அன்பின் புரிதலைப் பகிர்வோம்.
இதன் மூலம் தான் மனிதர்களின் மன நோய்களால் வந்து கொண்டிருக்கும் உலக
சூழல் அழிவிழிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
நம்பிக்கையுடன்,
தமிழவேள் நளபதி
உலக
மக்கள் அனைவர் மனதிலும் உள்ள காயங்களையும் தான்டி அன்பின் வழியில் தங்கள்
அறப்போராட்டத்தால் தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழியுண்டு என மீண்டும் காட்டிய
காந்தி தேச மக்களின் மீது மனித குல
விரோதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர கலவரம் தமிழ் மண்ணில் நடந்து
கொண்டுள்ளது.
ஆறு
நாட்களாக தங்களுக்குள் மாணவர்களும், காவல் துறையினரும் கட்டிக் காப்பாற்றிய அற
உணர்வு, அன்பு உணர்வு மக்கள் எல்லோரது
மனதில் இருந்த வன்முறை சிந்தனைகளை பெரிதும் மாற்றி அன்பே உலகம் உய்ய
மக்களின் ஆயுதம் என நிரூபித்து இருக்கிறது.
விரல்விட்டு
எண்ணக் கூடிய மாணவர்கள் இளைஞர்களால் ஆரம்பித்த அறப்போர் உலகம் முழுதும் இருந்த பல
இலட்சம் மக்களால் அமைதியாகப் பின்பற்றப் பட்டது. போராட்டத்தில் நேரடியாக கலந்து
கொள்ள முடியாத பல கோடிப் மக்களும் தங்கள் வீடுகளில் இருந்தே அன்பின் வழியில்
விளைந்த அறப்போரை நம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் கவணித்து கொண்டிருந்தனர்.
மனிதகுல விரோதிகளுக்கும்,
வன்முறை விரும்பிகளுக்கும் இந்த
அன்பின் வழி அறப்போர் பெரும் கலக்கத்தை உண்டாக்கியதில் வியப்பில்லை.
இவர்கள் தூண்டுதலால், அரசு நிதானமிழ்ந்து பெரும் தவறு செய்து விட்டது. சிறிது
பொறுமையாக அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்திருந்தால், மனிதகுல
விரோதிகளும், வன்முறை விரும்பிகளும் தனிமைப் பட்டிருப்பார்கள்.
மனித குல எதிரிகள் எங்கிருந்தாலும் மக்களிடமிருந்தும், காவல்
துறையினரிடம் இருந்தும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். அவர்களின் மனநோய்களுக்கு மருத்துவமாக,
வழிகாட்டும் நல்ல உள்ளங்கள் கருணை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
அன்பு வழியின் - அற வழியின் மீதான நம்பிக்கையின் மீது நம்பிக்கை
வைப்போம்.
மதம், நாடு,
மொழி என்பதை கடந்து சிந்திப்போம்.
எல்லோரது நோக்கமும் அமைதி,
நிம்மதி, சமாதானம்
தான்.
நம்பிக்கையுடன்,
தமிழவேள் நளபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.