புதன், 9 டிசம்பர், 2015

சென்னை புணரமைப்பு- rebuilt chennai people's sole

சென்னையை புணரமைக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு முன் சென்னை வாசிகளின் ஆன்மா புணரமைக்கப்பட வேண்டும்.

அது துன்பத்தில் கிடந்து உழல்வதையே தனது வாழ்க்கை என நம்பிக் கொண்டிருக்கிறது. தான் உயிருடன் இருப்பதே தனது முதலாளிகளை, மருத்துவர்களை, தலைவர்களையும், தனது குருமார்களையும், அன்னைகளையும், அண்ணன், மாமாக்களை வாழவைக்கத்தான் என இருக்கிறார்கள்.

அவர்கள் தனது வாழ்வாதாரத்தை முற்றிலும் சுரண்டி அளவின்றி பெருத்துப் போனதை அறியாதவர்களா தமிழக மக்கள். ஓட்டுப்போடவும், உழைத்துக் கொட்டவும் தங்களை  பிழைக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

தனது எல்லாத் துன்பத்துக்கும் காரணமான அதே நபர்கள் தான் இந்த மழை நீர் பாதிப்புக்கும் காரணம். தனது பங்களாக்களை மேடான இடத்தில் கட்டிக்கொண்டு சொகுசாக சாகும் இவர்கள்  மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒதுக்கிய இடம் ஏரிகள், கம்மாய்கள், குளம்,குட்டைகள். தற்போதைய பாதிப்பு இந்த இடத்தில் வாழ்கிற மக்களையே பாதித்துள்ளது.
இதற்கு தீர்வு என்ன?

இரக்க குணமுள்ள மக்களிடம் இருந்து வசூலிக்கும் பணம், பொருட்கள் தற்போதைக்கு சமாளிக்க உதவலாம். ஆனால், அதுவும் சேர்ந்து விரைவில் இதே கொள்ளையர்களுக்குத் தான் போகும். மருந்து வியாபாரத்திலும், வரிகளிலும், விலையேற்றத்திலும் நிலமை இன்னும் மோசமாகும்.

இப்பொழுது நீர் தேங்கிய நீர் தேக்கப் பகுதிகளை அதன் சொந்த தன்மையில் மீண்டும் ஏரி,குளம், கம்மாய் களாக மாற்ற வேண்டும். அதில் கட்டப்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டடங்களை முழுதுமாக அகற்றிவிட்டு மாற்றாக நீர் தேங்காத மேட்டு இடங்களை கொடுக்க வேண்டும். மீண்டும் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குப்பை கூலங்களை நகரின் நடுவில் மலையென குவித்து வைப்பதை நிறுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும்.

ஆறுகளில் மண்ணெடுப்பது, கழிவுகளை சேர்ப்பதை தடை செய்ய வேண்டும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நடப்பதெப்போது?
முதலில் மனிதன் மனிதனாக வாழ விரும்பவேண்டும். தனது மகிழ்வை விட்டுவிட்டு பிறரைப் பார்த்து திருப்தி அடைவது வெறும் வாயை மெல்லுவதே.

தனது தலைவர்களுக்கு உள்ள அதே வாழ்க்கை வசதி பெறும் உரிமை தங்களுக்கு உண்டென்பதை உணரவேண்டும்.
கேட்காமல் கிடைக்காது.

நமது குணக் கேடுகளை தான் அவர்கள் வாழ்வாதாரமாக்கி பிழைக்கிறார்கள். நமது தூய்ப்பு வெறி, பொறாமை, பேராசை, அறியாமை, விழிப்பிண்மை தான் அவர்களின் மூலதனம்.

நாம் மாறாவிட்டால் நம்மை துடைத்தழித்து விடுவார்கள். இந்த அவலங்கள் தொடரும். நம்மை மனிதர்களாக நினைத்து உலக மனித சமூகம் உதவுவது நடவாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.