செவ்வாய், 31 டிசம்பர், 2013

இறக்கவில்லை எல்லோருடனும் இணைந்து விட்டார்

இயற்கை அறிவர். கோ. நம்மாழ்வார் உடல் நீத்தார்.

நேற்று இரவு (30 -12 -2013)நம்மாழ்வார் தம் உடலை விட்டு பிரிந்து விட்டார். அவர் இயற்கை வேளாண் அறிவர் மட்டுமல்ல. பல இயற்கை வேளாண் அறிவர்களை கண்டெடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்- உருவாக்கியவர்




எனது வாழ்வில் அவருடன் இருந்த நேரங்கள் என்றும் நலம் தருவன. அவருடன் இணைந்து சித்த மருந்துகள் செய்முறைகளை காண்டீபம் மூலிகைப் பண்ணையில் கற்றேன். மூலிகை பற்றி பயணங்களின் போது கற்றோம். அவருடன் இருந்த நினைவுகள் நாளும் எளிமையையும், இனிமையையும் மனித நேயத்தையும், வேளாண்மையையும் கற்றுத் தரும்.

நான் கடைசியாக திருச்சியில் சந்தித்த போது, தமிழவேள் வந்தாச்சு இனி உங்கள் நோயைப்பற்றி கவலையில்லை என என்னை அறிமுகப்படுத்தினார்.
தன் உடல் நலத்தை பாராது விட்டாரே!

அவர் எமக்களித்த பயிற்சி என்னைத் தனித்தியங்க, சிந்திக்க தூண்டியது – உதவியது. இனி அவர்  நம் எல்லோருடனும் இணைந்து இயங்குவார்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி


1 கருத்து:

  1. அரிய தலைவர்......அவர் வாழும் நாளில் நாம் வாழ்வதே நமக்கு பெருமை.....அவரை காண்பதற்காகவே “வானகம்” பயிற்சி சென்றேன்....பல தலைவர்களையும் , ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளையும் உருவாக்கி சென்றுள்ளார். .....அவர் பணி என்றும் தொடரும்.....பயிற்சியின் கடைசி நாளில் உங்களைப் பற்றிக் கூறினேன்.... நன்கு நினைவு வைத்திருந்தார்....சித்த மருத்துவர் இப்பொழுது இறை வழி மருத்துவம் செய்கிறார் அல்லவா...மிகுந்த மகிழ்ச்சி எனக்கூறினார்...பயிற்சியில் இயற்கை வேளாண்மை மட்டுமல்லாது, இயற்கை முறை வாழ்க்கை , மருந்தில்லா மருத்துவம் பற்றியும், “ஏங்கல்ஸ் ராஜா”, “கதிரவன்” ஆகியோர் பேசினர்....தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்து, பிள்ளைகளுக்கு இது வரை மருந்தில்லா வாழ்வு கொடுத்துள்ள அந்த இளைஞர்களை கண்டதும் நம்பிக்கை பிறந்த்து...உலகம் ஒரு நாள் “இயற்கையை” நோக்கி திரும்பும் என்று....

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.