செவ்வாய், 31 ஜனவரி, 2017

உங்களுக்காக வாழ்ந்தது போதும், நாங்கள் எங்களுக்காக வாழ இணைகிறோம்...

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

நானும் எனது குடும்பத்தினரும் எனது நண்பர்களும் ஆங்கில அலோபதி மருந்துகளை எந்த சூழ்நிலையிலும் எடுத்தது இல்லை.
எங்களுக்கு நஞ்சில்லா உணவு உண்ண விருப்பம். நஞ்சில்லா தண்ணீரும், காற்றும், வாழ்க்கைச் சூழலும் பெற விரும்புகிறோம்.
நலவாழ்வுக்கான வழிகள் எங்களுக்கு தெரியும், எங்கள் மரபில் நோயின்றி வாழவும் அதற்கும் மேல் ஆரோக்கியமாக வாழவும் எளிய வழிகள் உள்ளது. அந்த நலவாழ்வுக்கான வழிகளை நாங்கள் மேம்படுத்தியும் உள்ளோம்.
மருந்தில்லா மருத்துவம், நஞ்சில்லா உணவு உற்பத்தி, சூழல் நலம் காக்கும் எரிபொருள் உற்பத்தி என எல்லாம் எங்கள் விரல் நுணியில் உள்ளது.
எங்களுக்கு தடையாயிருக்கின்ற சக்திகளை நாங்கள் அறிவோம். எங்களுக்கு எதிரியாக இருப்பவர்கள் மிகவும் குறைவு தான்.
தங்களுக்குத் தாங்களே கேடு தேடும் இவர்கள் விழிப்புணர்வற்றவராகவும், பெருமை பிடித்த மன நோயாளிகளாகவும் இருப்பதையும் அறிவோம்.
இவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போன்ற தோற்றத்தை தங்கள் ஊடகங்களாலும், அதிகாரத்தாலும் காட்டி வருகின்றனர்.
எங்கள் தேவைகளின் அழுத்தம் எங்கள் மன இறுக்கத்தையும், தயக்கங்களையும் , போட்டி போடும் சுயநலக் கணவுகளை தகர்த்து எங்கள் கண்களை திறந்து விட்டது..
நாங்கள் உங்களுக்காக வாழ்ந்தது போதும். இனி எங்களுக்காக நாங்கள் வாழ்வோம்.
உங்கள் மனிதத்துக்கு நீங்கள் எதிரிகள் என்பதை நீங்கள் உணரா விட்டாலும் உங்கள் குழந்தைகளும், குடும்பத்தினரும் அறிந்தே உள்ளனர்.
அவர்கள் எங்களுடன் கைகோர்த்து நீங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களையும் உங்களையும் காரி உமிழ்ந்து விட்டு நலவாழ்வை விரும்பும் - எளிய வாழ்வின் சுவையறிந்தவருடன் சேர்ந்து வாழப் போராடும் நாள் வந்துவிட்டது.