினேன். எனது வலது கால் பெருவிரல் நகம் மிக கருத்திருந்தது... மற்றும் இடது கை பேரு விரல் நகத்திலும் லேசான கருப்பு கோடுகள். இது நீண்ட நாளாக அருந்திய மருந்தின் விளைவு எனவும், உடலில் நச்சு பொருள்களின் தேக்கத்தை குறிக்கிறது எனவும் கூறினார்.....எனவே இரு கால் பேரு விரல்களிலும் ஒரு சொட்டு விளக்கெண்ணை விட்டு வருமாறு கூறினார்....ஒன்றரை மாதத்தில் , புதியதாக வளரும் நகம் இந்த கருப்பு நிறமின்றி மற்ற நகத்தை போல வளர ஆரம்பித்தது.

ஒரு சில மன உபாதைகளால் 6 வருடத்திற்கு முன் வந்திருந்த மூலம் திரும்ப அதிகமாக வர ஆரம்பித்திருந்தது...ஒரு வகுப்பிற்கு முன்னர் மருத்துவர் ரத்னா - மூன்று இடங்களில்  (UB and kidney points) ஒரு பத்து நிமிடம் needle போட, இரண்டே நாளில் அதிலிருந்து நிவாரணம் பெற்றேன்.

பிறகு - இருவர் கூறிய படி - சிறு சிறு வாழ்க்கை முறை மாறுபாட்டால் - நிறைய தொந்தரவுகளில் இருந்து விடுதலை....நான் கடைபிடிப்பவை....
 I WANT TO BE THE CHANGE I WANT TO SEE........

  • தினமும்  இரு  முறை தலைக்கு குளித்தல்...(குளியல் என்றாலே தலைக்கு தான் - தமிழவேள் கருத்துப்படி ..) 
  • வாரம் ஒரு நாளாவது என்னை தேய்த்து - சீயக்காயுடன் குளிப்பது (எப்பொழுதுமே எனக்கு ஷாம்பூ பிடித்ததில்லை - அதை போட்டால் உடல் சூடாவது போன்ற உணர்ச்சி வரும்....இந்த வகுப்புகளுக்கு வர ஆரம்பித்த பிறகு தான் தமிழவேள் கூறினார் - ஷாம்பூ-வில் "bleaching powder - ல் போடும் சேமிகள் கலப்பதாக  - நல்ல வேளை இவ்வளவு நாள் என் முடி தப்பித்தது....
  • சோப்பை அறவே நீக்கி தமிழவேள் கூறிய பொடிஉபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம் (நான் , எனது கணவர், மற்றும் எனது பெண் - மகனை இன்னும் மாற்ற வேண்டும்... பச்சை பயிறு, வெட்டி வேர், விலாமிச்சை வேர், பூலங்கிழங்கு, கஸ்துரி மஞ்சள் இவை சேர்ந்தது......(இதற்கு முன்னர் சோப்பையும் பொடியும் மாற்றி மாற்றி உபயோகித்து வந்தோம்- இப்பொழுது பொடி மட்டும் )
  • தமிழவேள் கொடுத்த "வீட்டு மருத்துவர்களுக்கான  குறிப்பின் படி இப்பொழுது எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை " பருப்பு இட்லி, பச்சை பயிறு இட்லி, நேப்பரிசி இட்லி மற்றும் அவல் உணவுகள்..." இவற்றுடன் நாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சிறு தானிய உணவு வகைகள்  (கம்பு பொங்கல், கேழ்வரகு தோசை / அடை..) ....இந்த வாரம் விடுமுறையில் இருப்பதால், இட்லி-தோசை மாவே அரைக்காமல் - வாரம் முழுவதும் இட்லி தோசையை  தவிர்த்து பிற உணவு வகைகளின் பயன்பாடு.....பச்சை பயிறு இட்லி இப்பொழுது மகளுக்கு பிடித்து விட்டது.. ....பிடிக்காத மகனுக்கு அதை தோசை/ அடை போன்று செய்து அதன் மேல் "பனீர்" (பாலாடை கடி) வைத்ததும் பிடித்து விட்டது.....இந்த குறிப்புகளையும் எனது அலுவலகத்தில் பலருக்கும் கொடுத்துள்ளேன்.. (முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு)
  • அடுத்து, மருத்துவர் பாஸ்லூர்  ரஹ்மான் அவர்கள்  எழுதிய "மருந்தினால் வரும் நோய்கள்" புத்தகமும் எனது அலுவலகத்தில் இப்பொழுது மிகவும் பிரபலம். எனது புத்தகமே இன்னும் எனது கைக்கு வரவில்லை.
  • அண்ணி எடுத்து சென்ற புத்தகம் அவர்கள் மகளின் கல்லூரியில் சுற்றில் இருப்பதாக கூறினார்கள்......
  • எனது அலுவலகத்தில் இருந்து இது வரை இருவரின்  குடும்பம் இந்த இயல் / இறை வழி மருத்துவ முறையை நோக்கி திரும்பிஇருக்கிறது......இன்னும் பலரும் எனது அனுபவம் கேட்டு வர இருக்கின்றனர்....
  • வெகு நாள் கழித்து, மனம், வாக்கு செயல் ஒத்து செய்யும், முழு மனிதர்களின் பிடியில் நமது உடல் நலனை ஒப்படைத்த மகிழ்ச்சியில்... I WANT TO BE THE CHANGE I WANT TO SEE........

பின்னும் சிலரின் சந்தேகங்கள்../ கேள்விகள் ..எனது பதில்கள்....மருத்துவர் தமிழவேள் அவர்களையும் இதற்கு தகுந்த பதில்கள் அளிக்க விழைகிறேன்...

  1. நீங்கள் உண்மையிலேயே எங்கள் உடல் நலனில் அக்கறையுடன் சொல்லுகிறீர்களா.அல்லது இந்த Acupuncture " - சிகிச்சையை "propoganda " செய்கிறீர்களா..? ........எனது சமீப அனுபவத்தில் உணர்ந்த நல வழிகளையே எல்லோருக்கு சொல்கிறேன்....நான் எந்த ஒரு முறையையும்  propoganda - செய்யவில்லை... எந்த ஒரு முறைக்குள்ளும் மாட்டி கொள்ளகூடாது என்று நினைக்கிறேன்.......இயல்பான , இயற்கையான முறைகள் அது, சித்தா , homeo , acupuncture , acupressure , இறைவழி மருத்துவம், என எதுவாக இருந்தாலும், நமது உடல் நலனில் உண்மையான அக்கறையோடு செய்யப்பட்டால் அதை ஏற்றுகொள்ள நமது ஈகோ -வை (ego ) விட்டு , முற் சாயவை (prejudice ) விட்டு கொடுத்தாவது  முயல வேண்டும்..... உண்மையிலேயே நமது உடல் நலத்தில் அக்கறை கொண்டு, குறைந்த dosage -ல் மருந்துகள் அளிக்கும் பல ஆங்கில மருத்துவர்களையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் அச்சமயத்திலும், ஒருவருடைய auto immune system - தான் அந்நோய் விலக உதவியிருக்கும் என்று இப்பொழுது உணர்கிறேன். தமிழவேள் அடிக்கடி கூறுவது போல..."விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் கொண்டாட வேண்டும்., உண்மையான உடல் நலம் விழைய....
  2. blood test , blood pressure checking, diabetic test , புற்று நோயை கண்டு பிடித்தல், க்ஸ்-ரே போன்றவற்றால் தானே நோய்களை அறிய முடிகிறது......அவற்றை அலோபதி மருத்துவ முறை தானே கொடுக்கிறது.........உண்மை. போல தோன்றுகிறது.....இது போன்ற டெஸ்ட்-களை தப்பி தவறி எடுத்தாலும், சிகிச்சை எடுக்க மற்ற முறைகளுக்கு சென்று விடுங்கள்....ஆங்கில மருத்தவம், நோயை கண்டு பிடித்து சொல்வதாக மட்டுமே சொல்கிறது., ஆனால் நிச்சயமாக cure - இல்லை...control செய்வதாக கூறுவார்கள். அதனால் வரும் பின் விளைவுகளோ பல சமயங்களில்  நோயை விட மோசமானதாக இருக்கும்....உதாரணத்திற்கு சாதாரண சளி தொல்லைக்கு அவர்கள் கொடுக்கும் மருந்துகள் வயிற்று புன்னை  உண்டாகுகிறது........சளியை அதன் போக்கிலேயே வெளியேற விட்டு விட்டால் கண்டிப்பாக நீண்ட நாள்களுக்கு மீண்டும் சளி பிடிக்காது....  வேண்டுமெனில் சளியை வெளியேற்ற கை மருந்துகளை எடுத்துகொண்டால்  போதும்......இந்த டெஸ்ட்-களின் மூலமாக கண்டு பிடிப்பதாக சொல்வதும் மாயை தான்.....எனது கை முறிவிற்கு எடுத்த சிகிச்சை - க்ஸ்-ரே இல்லாமலேயே ஆரம்பித்தும், முடிந்தும் விட்டது....அலுவலக விடுப்பிற்காக எக்ஸ்-ரே எடுக்க போன இடத்தில ஆங்கில மருத்துவர் (ortho ) - nut -bolt - surgery   இல்லாமல் சரி செய்யவே முடியாது என்று சொன்னதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது....அவர் என்னை சென்னையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் அழைத்து செல்கிறாராம், நான் நடந்து தான் செல்வேன் என்று அடம் பிடிக்கிறேனாம்.... bone setter - அலெக்ஸ்- இடம் சொன்னதற்கு  - நடக்கும் பொது விழுந்தாள் அடி படாது, விமானத்தில் இருந்து விழுந்தாள் எலும்பு கூட மிஞ்சாது என்றார்.....இப்பொழுது நிறைய ஆங்கில எலும்பு  முறிவு மருத்துவர்களே அவரிடம் பல பேரை அனுப்புவதாகவும் கூறினார..  அப்பொழுதான் செங்கல்பட்டு அலுவலகத்திற்கு  ரயிலில் சென்ற பொது சில ஆங்கில மருத்துவர்களின் நட்பில் , அவர்களே  homeo மருந்துகள்  எடுப்பது தெரிய வந்தது...போங்கப்பா உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம்.....அதுவும் அவர்களின் நான்காவது வருட படிப்பில் "Pathology " என்னும் படிப்பில் எல்லா மருந்துகளின் பின் விளைவுகளை படித்த பின் மருந்துகளின் மேல் வெறுப்பு வருவதாக கூறுவார்கள்.........மருத்துவர் பாஸ்லூர்  ரஹ்மான் சொல்வது போல ஆங்கில மருத்துவம் நோய்க்கு பெயர் மட்டும் தான் வைக்கிறது, தீர்வு கொடுப்பதில்லை....கழுத்து வலியை "spondilitis " என்கிறது,  ஆனால் மற்ற மருத்துவ முறைகள் நோயின் ஆரம்பத்தை கண்டு பிடித்து உண்மையில் தீர்த்து வைக்க உதவுகிறது....