வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தண்ணீர் குடிக்கலாம் வாங்க...

                தண்ணீர் குடிக்கலாம் வாங்க...

·          பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.
         
·  தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.



·          உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.



·          இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.



·           அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.



·          . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.



·          வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.



·          இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.  



·          நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம்,  நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.



·         சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.



·          படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது. 
    


*    எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

                           ----- ...... -----


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.