வியாழன், 13 நவம்பர், 2014

அன்பின் அடையாளம்

அக்குபங்சர் மருத்துவர்.அன்னை பசுங்கிளி இன்று காலை தன் உடலால் நம்மை விட்டுப் பிரிந்தார்.

திரு. மகாலிங்கம் அவர்கள் துணைவியும், மக்கள் மருத்துவர்களான திருமதி. மகேஸ்வரி, திருமதி.புவனா, திருமதி.மாலினி மற்றும் திரு.விவேகாநந்தன் அவர்களின் தாயும் ஆன இவர் தன் வாழ்நாளில் பல நூறு மக்களின் நலம் நாடும் மருத்துவர்கள் உருவாக வழிகாட்டியாக இருந்தவர்.

தனது குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும், சுற்றத்தார்க்கும் நண்பர்கள், மற்றும் தன் மாணவர்களுக்கும் தனது அன்பால்; வாழும் கலையை, பகிர்தலின் சுவையை கற்றுத் தந்தவர்.

எங்கள் அனைவர்க்கும் இவரது பிரிவு ஈடுசெய்ய இயலாதது. ஆனால், இவரது நினைவு எப்படி குடும்பத்திலும், உற்றார், உறவினரிடம், நண்பர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை எம்முள் இருந்து வழிநடத்தும்.