செவ்வாய், 24 ஜனவரி, 2012

Know Your Body - 53


Know Your Body - 53
Eat well Live well

 

ஆழ்ந்த  சிந்தனைக்கு....

அன்பு ஒரு வெகுமதிக்கு சமானம், அது உங்களை அடையும்பொழுது, பிரித்துப்பார்த்து அனுபவியுங்கள்.....உங்களை வந்தடையாவிடில் கவலை வேண்டாம்...எங்கோ யாரோ, உங்களுக்காக பொதிந்து பாதுகாத்து கொண்டு வர தயாராக உள்ளனர்....
DEEP IN THOUGHT

Love is a gift. If you receive it, open and appreciate it. If not, do not worry. Someone somewhere is still wrapping it for you.
 
Love Wrap
Web for throat pain

Press the web to get relieved from throat pain

அறிவோம் 

முன்னொரு காலத்தில் மூன்றே மூன்று நோய்கள் தான் இருந்தனவாம், அவையாவன பசி, தாகம், மரணம்.....அதனால் தான் சித்தர்களும் இம்மூன்று நோய்களை வென்று அமரத்துவம் எய்தினர்.......இதிலிருந்தே தெரிகிறது தற்கால நோய்கள் மற்றும் அதன் பெயர்கள் எல்லாம் நாமே உருவாக்கியவை என்று..... "எனக்கு வருடம் ஒரு முறை காது வலி வரும், மூன்று நாட்கள் கஷ்டப்படுவேன்....மாதம் ஒரு முறை வயிற்று வலி வரும், ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும், என்று நாமே முனைந்து பல நோய்களை உருவாக்கி வருகிறோம்"....... "நினைப்பு தான் பொழப்பை கெடுத்தது " என்று ஒரு பழமொழி உண்டு.....சமீபத்தில், நண்பர்களுடன் ஒரு குவளை பீர் அருந்தி, குடும்பத்தினரிடம் அந்த விவரத்தை பகிர்ந்து, அவர்களிடம் கடுஞ்சொல் வாங்கி, அதனால் தான் இதுவோ, அதுவோ என பயந்திருந்த ஒரு 20 வயது இளைஞனை, "வா...உட்கார்....உனக்கு ஒன்றும் இல்லை" என்று கூறி ஒரு புள்ளியில் வைத்தியம் செய்த பிறகு தான் அவனுக்கிருந்த பயம் சரியானது...
 
செய்வோம்
 
கட்டை விரலில் இருந்த நான்கு புள்ளிகளை பார்த்தோம்...இப்பொழுது தொண்டை வலிக்கு  அழுத்த வேண்டிய இடம் பற்றி அறிவோம்...
கட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் இடையே உள்ள "சவ்வுப்பகுதி" - தொண்டைக்கான இடமாகும்.....தொண்டை வலி இருக்கும்பொழுது இதை இலேசாக தடவி கொடுத்தாலே வலி போய்விடும்...
 
KNOW
 
In the olden days, only three diseases were there.......Hunger, thirst and death. That's why the "Siddhars" of that era were trying to conquer these three, to attain eternity. But nowadays, each own creates their own disesases, mostly by their own thoughts. You can often hear many people saying, "I usually get throat pain once a year, and it lasts for three days..........I usually get this stomach pain once in a month, and it goes by itself, within an hour.........." and so on.....From these statements we can understand that many a times, we create our own ailments, especially such periodic ones. Thoughts are powerful and therefore let us always think about Good Health.  Recently, a  20  year old, came with the complaint of headache, which he assumed to be due to the "Single" glass of beer that friends forced on to him.....Over to this, he had intimated this to his parents, who also scolded him for the same....He kept on ranting that he had this and that, and he was treated on a psychological point, after which he was ok. 

FOLLOW
 
Having seen about the  points 1 to 4 on the thumb, we will move on to the fifth point, in the web - which relieves throat pain instantly. It is situated in the web , between thumb and index finger.


நலமறிய ஆவல்


A GREAT EXPERIENCE TO GOOD HEALTH : இல் Doctor aiyya, It's a great service to humanity, and is very much appreciated. Would be great, if you can update the patients records further, provide the current status and details. Thanks, Ram


Status as on 23.01.2012

She is still going strong, without a single allopathy tablet. (not even for any routine ailment - like the tooth pain or headache)

Recently taking acupuncture treatment as well, with her nearby doctor. Previously she was very sensitive to needles.

She feels young. Her official work has improved considerably,as the stopping of all tablets has improved her response time. She replies confidently in meetings and discussions. 

More than anything, she only had a couple of bouts of Convulsions after coming to the healing treatment with Dr. Thamizhavel, that too for very genuine mental pressures she faced. Previously she used to get it at least once in 15 days, even with all those (so called) medicines.

She feels very much indebted to the Doctor for all these positive changes in her health.  Soon you can watch a video about her testimony.

Regards
MAHESHWARI

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

Know Your Body 52



Facebook icon Forward icon
TABLE OF CONTENTS
Relax your whole body
Relax your whole body
Thumb pressure
Reflex pressure
Relax like a cat
Relax like a cat
Relax like a baby
Vayu Mudra
Vayu Mudra
Photo Vayu Mudra
Photo Vayu Mudra
Know Your Body 52
அறிவோம்
உடலை தளரசெய்வதை பற்றி ஒரு சிறு குறிப்பு......சமீபத்தில் ஒரு
செய்தி படித்தேன். ஓய்வு எடுக்கும் பொருட்டு ஒரு நபர் வெளியூர்
சென்றிருந்தார். தான் மிகவும் ஓய்வாக, தளர்வாக இருப்பதை எண்ணி
மகிழ்ந்திருந்தார்... அப்பொழுது அருகிலுள்ள நண்பர் ஒருவர், உனது,
நெற்றியின் தசைகளை தளர செய் எனக்கூறவும், அப்பொழுது தான்
அந்த பாகம் தளர்வடையாமல், நரம்புகள் புடைத்திருந்ததை  உணர்ந்தார்....
பிறகு உடல் முழுதையும் ஒரு சிறு ஆய்வு செய்து, அனைத்து
பாகங்களையும் தளரசெய்தார்.
நாம் எந்த வேலை செய்தாலும், ஓய்வு வேண்டும் என என்னும்போது,
ஒரு நிமிடம் அவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, ஒரு சிறு
ஆய்வு செய்து, உடலின் அனைத்து பாகங்களையும் தளர செய்தாலே
போதும்....அடுத்த சில மணி நேரங்களுக்கு நமக்கு சக்தி கிடைத்து
விடும்.
உடல் எடையை குறைக்க கூட இது ஒரு எளிய வழி. எந்த பாகம்
(உதாரணம் தொப்பை) அதிக சதைப்பற்றுள்ளதாக உணர்கிறீர்களோ,
அந்த பாகத்தை சிறு சிறு அசைவுகள் (எளிய " Tai Chi "
உடற்பயிற்சி  போல) மூலம் தளர செய்தாலே, வெகு சீக்கிரம்,
கண்டிப்பாக அந்த பாகத்தில் உடல் எடை குறையும்.....
இது எனது சகோதரி தனது அனுபவத்தில் கண்ட உண்மைகள்....

செய்வோம்
கட்டை விரலை பற்றி பார்த்தோம்.  தெறிவினையியல் முறையில்
(Reflexology), எல்லா அழுத்தங்களுக்கும் கட்டை விரலையே
வெகுவாக பயன்படுத்துவோம்.....கட்டை விரலில் மன நலம்
மற்றும் மூளை சார்ந்த நரம்புகளின் புள்ளிகள் வருவதால்,
இந்த அழுத்தம் நன்மையே பயக்கும்.
"வாயு முத்திரை" - ஆள்காட்டி விரல் "காற்று/ வாயு" வை குறிக்கும்.
எனவே ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலை வைத்து அழுத்தும்
முத்திரைக்கு, வாயு முத்திரை என்று பெயர்.....இது உடலில் "காற்று"
மூலப்பொருள் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும்.
மூட்டு வலிகள், பார்கின்சன் நோய் போன்றவற்றிற்கு இது நல்ல
தீர்வாக அமையும்.                                                                                                                                                    &nbsp ;                                                                                                                                                                                                                
ஆழ்ந்த சிந்தனைக்கு....
"கடவுள் மட்டுமே எளிமையானவர்.....மற்றவை  எல்லாமே
சிக்கலானவை .....(சுவாமி யோகானந்தா)"

KNOW
How To Relax : Recently I read an article about relaxing your body.
..A person had gone on tour and was completely at rest. But when
his friend told him to just relax his forehead muscles, just then
he realised that he had tension in that part of the body. It was
an awareness for him, as he thought that - being at rest, he was
completely relaxed and all his muscles were relaxed as well.
There is a simple way to do this. Whenever you feel very tensed,
just leave aside everything you are doing....., just make a quick
analysis of all your muscles. See if there is a smooth flow of
energy/breathing all over your body. When you start feeling it
with consciousness, at that instance, our body gets relaxed
completely.
FOLLOW
We talked about the thumb in the last issue. We learnt about
pressing the thumb. In Reflexology, we press all other fingers
and the palm with the thumb. Hence, thumb gets the maximum benefit,
and it is good for us as it is related to mind and brain.
We will move on to the Index finger today.
Vayu Mudra : The Index finger represents the "Air or Metal" Element. 
Method to do : Keep the index finger on the base of the thumb and
press with thumb keeping the other three fingers straight. 
Benefits:  It prevents all the diseases that occur due to the
imbalance of the "air" element, such as the Rheumatism, arthritis,
Parkinsons, improves blood circulation.
Deep in thought:
"God is simple ...Everything else is complex."   (Sri Yogananda) 
Regards
Maheswari
Enter your description
Enter your description


வெள்ளி, 6 ஜனவரி, 2012

தமிழர் நலவாழ்வு பெற செய்ய வேண்டியது...


தமிழர் நலவாழ்வு பெற செய்ய வேண்டியது...

தற்போதைய கல்வி,  கல்வி முறையால் நமது குழந்தைகள் தமக்கும், மனித சமூகத்துக்கும், இயற்கைக்கும் எதிராக உருவாக்கப்படுகிறார்கள்.. இவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே தன்நலமும், மனித நேயமும் இல்லாதவர்களாக வளர்க்கப் படுகிறார்கள்.

இப்போதுள்ள கல்விமுறையை உருவாக்குபவர்கள், பெற்றோர்களின் நோக்கம் வணிகம்-பொருளீட்டுவது.

இயற்கையோடு, பிற மனிதரோடு, இயைந்து வாழும் கலையை, அறிவியலை இவர்கள் அணுவளவும் அறிந்தவர்களில்லை. இந்த கல்வி கற்கும் குழந்தைகள் நாளை பெற்றோர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் கூட பயற்றவர்களாகவே இருப்பார்கள்.

இன்று பள்ளிக்குச் செல்லும் மிகப் பெரும்பாலான சிறு குழந்தைகள் சைனஸ், தலைவலி, பார்வைக் குறைவு, வயிற்றுக் கோளாறுகள், மூட்டுவலிகள், உடல் பலவீனம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் அயல்மொழியைப் பாடமொழியாக எடுத்த குழந்தைகள் நிலை மேலும் மோசம்.

எட்டாம் வகுப்பைத் தாண்டுமுன் பெரும்பாலான குழந்தைகள்  இளைப்பு, ஈளை, ஆஸ்துமா நோயாளிகளாகி விடுகிறார்கள்.  கல்லீரல் பலவீனத்தால் கண்ணாடி அணிந்து விடுகிறார்கள். பெண் குழந்தைகளில் சைனஸ், கர்ப்பப் பை கோளாறில்லாதவர்கள் எவருமில்லை எனும் நிலை.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளின் உடல், மனநிலையை அறியாதிருப்பதோ பெரும் கொடுமை.

கல்லூரியில் சேர்ந்தால் நமக்கு சிறிது விடுதலை கிடைக்கும் என நம்பி படிக்கும் மாணவர்களுக்கு அங்கு கிடைப்பது மிகப்பெரும் ஏமாற்றமே. பெரும் உடல், மனநலக் குறைபாடுகளையே, கல்லூரிப் பருவம் தருகிறது.

தொழில் கல்லூரி மாணவர்கள் காலை 7.00 மணியிலிருந்து இரவு 1.00 மணிக்கும் மேல் இவர்கள் படிக்க வேண்டியுள்ளது. விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் நிலை இன்னும் மோசம்.

வேலை அல்லது தொழில் தொடங்குவதற்குள் பெருமளவு கடனாளியாகவும், உடல் நலக்குறைவால் கட்டுண்டவராகவும், மனதளவில் ஊன்றுகோல் தேடுபவராகவும் மாறிவிடுகிறார்.

பள்ளிக்கு அல்லது வேலைக்கு அனுப்பும் பெற்றோர் குறிப்பாக தாய்மாரின் உடல் நிலையோ இவர்களை விட மோசம். காலை 4 மணிக்கு எழுந்து சமையல் ஆரம்பித்தால் குறைந்தது 9.30 வரை சமையல் வேலை. அது போல இரவு ஷிப்ட் முடிந்து 1 மணிக்கும் மேல் வேலையிலிருந்து திரும்பும் குழந்தைகள், கணவனுக்காக காத்திருந்து கவலை, மன உளைச்சல் என நரக வேதனை.

இவர்கள் எவ்வளவு சம்பாதித்தும் என்ன பயன்?
.
குழந்தைப்பருவம், இளமையைத் தொலைத்துக் கற்ற கல்வி நடைமுறை வாழ்வில் எந்தப் பயனும் இல்லாததை பார்க்கிறார்கள். 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் கற்ற கல்விக்குப் பொருந்தாத பிழைப்புகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.

படித்த்தற்கு ஏற்ற வேலை கிடைத்தவர்கள் வாழ் நாள் முழுவதும் அந்த வேலைக்குத் தங்களைப் பொருத்தமானவர்களாக ஆக்கிக் கொள்ள மீண்டும் படித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

எவ்வளவு வருவாய் வந்தாலும் அதற்கு மேல் கடன் வாங்கி, பொறுப்புகளுக்கு ஆளாகி, எந்த சூழலிலும் அந்த வேலையை விட முடியாதபடி கட்டுண்டு போகிறார்கள்.

இந்த கேடுகளுக்கு அடிப்படைக் காரணம்...

இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உடல்நல, மனநல விதிகளை அறியாதவர்களாகவும், அறிந்தவர்கள் கடைப்பிடிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர்.

உடல் நலத்திற்கு அடிப்படையான காலைக்கடன்களை இவர்களது வேலைச் சுமையால் முறையாக செய்ய முடிவதில்லை. கழிவுகளை வெளியேற்றுவதில் கவம் செலுத்தாததால் இவர்களது முழு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு விடுகிறது.

உதாரணத்துக்கு, தகவல் தொழில் நுட்பத் துறையில் கணிணியில் பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள். இந்த வேலை தனது உடலுக்குப் பொருந்தாது என்பதை அறிந்தாலும், விட்டு விலகமுடியாத பரிதாபத்துகுரிய பலரை எனது மருத்துவ அனுபவத்தில் கண்டுள்ளேன்.
இரவு கடைவியாபாரிகள், வணிக முகவர்கள், காவலர்கள், ஷிப்டு முறையில் வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளர்கள், பேருந்து மற்றும் பிற வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என எவருக்கும் எந்த மருத்துவம் பார்த்தாலும் உடலையும், மனதையும் சரிசெய்ய முடியாத நிலை.

உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் நிலையோ கண்ணீர் விடவைக்கும். வெளியில் ஆடம்பரமாக அதிகாரமாக இருக்கும் இவர்களது உண்மை நிலை மிகவும் வருந்துதற்குரியது.

நோய் முற்றிய நிலையில் படுத்துக் கொண்டு தாங்கள் இதுவரை ஓடியாடி ஈட்டிய பொருளை வைத்தியம் என்ற பெயரில் இழக்கும் போது கூட இவர்களுக்கு தெளிவு பிறப்பதில்லை.

பிழைக்க மாட்டார் ஆனால் எங்களை விட்டால் வேறு வழி இல்லை என ஆங்கில மருத்துவம் தங்கள் விளம்பரங்களால் மக்களை நம்ப வைத்து விட்டது. அதனால், சுய சிந்தனையை இழந்த சொந்தமும், சுற்றமும் நோயுற்றவர் மீது உண்மையான அக்கறை கொள்வதில்லை. நோய் தீர்ப்பதற்கு உதவுவதை விடத் தான் எவ்வளவு செலவழித்தேன் என பிறரிடம் பெருமைப்படத்தான் தந்தை தாயிலிருந்து, மகன், மகள், மனைவி, கணவன், நண்பர்கள் வரை விரும்புகின்றனர்.

இந்த நிலையிலும் கல்வி, மருத்துவம், அறிவியல், பாதுகாப்பு, ஆன்மீகம், முன்னேற்றம் எனப் பெருமைப்படுவதற்கு குறைவில்லை. தங்கள் பிள்ளைகளையும் தங்களின் பெருமை பிடித்த சிந்தனைகளுக்குப் பலிகடாவாகத் தயாரிக்க மிகுதிப் பணத்தைச் செலவிடுகின்றனர்.

இந்த நவீன கலவியாளர்களால் - அறிவியல் அறிஞர்களால் நாம் பெற்றது என்ன?

எல்லாவற்றிலும் நஞ்சு, நிம்மதி இல்லாத, ஓய்வில்லாத வாழ்க்கை, வசதிகள் என்ற பெயரில் சுற்றுச்சூழலையும், உடல் மனநலத்தையும் அழிக்கும் ஆடம்பரங்கள்.

உடல் நலம் என்பதற்கான அடிப்படையே அறியாத, எந்த நோயையுமே தீர்க்கமுடியாத, எந்த உண்மையும் இல்லாத வீண்பெருமை பிடித்த நவீனமருத்தும்.. உடலின் ஐந்து மூலகச் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)  செயல்பாடுகளைக் கூட அறியாத ஆங்கில மருத்துவம் நம் முன்னோர்கள் கண்டு அறிந்து பயன்படுத்திய உடல் சத்திகளைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள். நம் மக்கள் அறிந்து வாழ்ந்த நோயற்ற வாழ்வின் நுட்பங்களை அறியாதவர்கள்.

உண்மை என்னவெனில் நமது மக்களின் வாழ்வின் அடிநாதமாக விளங்கிய உடல் நல நுட்பங்களை தங்கள் விளம்பரத்தாலும், அடக்குமுறைகளாலும், வஞ்சகமான கல்வி முறைகளாலும் நமக்கு அன்னியமாக்கிய பின் தான் இப்போதய கேடுகள் நம்மையும் நம் மண்ணையும் சீரழிக்க முடிந்தது. இதற்காக இந்த அழிவு வணிகர்கள் நீண்ட காலம் மறைமுக யுத்தம் நடத்தியிருக்கிறார்கள். இந்த வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, வெள்ளை வணிகர்கள் ஆட்சி நமது சித்த மருத்துவத்துக்கு எதிராக பயன் படுத்திய சட்டங்கள். மருத்துவச்சிகளுக்குச் செய்த கொடுமைகள்,. நூலகங்களை அழித்தது, மிக்பெரிய மருந்து செய்நிலையங்களை கலைத்தது. நமது காடுகளையும், மலைகளையும் கவருவதற்காக நம்மீது திட்டமிட்டு க்ட்டாயப் படுத்தி தேனீர் பழக்கத்தையும், பேக்கரி கலாச்சாரத்தையும் விதைத்தது.

தற்போதுள்ள கொள்ளை வணிகர்களின் சார்பு ஆட்சி கொண்டுவரும் புரட்சித் திட்டங்கள் முன்பு இருந்த கொடுமைகள் பரவாயில்லை என கூறும் நிலைக்கு நமது உயிர் ஆதாரங்களையே அழிவு நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

உடலின் அறிவையும், மொழியையும் அறியாதவர்களிடம் வர்ம மற்றும் அக்குபங்சர் சத்திஓட்டத்தையோ அதன் பாதைகளையோ அறியாதவர்கள் கத்தியை எடுக்க அனுமதித்திருப்பது வினோதம்.

உடல் கருவிகளையும், உறுப்புகளையும், பணத்தையும் இழந்து குற்றுயிராகி பின் என்னிடம் மருத்துவம் பெற வரும் பலரிடம் கேட்டிருக்கிறேன் ‘ஆங்கில மருத்துவம் எந்த நோயைத் தீர்க்கமுடியாதென தங்களுக்குத் தெரியும் என்றும், பக்கவிளைவுகள் உள்ளதென்பதும் தெரியுமென்றும், ஆனாலும் வேறு வழி இல்லாமல் அங்கு சென்றதாகக் கூறுவார்கள். ஆபத்து காலத்தில் இதை விட்டால் வேறு வழி இல்லை என்றும் கூறுவார்கள்.

நான் கேட்கிறேன் உங்கள் கணிணி பழுதடைந்தால் அவசரத்துக்கு பக்கத்தில் உள்ள கொல்லரின் பட்டரைக்காவது, அல்லது கொத்தனாரிடமாவது கொண்டு போய் கொடுப்பீர்களா? அதை விடக் கொடுமை தான் உடல் சத்திகளை அறவே அறியாத பெருமை பிடித்தவர்களிடம் உடலைக் கொடுப்பது.

சுற்றுச் சூழலை மீட்க முடியாத வகையில் (அணுஉலை, அணைக்கட்டுகள், பிளாஸ்டிக் போன்றவை). அழிக்கும் உற்பத்தி முறைகள்.

உணவையும், நீரையும், மண்ணையும், உழவனையும் நஞ்சாக்கி விட்ட நவீன விவசாய துறை.

நகரத்தில் உள்ள நகர நிர்மான முறை டயபரை மாற்றாத குழந்தை போல நாறிக கிடக்கிறது. ஆனால் அக்குழந்தைக்கு ஸ்டெரிலைஸ் பன்னின கரண்டியில் சாப்பாடு ஊட்டும், தன் பெற்றோரை மதிக்காத தாய் போல நகராட்சிகள் புண்ணுக்கு புணுகு பூசுகின்றன.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்ட இளநீர், பழங்கள், பால், கீரை, தானியங்கள், எண்ணெய், தண்ணீர் மற்றும் பிற உணவின் சுவையும், தரமும் இப்பொழுது நமக்கு கிடைக்கும் உணவின் சுவையும், தரமும் எவ்வளவு வித்தியாசம் என்பது உணர்வுள்ள பெரியவர்களுக்குத் தெரியும். முந்தையது அமுதம் என்பவர்க்கு தற்போதய உணவு நஞ்சு தான்.

முன்னேற்றம், நவீனம், சிறப்புத் தொழில் நுட்பம், வீரியமானது, பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, முற்போக்கு, அறிவியல் என்பது எல்லாம் என்ன? இதெல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்?

மிகப்பெரிய கொடுமையின் கூத்தாக அல்லவா உள்ளது இன்றைய படிப்பறிவு.

தற்போதுள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராளிகளும், முற்போக்காளர்களும், புரட்சிகர வர்க்க விடுதலை பேசுவோரும், பகுத்தறிவாளர்களும் முதலில் செய்ய வேண்டுவது என்ன?
·         
முதலில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் இந்த கேடான கல்வியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டும்.

·         பெரிதாக எதுவும் மாறாவிட்டாலும் குறைந்த அளவு பள்ளி, கல்லூரிகளின் வேலை நேரம் மூன்று மணிநேரத்துக்கு அதிகமாக இருக்க்க் கூடாது. காலையில் 10 மணிக்கு ஆரம்பித்தால் 1 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும். பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளதே.

·         வாழ்க்கையை அனுபவிக்க எல்லோருக்கும் நேரம் வேண்டும். உடலை, மனதை புதுப்பித்து நலமாக வைத்துக்கொள்ள நேரம் வேண்டும். விளையாடவும், பிற மனிதர்களிடம் பழகவும் நேரம் வேண்டும்.

·         பொருளீட்டுவது வாழ்வதற்காக, பொருளீட்டுவதே வாழ்க்கை அல்ல. கல்வி நிம்மதியான, அமைதியான, ஓய்வான, சுகமான, நலமான வாழ்வைத் தருவதாக இருக்க வேண்டும். நலவாழ்வைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது.

·         தன் உடல் மன நலம் பற்றிய அறிவு, தான் வாழும் சூழல் பற்றிய அறிவு, இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு, நல்லொழுக்கங்கள் அடிப்படைக் கலவியில் இருக்க வேண்டும்
.
·         எந்த வேலையாக இருந்தாலும் சில நாள் அல்லது சில மாத பயிற்சி போதுமே. ஏன் வாழ்நாளை பயனிலா படிப்பில் இழக்க வேண்டும்.

தன் வாழ்க்கையில் பிடிப்பில்லாத, தன் உடல் மன நலமில்லா மனிதன் பிறருக்கான எதையும் சரியாகச் சிந்திக்கவே இயலாது. தன்னை உணராத தனது நலத்தை அறியாத எவரும் பிறரால் எளிதாக கையாளப்படுவர். 

அதனால் தான் மக்களின் எதிரிகள் நம் மண்ணில் வேரூண்றுவதற்காக  இந்த அடிமைக் கல்வியை உருவாக்கினர்.இப்போது அதன் முழு பலனையும் சொகுசாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது குழந்தைகளும் நாமும் அதன் முழுமையான கேடுகளையும் அனுபவித்து வருகிறோம்.

இரண்டாவதாக,

இந்திய மருத்துவ மற்றும் அழகுசாதன சட்டம் பிரிவு   SCHEDULE J 51படி  ஆங்கில மருத்துவம் குணப்படுத்த அறியாத, தடுக்க அறியாத நோய்களுக்கு  மருத்துவம் பார்ப்பது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. 

இது மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்பட்ட ஆங்கில மருத்துவமும், அதன் மருத்துவர்களும் தாங்கள் அறியாத நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் என விளம்பரப்படுத்திக் கொள்வதை உடனே தடுக்க வேண்டும்.

 மீறி விளம்பரம் செய்பவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனைகள் வழங்க வேண்டும். ஆங்கில மருத்துவம் மேற்படி நோய்களுக்கு மக்களை ஏமாற்றி மருத்துவம் செய்வது  போல நடித்து  செய்யும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.

இந்த சட்டம் மக்களுக்குத் தெரிவிக்கப்படாமல் இருப்பதால் பொது மக்களின் உயிரும், உடமைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. 

நோய்கள் பெருத்துப்போய் கடும் துன்பத்தில் மக்கள் உழல்கின்றனர். மருத்துவம் என்ற பெயரில் மிகப் பெரிய மோசடிகள் நடப்பதை மக்களிடம் உணர்த்தி அதன் மூலம் அரசுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இங்கு நமது சித்த மருத்துவர்களையும் பற்றியும் கூற வேண்டியுள்ளது. பாரம்பரிய மருத்துவர்கள் மருந்துகள் செய்வதில் திறமையுள்ளவர்கள் தான். அனால், சித்தர்களிடம் இருந்த விழிப்புணர்வும், சமுதாய அக்கறையும், விடுதலை உணர்வும் இல்லாதவர்களாக உள்ளனர்.

தமது மருத்துவத்தின் அடிப்படை உண்மைகளை அறியாததால், உடல் அறிவுக்கு நேர் எதிரான  ஆங்கில மருத்துவத்தின் சோதனை முறை கணக்குகளை சரிசெய்ய தங்கள் வாழ்நாளை வீணாக்கி அந்த ஆங்கில மருத்துவத்துக்கே தானும் பலியான சித்த மருத்துவ மேதைகள் தான் இப்பொழுது அதிகம்..

படித்த அல்லோ சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களிலும் கேடானவர்களே. இவர்கள் ஆங்கில மருத்துவ கணக்குகளை சரிசெய்ய தமது படிப்பறிவை பயன்படுத்துபவர்கள் அவ்வளவே.

இந்த இரண்டு வேலைகளையும் முதல் மற்றும் முக்கிய வேலைகளாக மக்கள் நல விரும்பிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவர்கள் எளிய மக்கள் மருத்துவங்களை மக்களிடமிருந்து தேடித் தொகுத்துத் தந்து மக்களை தங்கள் சொந்த காலில் நிற்க பழக்க வேண்டும்.

இவர்கள் செய்யத் தவறி விட்டதை மக்கள் தாமே செய்யும் நாள் விரைவில் வரும். உதாரணம் இடிந்தகரை. கூடங்குளத்தில் மக்கள் விழிப்படைந்து அழிவியலுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக செய்யும் உயிர்ப் போராட்டம்.....

 இது  தொடர்ந்தால் நாம் அனைவரும் நலம் பெறுவோம் .... வீக்கத்தை 

வளர்ச்சி என்னும் மாயையிலிருந்து விடுபடுவோம்......


தங்கள் கருத்துகள் எனது பார்வையை தேளிவாக்கட்டும்.

அன்பை மறவா,

தமிழவேள் நளபதி