வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இறைவழி மருத்துவம்

'நினைத்தால் சுகம்' எனும் இறைவழி மருத்துவம்
   
அகிலங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் படைப்பாற்றல் தாம் படைத்த அனைத்து உயிர்களுக்கும் தம்மைத் தாமே காக்கவும், குணப்படுத்திக் கொள்ளவும் வல்ல ஆற்றலைக் கொடுத்துள்ளது.
அவ்வாறே மனிதனுக்கும். மனித உடல் தன்னைத் தானே குணம் செய்து கொள்ளும் ஆற்றலை படைப்பாற்றல் கொடுத்துள்ளது.. மனித அறிவு அதற்கு உதவக்கூடியதாய் உள்ளது.

 இந்த தற்காப்பு ஆற்றலே கருவில் இருந்து முடிவு வரை உயிருக்கும், உடலுக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கிறது. நாம் இந்த தற்காப்பு சத்தியை பாதுகாக்க, புதுப்பிக்க, உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் அறிவையே மருத்துவ அறிவு என்கிறோம்.

இந்த வகையில் சித்தா, வர்மம், யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர். ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற பல மருத்துவ முறைகளை இறை ஞானங்களாக படைப்பாற்றல் மனிதனுக்கு வழங்கியுள்ளது.

 சித்தர்களாகிய முன்னோர்கள் தொகுத்துத் தந்த படைப்பாற்றலின் இந்த அருட்கொடையை, தன்னில் பிறரைக் காணும் தண்மை உடையவரும், தனது நலன்- மகிழ்சி என்பது பிற உயிர்களின் நலத்தில் உள்ளது என்பதை அறிந்தவர்களால் மட்டுமே சிறப்பாக பயன் படுத்த முடியும்.

படைப்பாற்றலின் விதிகளை உணர்ந்து இறைவழியில் வாழ முணைபவர்க்கும், பிற உயிர்களின் நலத்தை விரும்புவோர்க்கும் பெரும் நன்மையாக, நிணைத்தால் சுகம் எனும் இறைவழி மருத்துவ ஞானத்தை படைப்பாற்றல் கொடுக்கின்றது.

ஓர் இறைவழி மருத்துவரால் உடல், மன நலம் பெற வேண்டி தம்மை அணுகுபவரின் துயரை விரைவில் தீர்க்க உதவ முடியும்.

இறைவழி மருத்துவம் பெற விரும்புபவர்களுக்கு, தான் நலம் பெற வேண்டும் எனும் ஆழமான விருப்பம் தேவை, தவிர வேறு எந்த வகையான, பிரார்தனையோ, சடங்குகளோ தேவையில்லை.              
    
 ஒப்பீடற்ற இறைவழி மருத்துவத்தின் சிறப்புகள் சில

1.        சோதனை முறைகள் தேவையில்லை.
2.      மருந்து மாத்திரை ஊசி போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை.
3.      மருத்துவர் அருகில் இருக்கத் தேவையில்லை
.4.      உதவி தேவைப்படுபவரை தொடத் தேவையில்லை
.5.      வினாடிக்கும் குறைவான நேரத்துக்குள் வைத்தியம் நடந்து விடுகிறது.
6.      உடன் துன்பம் நீங்கி உடல், மனம் சுகம் பெறுவதை உணர முடியும்.
7.      மிகக் குறுகிய காலத் தவனைக்குள் நோய் நீங்கி சுகம் பெறலாம்
.8.      கருவில் உள்ள குழந்தை முதல் மிக முதியவர் வரை எல்லொர்க்கும் எற்றது.
9.      மருத்துவச் செலவை விரைவில் வாழ்விலிருந்து நீக்கிவிடலாம்.
10.  கல்வித் தகுதியின்றி எல்லோரும் எளிதில் கற்று நன்மை பெறலாம்.