வெள்ளி, 6 ஜனவரி, 2012

தமிழர் நலவாழ்வு பெற செய்ய வேண்டியது...


தமிழர் நலவாழ்வு பெற செய்ய வேண்டியது...

தற்போதைய கல்வி,  கல்வி முறையால் நமது குழந்தைகள் தமக்கும், மனித சமூகத்துக்கும், இயற்கைக்கும் எதிராக உருவாக்கப்படுகிறார்கள்.. இவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே தன்நலமும், மனித நேயமும் இல்லாதவர்களாக வளர்க்கப் படுகிறார்கள்.

இப்போதுள்ள கல்விமுறையை உருவாக்குபவர்கள், பெற்றோர்களின் நோக்கம் வணிகம்-பொருளீட்டுவது.

இயற்கையோடு, பிற மனிதரோடு, இயைந்து வாழும் கலையை, அறிவியலை இவர்கள் அணுவளவும் அறிந்தவர்களில்லை. இந்த கல்வி கற்கும் குழந்தைகள் நாளை பெற்றோர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் கூட பயற்றவர்களாகவே இருப்பார்கள்.

இன்று பள்ளிக்குச் செல்லும் மிகப் பெரும்பாலான சிறு குழந்தைகள் சைனஸ், தலைவலி, பார்வைக் குறைவு, வயிற்றுக் கோளாறுகள், மூட்டுவலிகள், உடல் பலவீனம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் அயல்மொழியைப் பாடமொழியாக எடுத்த குழந்தைகள் நிலை மேலும் மோசம்.

எட்டாம் வகுப்பைத் தாண்டுமுன் பெரும்பாலான குழந்தைகள்  இளைப்பு, ஈளை, ஆஸ்துமா நோயாளிகளாகி விடுகிறார்கள்.  கல்லீரல் பலவீனத்தால் கண்ணாடி அணிந்து விடுகிறார்கள். பெண் குழந்தைகளில் சைனஸ், கர்ப்பப் பை கோளாறில்லாதவர்கள் எவருமில்லை எனும் நிலை.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளின் உடல், மனநிலையை அறியாதிருப்பதோ பெரும் கொடுமை.

கல்லூரியில் சேர்ந்தால் நமக்கு சிறிது விடுதலை கிடைக்கும் என நம்பி படிக்கும் மாணவர்களுக்கு அங்கு கிடைப்பது மிகப்பெரும் ஏமாற்றமே. பெரும் உடல், மனநலக் குறைபாடுகளையே, கல்லூரிப் பருவம் தருகிறது.

தொழில் கல்லூரி மாணவர்கள் காலை 7.00 மணியிலிருந்து இரவு 1.00 மணிக்கும் மேல் இவர்கள் படிக்க வேண்டியுள்ளது. விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் நிலை இன்னும் மோசம்.

வேலை அல்லது தொழில் தொடங்குவதற்குள் பெருமளவு கடனாளியாகவும், உடல் நலக்குறைவால் கட்டுண்டவராகவும், மனதளவில் ஊன்றுகோல் தேடுபவராகவும் மாறிவிடுகிறார்.

பள்ளிக்கு அல்லது வேலைக்கு அனுப்பும் பெற்றோர் குறிப்பாக தாய்மாரின் உடல் நிலையோ இவர்களை விட மோசம். காலை 4 மணிக்கு எழுந்து சமையல் ஆரம்பித்தால் குறைந்தது 9.30 வரை சமையல் வேலை. அது போல இரவு ஷிப்ட் முடிந்து 1 மணிக்கும் மேல் வேலையிலிருந்து திரும்பும் குழந்தைகள், கணவனுக்காக காத்திருந்து கவலை, மன உளைச்சல் என நரக வேதனை.

இவர்கள் எவ்வளவு சம்பாதித்தும் என்ன பயன்?
.
குழந்தைப்பருவம், இளமையைத் தொலைத்துக் கற்ற கல்வி நடைமுறை வாழ்வில் எந்தப் பயனும் இல்லாததை பார்க்கிறார்கள். 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் கற்ற கல்விக்குப் பொருந்தாத பிழைப்புகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.

படித்த்தற்கு ஏற்ற வேலை கிடைத்தவர்கள் வாழ் நாள் முழுவதும் அந்த வேலைக்குத் தங்களைப் பொருத்தமானவர்களாக ஆக்கிக் கொள்ள மீண்டும் படித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

எவ்வளவு வருவாய் வந்தாலும் அதற்கு மேல் கடன் வாங்கி, பொறுப்புகளுக்கு ஆளாகி, எந்த சூழலிலும் அந்த வேலையை விட முடியாதபடி கட்டுண்டு போகிறார்கள்.

இந்த கேடுகளுக்கு அடிப்படைக் காரணம்...

இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உடல்நல, மனநல விதிகளை அறியாதவர்களாகவும், அறிந்தவர்கள் கடைப்பிடிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர்.

உடல் நலத்திற்கு அடிப்படையான காலைக்கடன்களை இவர்களது வேலைச் சுமையால் முறையாக செய்ய முடிவதில்லை. கழிவுகளை வெளியேற்றுவதில் கவம் செலுத்தாததால் இவர்களது முழு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு விடுகிறது.

உதாரணத்துக்கு, தகவல் தொழில் நுட்பத் துறையில் கணிணியில் பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள். இந்த வேலை தனது உடலுக்குப் பொருந்தாது என்பதை அறிந்தாலும், விட்டு விலகமுடியாத பரிதாபத்துகுரிய பலரை எனது மருத்துவ அனுபவத்தில் கண்டுள்ளேன்.
இரவு கடைவியாபாரிகள், வணிக முகவர்கள், காவலர்கள், ஷிப்டு முறையில் வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளர்கள், பேருந்து மற்றும் பிற வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என எவருக்கும் எந்த மருத்துவம் பார்த்தாலும் உடலையும், மனதையும் சரிசெய்ய முடியாத நிலை.

உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் நிலையோ கண்ணீர் விடவைக்கும். வெளியில் ஆடம்பரமாக அதிகாரமாக இருக்கும் இவர்களது உண்மை நிலை மிகவும் வருந்துதற்குரியது.

நோய் முற்றிய நிலையில் படுத்துக் கொண்டு தாங்கள் இதுவரை ஓடியாடி ஈட்டிய பொருளை வைத்தியம் என்ற பெயரில் இழக்கும் போது கூட இவர்களுக்கு தெளிவு பிறப்பதில்லை.

பிழைக்க மாட்டார் ஆனால் எங்களை விட்டால் வேறு வழி இல்லை என ஆங்கில மருத்துவம் தங்கள் விளம்பரங்களால் மக்களை நம்ப வைத்து விட்டது. அதனால், சுய சிந்தனையை இழந்த சொந்தமும், சுற்றமும் நோயுற்றவர் மீது உண்மையான அக்கறை கொள்வதில்லை. நோய் தீர்ப்பதற்கு உதவுவதை விடத் தான் எவ்வளவு செலவழித்தேன் என பிறரிடம் பெருமைப்படத்தான் தந்தை தாயிலிருந்து, மகன், மகள், மனைவி, கணவன், நண்பர்கள் வரை விரும்புகின்றனர்.

இந்த நிலையிலும் கல்வி, மருத்துவம், அறிவியல், பாதுகாப்பு, ஆன்மீகம், முன்னேற்றம் எனப் பெருமைப்படுவதற்கு குறைவில்லை. தங்கள் பிள்ளைகளையும் தங்களின் பெருமை பிடித்த சிந்தனைகளுக்குப் பலிகடாவாகத் தயாரிக்க மிகுதிப் பணத்தைச் செலவிடுகின்றனர்.

இந்த நவீன கலவியாளர்களால் - அறிவியல் அறிஞர்களால் நாம் பெற்றது என்ன?

எல்லாவற்றிலும் நஞ்சு, நிம்மதி இல்லாத, ஓய்வில்லாத வாழ்க்கை, வசதிகள் என்ற பெயரில் சுற்றுச்சூழலையும், உடல் மனநலத்தையும் அழிக்கும் ஆடம்பரங்கள்.

உடல் நலம் என்பதற்கான அடிப்படையே அறியாத, எந்த நோயையுமே தீர்க்கமுடியாத, எந்த உண்மையும் இல்லாத வீண்பெருமை பிடித்த நவீனமருத்தும்.. உடலின் ஐந்து மூலகச் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)  செயல்பாடுகளைக் கூட அறியாத ஆங்கில மருத்துவம் நம் முன்னோர்கள் கண்டு அறிந்து பயன்படுத்திய உடல் சத்திகளைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள். நம் மக்கள் அறிந்து வாழ்ந்த நோயற்ற வாழ்வின் நுட்பங்களை அறியாதவர்கள்.

உண்மை என்னவெனில் நமது மக்களின் வாழ்வின் அடிநாதமாக விளங்கிய உடல் நல நுட்பங்களை தங்கள் விளம்பரத்தாலும், அடக்குமுறைகளாலும், வஞ்சகமான கல்வி முறைகளாலும் நமக்கு அன்னியமாக்கிய பின் தான் இப்போதய கேடுகள் நம்மையும் நம் மண்ணையும் சீரழிக்க முடிந்தது. இதற்காக இந்த அழிவு வணிகர்கள் நீண்ட காலம் மறைமுக யுத்தம் நடத்தியிருக்கிறார்கள். இந்த வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, வெள்ளை வணிகர்கள் ஆட்சி நமது சித்த மருத்துவத்துக்கு எதிராக பயன் படுத்திய சட்டங்கள். மருத்துவச்சிகளுக்குச் செய்த கொடுமைகள்,. நூலகங்களை அழித்தது, மிக்பெரிய மருந்து செய்நிலையங்களை கலைத்தது. நமது காடுகளையும், மலைகளையும் கவருவதற்காக நம்மீது திட்டமிட்டு க்ட்டாயப் படுத்தி தேனீர் பழக்கத்தையும், பேக்கரி கலாச்சாரத்தையும் விதைத்தது.

தற்போதுள்ள கொள்ளை வணிகர்களின் சார்பு ஆட்சி கொண்டுவரும் புரட்சித் திட்டங்கள் முன்பு இருந்த கொடுமைகள் பரவாயில்லை என கூறும் நிலைக்கு நமது உயிர் ஆதாரங்களையே அழிவு நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

உடலின் அறிவையும், மொழியையும் அறியாதவர்களிடம் வர்ம மற்றும் அக்குபங்சர் சத்திஓட்டத்தையோ அதன் பாதைகளையோ அறியாதவர்கள் கத்தியை எடுக்க அனுமதித்திருப்பது வினோதம்.

உடல் கருவிகளையும், உறுப்புகளையும், பணத்தையும் இழந்து குற்றுயிராகி பின் என்னிடம் மருத்துவம் பெற வரும் பலரிடம் கேட்டிருக்கிறேன் ‘ஆங்கில மருத்துவம் எந்த நோயைத் தீர்க்கமுடியாதென தங்களுக்குத் தெரியும் என்றும், பக்கவிளைவுகள் உள்ளதென்பதும் தெரியுமென்றும், ஆனாலும் வேறு வழி இல்லாமல் அங்கு சென்றதாகக் கூறுவார்கள். ஆபத்து காலத்தில் இதை விட்டால் வேறு வழி இல்லை என்றும் கூறுவார்கள்.

நான் கேட்கிறேன் உங்கள் கணிணி பழுதடைந்தால் அவசரத்துக்கு பக்கத்தில் உள்ள கொல்லரின் பட்டரைக்காவது, அல்லது கொத்தனாரிடமாவது கொண்டு போய் கொடுப்பீர்களா? அதை விடக் கொடுமை தான் உடல் சத்திகளை அறவே அறியாத பெருமை பிடித்தவர்களிடம் உடலைக் கொடுப்பது.

சுற்றுச் சூழலை மீட்க முடியாத வகையில் (அணுஉலை, அணைக்கட்டுகள், பிளாஸ்டிக் போன்றவை). அழிக்கும் உற்பத்தி முறைகள்.

உணவையும், நீரையும், மண்ணையும், உழவனையும் நஞ்சாக்கி விட்ட நவீன விவசாய துறை.

நகரத்தில் உள்ள நகர நிர்மான முறை டயபரை மாற்றாத குழந்தை போல நாறிக கிடக்கிறது. ஆனால் அக்குழந்தைக்கு ஸ்டெரிலைஸ் பன்னின கரண்டியில் சாப்பாடு ஊட்டும், தன் பெற்றோரை மதிக்காத தாய் போல நகராட்சிகள் புண்ணுக்கு புணுகு பூசுகின்றன.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்ட இளநீர், பழங்கள், பால், கீரை, தானியங்கள், எண்ணெய், தண்ணீர் மற்றும் பிற உணவின் சுவையும், தரமும் இப்பொழுது நமக்கு கிடைக்கும் உணவின் சுவையும், தரமும் எவ்வளவு வித்தியாசம் என்பது உணர்வுள்ள பெரியவர்களுக்குத் தெரியும். முந்தையது அமுதம் என்பவர்க்கு தற்போதய உணவு நஞ்சு தான்.

முன்னேற்றம், நவீனம், சிறப்புத் தொழில் நுட்பம், வீரியமானது, பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, முற்போக்கு, அறிவியல் என்பது எல்லாம் என்ன? இதெல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்?

மிகப்பெரிய கொடுமையின் கூத்தாக அல்லவா உள்ளது இன்றைய படிப்பறிவு.

தற்போதுள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராளிகளும், முற்போக்காளர்களும், புரட்சிகர வர்க்க விடுதலை பேசுவோரும், பகுத்தறிவாளர்களும் முதலில் செய்ய வேண்டுவது என்ன?
·         
முதலில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் இந்த கேடான கல்வியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டும்.

·         பெரிதாக எதுவும் மாறாவிட்டாலும் குறைந்த அளவு பள்ளி, கல்லூரிகளின் வேலை நேரம் மூன்று மணிநேரத்துக்கு அதிகமாக இருக்க்க் கூடாது. காலையில் 10 மணிக்கு ஆரம்பித்தால் 1 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும். பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளதே.

·         வாழ்க்கையை அனுபவிக்க எல்லோருக்கும் நேரம் வேண்டும். உடலை, மனதை புதுப்பித்து நலமாக வைத்துக்கொள்ள நேரம் வேண்டும். விளையாடவும், பிற மனிதர்களிடம் பழகவும் நேரம் வேண்டும்.

·         பொருளீட்டுவது வாழ்வதற்காக, பொருளீட்டுவதே வாழ்க்கை அல்ல. கல்வி நிம்மதியான, அமைதியான, ஓய்வான, சுகமான, நலமான வாழ்வைத் தருவதாக இருக்க வேண்டும். நலவாழ்வைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது.

·         தன் உடல் மன நலம் பற்றிய அறிவு, தான் வாழும் சூழல் பற்றிய அறிவு, இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு, நல்லொழுக்கங்கள் அடிப்படைக் கலவியில் இருக்க வேண்டும்
.
·         எந்த வேலையாக இருந்தாலும் சில நாள் அல்லது சில மாத பயிற்சி போதுமே. ஏன் வாழ்நாளை பயனிலா படிப்பில் இழக்க வேண்டும்.

தன் வாழ்க்கையில் பிடிப்பில்லாத, தன் உடல் மன நலமில்லா மனிதன் பிறருக்கான எதையும் சரியாகச் சிந்திக்கவே இயலாது. தன்னை உணராத தனது நலத்தை அறியாத எவரும் பிறரால் எளிதாக கையாளப்படுவர். 

அதனால் தான் மக்களின் எதிரிகள் நம் மண்ணில் வேரூண்றுவதற்காக  இந்த அடிமைக் கல்வியை உருவாக்கினர்.இப்போது அதன் முழு பலனையும் சொகுசாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது குழந்தைகளும் நாமும் அதன் முழுமையான கேடுகளையும் அனுபவித்து வருகிறோம்.

இரண்டாவதாக,

இந்திய மருத்துவ மற்றும் அழகுசாதன சட்டம் பிரிவு   SCHEDULE J 51படி  ஆங்கில மருத்துவம் குணப்படுத்த அறியாத, தடுக்க அறியாத நோய்களுக்கு  மருத்துவம் பார்ப்பது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. 

இது மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்பட்ட ஆங்கில மருத்துவமும், அதன் மருத்துவர்களும் தாங்கள் அறியாத நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் என விளம்பரப்படுத்திக் கொள்வதை உடனே தடுக்க வேண்டும்.

 மீறி விளம்பரம் செய்பவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனைகள் வழங்க வேண்டும். ஆங்கில மருத்துவம் மேற்படி நோய்களுக்கு மக்களை ஏமாற்றி மருத்துவம் செய்வது  போல நடித்து  செய்யும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.

இந்த சட்டம் மக்களுக்குத் தெரிவிக்கப்படாமல் இருப்பதால் பொது மக்களின் உயிரும், உடமைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. 

நோய்கள் பெருத்துப்போய் கடும் துன்பத்தில் மக்கள் உழல்கின்றனர். மருத்துவம் என்ற பெயரில் மிகப் பெரிய மோசடிகள் நடப்பதை மக்களிடம் உணர்த்தி அதன் மூலம் அரசுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இங்கு நமது சித்த மருத்துவர்களையும் பற்றியும் கூற வேண்டியுள்ளது. பாரம்பரிய மருத்துவர்கள் மருந்துகள் செய்வதில் திறமையுள்ளவர்கள் தான். அனால், சித்தர்களிடம் இருந்த விழிப்புணர்வும், சமுதாய அக்கறையும், விடுதலை உணர்வும் இல்லாதவர்களாக உள்ளனர்.

தமது மருத்துவத்தின் அடிப்படை உண்மைகளை அறியாததால், உடல் அறிவுக்கு நேர் எதிரான  ஆங்கில மருத்துவத்தின் சோதனை முறை கணக்குகளை சரிசெய்ய தங்கள் வாழ்நாளை வீணாக்கி அந்த ஆங்கில மருத்துவத்துக்கே தானும் பலியான சித்த மருத்துவ மேதைகள் தான் இப்பொழுது அதிகம்..

படித்த அல்லோ சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களிலும் கேடானவர்களே. இவர்கள் ஆங்கில மருத்துவ கணக்குகளை சரிசெய்ய தமது படிப்பறிவை பயன்படுத்துபவர்கள் அவ்வளவே.

இந்த இரண்டு வேலைகளையும் முதல் மற்றும் முக்கிய வேலைகளாக மக்கள் நல விரும்பிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவர்கள் எளிய மக்கள் மருத்துவங்களை மக்களிடமிருந்து தேடித் தொகுத்துத் தந்து மக்களை தங்கள் சொந்த காலில் நிற்க பழக்க வேண்டும்.

இவர்கள் செய்யத் தவறி விட்டதை மக்கள் தாமே செய்யும் நாள் விரைவில் வரும். உதாரணம் இடிந்தகரை. கூடங்குளத்தில் மக்கள் விழிப்படைந்து அழிவியலுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக செய்யும் உயிர்ப் போராட்டம்.....

 இது  தொடர்ந்தால் நாம் அனைவரும் நலம் பெறுவோம் .... வீக்கத்தை 

வளர்ச்சி என்னும் மாயையிலிருந்து விடுபடுவோம்......


தங்கள் கருத்துகள் எனது பார்வையை தேளிவாக்கட்டும்.

அன்பை மறவா,

தமிழவேள் நளபதி



5 கருத்துகள்:

  1. இன்று கிடைக்கும் பாரம்பரிய மருத்துவர்களின் திறமை என்பது அரைகுறையாகவே இருக்கிறது. இதைவிட ஓரளவுக்கு திறமையான ஆங்கில மருத்துவர் எவ்வளவோ மேல்.

    மக்கள் பெரும்பாலும் ஆங்கில மருத்துவர்களை நாட காரணம் அவர்கள்தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள் என்பதுதான். காய்ச்சல், தலைவலி மற்றும் அன்றாடம் வரும் சில பிரச்சினைகளுக்கு ஒரு ஊசியோ மாத்திரையோ கொடுத்து சரி செய்யும் ஆங்கில மருத்துவம்தான் தேவை எனவும் எண்ணுகிறார்கள். பலருக்கு நம் பாரம்பரிய மருந்துகள் வேலை செய்வதில்லை. அது வேலைசெய்ய தனியாக மருந்து கொடுத்து சாப்பிடும் அவலமும் இங்கு இருக்கிறது. மேலும் பக்க விளைவுகள் எல்லா மருந்திலும் இருக்கிறது. அதைத் தாங்குமளவுக்கு நம் உடலை பலப்படுத்த வேண்டியதுதான்.

    இன்றைய உடனடி தேவை, மக்களுக்கு உண்மையான அக்கரையுடன் சேவை செய்ய நினைக்கும் மருத்துவர்கள்தான். அது எந்த முறை மருத்துவமானாலும் ஒரு ஆத்மார்த்தமான கவனிப்பு இருந்தால் அது எல்லா வியாதிக்கும் ஒரு கிரியா ஊக்கியாக வேலை செய்யும் என்பது என் கணிப்பு.


    மேலும் பாரம்பரிய மருந்துகள் அதே முறையில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுவதில் இருக்கும் சிரமம் மிக அதிகம். என்னைக் கேட்டால் இப்படிப்பட்ட மருந்துகள் கிடைப்பதில்லை என்றே சொல்வேன். இன்று கிடைக்கும் மூலிகைகளில் எத்தனை வகை அதே வீரியத்துடன் வேலை செய்கின்றன. கேள்விக் குறிதான்.

    இந்த சூழலில் பாரம்பரிய வைத்தியத்தை மீட்பது என்பது மருத்துவக் கல்வியில் இருந்து மருந்து தயாரித்து அளிப்பது வரை சிறந்த வல்லுநர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். நடக்கும் என்று நம்புவோம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. மருத்துவர்களின் திறமை என்பது பணம் சம்பாதிப்பதில் என்றால் ஆங்கில மருத்துவர்கள் திறமையானவர்கள் தான்.

    மக்கள் இந்த வணிகர்களை மருத்துவர் என எண்ணி இழப்பதற்கு காரணம் மக்கள் தங்களின் நலவாழ்வு குறித்த அறிவை இழந்தது தான்.

    தமது அனைறாட வாழ்வியல் முறையை நலவாழவுக்கான முறையாக வைத்திருந்த்தனர் தமிழ் வழி வந்த உலக மக்கள.

    பக்க விளைவு என்பது உயிராற்றலுக்கு எதிராகச் செல்லும் ஆங்கில மருத்துவத்துக்கும். அதன் வழிகேட்டில் செல்லும் பிற மருத்துவர்களுக்கும் தான். இவர்கள் தங்கள் முறைக்கு தீங்கு இழைக்கிறார்கள்.

    நிபுனர்கள் தேவையில்லை நண்பரே. ஒவ்வொரு வீட்டில் உள்ள பெரியவர்களும் மதிக்கப்பட்டால் எல்லோரும் நிபுனர் தான்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி.

    பதிலளிநீக்கு
  3. சங்கர் குருசாமி அவர்கள் உடல் நலமாவதை விட மருந்து வேலை செய்வதை பற்றியே அதிகம் கவலை படுவதாக தெரிகிறது...

    இரண்டாம் உலகப்போரின் மிச்ச சொச்சமான இரசாயனங்களே மருந்தாகவும் உரமாகவும் அவதரித்து நம்மை அழித்து வருகின்றன...

    Post mortem செய்ய மட்டுமே லாயக்கான அல்லது மென்மையாக சொல்ல வேண்டுமானால் உடலின் பாகங்களை குறிக்கும் படிப்பை படிப்பவர்களை மருத்துவர்கள் என்று ஒப்புக்கொள்வதால் தான் உடலில் சக்தி ஓட்டத்தை அறிந்த மருத்துவர்கள் வழக்கொழிந்து போகிறார்கள்......

    ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் ஒரு நெல் வகை இருந்த நாடு இது....ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு இட/சுற்று சூழலுக்கும் ஏற்ற மருந்துகளே நமக்கு உற்றது , சளி தொல்லைக்கு ஒருவருக்கு தூது வளை, ஒருவருக்கு துளசி, ஒருவருக்கு வால் மிளகு, ஒருவருக்கு முருங்கை இலை, என எது ஒத்துக்கொள்ளுமோ , அதுவே சரி செய்யும்....அது எங்கோ பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அங்கிருந்து செய்யப்பட்டு குளிர் பதனப்பட்டு (பிணவறையில் வைப்பது போல) வந்து, எப்படி நமது உயிரோட்டத்தை சரி செய்ய முடியும் !!! கண் முன்னர் செய்த உணவே ஒரு 12 மணி நேரம் தாங்குவதில்லை..... இந்த பிணவறை மருந்துகளை பற்றி எண்ணிப்பாருங்கள்.....

    எங்கோ ஒரு மூலையில் ஒரு நூறு பேரை (அல்லது நூறு எலியை) வைத்து ஆராய்ச்சி செய்து, ஒரு மருந்தை கண்டு பிடித்து அதை உலகம் முழுமைக்கும் "தரம்" என்று சொல்லி மனித குலத்தையே சீரழிக்கிறார்கள்.....இந்த முறையால் ஒரு நோயாவது (அவர்கள் பெயர் வைத்த) சரி செய்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்....அவர்கள் சரி செய்ய முனைந்த நோய்களை விட உருவாக்கிய நோய்கள் தான் அதிகம்...

    கடந்த இருபது நாட்களில் எனது அலுவலகத்தில் இருவர் தனது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள்....ஒரு பெண் 13 வயது - LIVER TRANSPLANT என்று சொல்லி பல லட்சம் செலவு செய்து....மற்றொரு பெண் 17 வயது - புற்று நோயால்..... இதுவா வைத்தியம்..... இது மட்டுமல்ல, எளிய முறையில் சரி செய்யக்கூடிய நீர்க்கோர்வையை , மூளையில் கட்டி என்று அறுத்து எடுத்து, மேலும் நீர் சேராமல் இருக்க, நீர் சேகரிக்க தலையிலிருந்து உடல் உள்ளே குழாய் செலுத்தி இடுப்பில் வெளியில் எடுத்து என்று.....அப்பப்பா, .......இது முரட்டு வைத்தியமா, அல்லது, இரண்டு புள்ளிகளை தொட்டு அல்லது சிறு மருந்துகளை கொடுத்து சரி செய்வது சரியான வைத்தியமா.....நீங்களே உணர்ந்து பாருங்கள்.........

    இன்றைய நவீன மருத்துவம் போகும் பாதை தவறானது......அது எவ்வளவு தூரம் சென்றாலும் செல்லும் இடத்தை அடைய முடியாது......

    நீங்கள் கூறுவதில் ஒன்று உண்மை , எந்த மருத்துவ முறையானாலும் ,மருத்துவரை வைத்தே அதை கணிக்கிறோம், கல்பாக்கம் புகழேந்தி (ஆங்கில மருத்துவர் தான்) கூறுவது போல, மருத்துவர் பெருக கூடாது , மாறாக உடல் நலம் பெருக வேண்டும்....

    30 -35 லட்சம் கொடுத்து படித்து வருபவர்கள் வியாபாரிகளாகதான் இருக்க முடியுமே தவிர, நல்ல மருத்துவர்களாக இருக்க முடியாது....நகரின் மையத்தில் உள்ள மருத்துவமனையில் தினம் பல கோடிகள் வசூலாவதும், வாரம் ஒரு container அவர் மாநிலத்திற்கு செல்வதும் அனைவரும் அறிந்தே நடக்கிறது....அடுத்த கொடுமை இப்பொழுது உடல் நல காப்பீட்டு திட்ட வடிவில் வந்துள்ளது, அரசாங்கத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளையடிக்க.....

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள திரு மக்ஸ்பாலா, நிச்சயமாக ஒவ்வொரு நோயாளியின் விருப்பமும் தன் வியாதி விரைவில் குணமாகவேண்டும் என்பதில்தான் இருக்கும். அப்படிப்பட்ட மருத்துவரையே நாடுவர். நானும் பாரம்பரிய மருத்துவத்தில் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவனே. இந்த ஆங்கில மருத்துவத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன்.

    ஆனாலும் பாரம்பரிய மருத்துவத்தை அணுகுவதிலும், அதன் மருந்துகளின், மருத்துவர்களின் தரத்திலும் இருக்கும் சில குறைகளை சுட்டிக்காட்டி தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியம். அதில் சிலவற்றையே நான் பட்டியலிட்டுள்ளேன். அதுவும் சம்பந்தமில்லாதவர்களிடம் அல்ல. திரு தமிழ்வேள் போன்ற அரிய ஒரு பாரம்பரிய மருத்துவரிடமே சொல்லி இருக்கிறேன். இவரைப் போன்றவர்களால் நிச்சயம் இதற்கு தீர்வு காண இயலும் என நம்பவும் செய்கிறேன். அதனால்தான் அந்த கமெண்ட்.

    புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. திரு சங்கர் குருசாமி அவர்களே,
    விஷத்தை அன்போடும் கவனிப்போடும் கொடுத்தாலும் அது கொல்லும் தன்மையை மாற்றி உயிரைக் காப்பாற்றாது.நமது பாரம்பரிய மருந்துகள் சிலருக்கு வேலை செய்வதில்லை என்பதல்ல உண்மை.யாருக்கு எதை கொடுத்தால் தீரும் என்பதை அறிந்த மருத்துவரிடம் நீங்கள் செல்லவில்லை என்பதே உண்மை.அல்லோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் அவர்களிடம் சென்று அவர்கள் கையால் நஞ்சுண்டு சாவோம் என்றால் நஷ்டம் யாருக்கு.திருடர்களும் கொலைகாரர்களும் அதிகம்(அல்லோபதி மருத்துவர்களை இப்படியும் அழைக்கலாம்)இருப்பதால் அவர்களிடம் போய் பொருளைக் கொடுத்து உயிரையும் இழப்போம்,என்று நன்கு படித்த மக்களே தயாராக இருக்கும் போது அரசாங்கம் இதைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை.எனெனில் மறைமுகமாக மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்பட்டால் நல்லதுதானே என்று ஹாயாக விட்டுவிடும்.உங்கள் உயிர் உங்களுக்கே அருமையாய்த் தெரியவில்லை என்பது மிகக் கேவல நிலை.பாரதி பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
    ""கஞ்சி குடிப்பதற்கிலார்,அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்,பஞ்சமோ பஞ்சமென்றே நிதம் பரிதவித்து உயிர் துடிதுடித்து ""பாடல் சரிதானே!!!சிந்தியுங்கள்.செயல்படுங்கள்.சிறப்புற வாழுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    மிக்க

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.