வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தேனில் நஞ்சிட்டவர்கள் யார்?

மனிதர்களுக்கு இயற்கை தந்த அருமருந்து தேன். நலம் நாடுவோரும், நலம் வேண்டுவோரும் உணவாய் மருந்தாய்க் கொள்வது தேன்.


சித்த மருத்துவர்கள் தம் மருந்துகளை விரைவில் உடலில் சேர்க்கத் தேனைப் பயன்படுத்துவர்.


தேனிலும் தங்கள் விசத்தைக் கலந்துவிட்டனர். ஆன்டிபயாடிக் எனும் உயிர்க்கொல்லி இரசாயனங்களைக் கலந்த்தால் பெரிய வணிக நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தேனில் நஞ்சுள்ளது என்பதை நேற்றைய சன் செய்திகளில் கேட்ட போது மிக அதிர்ச்சியாக இருந்த்து.


 தொடர்ந்து உயிர்க் கொல்லி கலந்த தேனை சாப்பிட்டவர்க்கு புற்று நோய் போன்ற கடுமையான பெரிய நோய்களுக்கு ஆளாவார்கள் இது செய்தி. சரி உயிர்க் கொல்லியையே (ஆன்டிபயாடிக்)  மருந்தாக தொடர்ந்து சாப்பிடும் மடையர்களுக்கு (அவர்கள் குழந்தைகளுக்கு)  என்ன வரும்?.


பணவெறி பிடித்த வணிகர்கள் கலப்படம் செய்கிறார்கள் என்பது சீரனித்துப் போன செய்தி. ஆனால் தேனிலும் குழந்தை உணவுகளிலும் (பிஸ்கட், சத்துமாவுகள், தின்பன்டங்களில்,உணவில்,குடிக்கும் தண்ணீரில்)  உயிர்க்கொல்லிகளை கலப்பவர்களை என்ன சொல்வது???...


இந்த கொலைத் தன்மையுள்ள ஆங்கில மருத்துவத்தை-ஆங்கில அறிவை இன்னும் புரிந்து கொள்ளாத மனிதர்களை எப்படி அழைப்பது? 

1 கருத்து:

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.