சித்தர்களாகிய நம் முன்னேர்களால் பண்பட்ட தமிழ் குமுகம்- தம் உயிரையும் உடலையும் காக்க வல்ல, உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கங்கள், உணவு என எல்லாத் தேவைகளையும் முறைப்படுத்தி வைத்திருந்து.
கால மாற்றத்தால், பழுத்த மரம் தான் கல்லடிபடும் எனும் உண்மைக் ஏற்ப, நம் தமிழ் குமுகம் தம் நிலையிலிருந்து இழிந்த காலம் இது. காரணம் மனித நேயமில்லா பண்படாத மனிதர்களின் இழிந்த அறிவை-அறிவியலை புரிந்து கொள்ளாது தான்.
உலக மாந்தர் அனைவரும் நலம் பெற படைப்பாற்றல் விரும்புவதால், மனித அறிவின் கேடான் போக்கை நவீன அறிவியல் மூலம் நிறுவிக் காட்டி மாந்த குமுகத்தை நல்வழிப் படுத்தவே- படைப்பாற்றல் மனிதனுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது.
உலக மாந்தர்கள் நலம் பெற, நமது மரபுவழி வாழ்க்கை முறைகளும் நுட்பங்களும் நன்மையை நாடுவோர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
உலகில் உள்ள- தமிழினம் போல் பண்பட்ட-பாதிக்கப்பட்ட சமூகங்கள் தம் இழப்புகளையும், துன்பங்களையும் இறைவிருப்பமாக- நன்மையாக கருதித் தாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.
மனித குல எதிரிகளின் ஆயுதங்களை நாம் பயன் படுத்த இயலாது. பயன்படுத்தினால் நமக்கு நன்மை தராது. நமக்கான ஆயுதம் விழிப்புனர்வுடன் கூடிய அன்பு மட்டுமே. இந்த விழிப்புணர்வெனும் ஆயுத்தை எதிரிகள் பயன் படுத்தினால் நமக்கும் நன்மையே.
'இன்னாசெய் தாரை ஒறுத்தல அவர்நாண
நன்னயம் செய்து விடல்'
எனும் சித்தர் வாக்குக் கேற்ப,
நமது படிப்பினைகள் போதும். நமது நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் முன்னோர்கள் தொகுத்துத் தந்துள்ளனர் அவற்றைத் தம் நலம் நாடும் உலக மாந்தருடன் சேர்ந்து, பகிர்ந்து கொள்வோம்.
BOSS VERY NICE CARRY ON YOUR....?
பதிலளிநீக்கு