செவ்வாய், 16 டிசம்பர், 2014

சான்றோர் வழியில்

நம்மாழ்வார் ஐயா நினைவு நாள் நிகழ்ச்சி நிரல் :
நம்மாழ்வார் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே
வணக்கம் ,
வருகிற டிசம்பர் 30ம் தேதி 2014 செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மேல் மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வானது, தமிழகத்திலுள்ள அனைத்து நம்மாழ்வார் ஐயாவின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் “ வானகம் ஒருங்கிணைப்புக்குழு “ அன்புடன் அழைக்கிறது.
இடம் :
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்), கடவூர், கரூர்.
இந்த நிகழ்ச்சியின் நிரல்கள் :
குத்துவிளக்குகேற்றி துவக்கி வைப்பவர் :
திருமதி. கோ. நம்மாழ்வார் சாவித்தி அம்மாள் அவர்கள்
சிறப்பு அழைப்பாளர்கள் :
1. மண்ணுக்காகவும், மக்களுக்காவும் அயராது உழைத்த இயற்கை ஞானி. திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நல் உள்ளங்களின் மனதில் இன்றும் ஐயா வாழ்வதற்கு காரணமாக இருந்துவரும் ஐயாவுடன் அலைந்து திரிந்த, ஐயாவின் வழித்தொடரும் மாண்புமிகு மாணவர்கள்
2. விவசாயப் பெருங்குடி மக்கள்
3. பாரம்பரிய & மரபுவழி மருத்துவர்கள்
4. மாற்றுக்( சுவரில்லா) கல்விக்கு வழிகாட்டியுள்ள சிந்தனையாளர்களான :
நம்மாழ்வார் ஐயா அவர்கள் ஒரு சூழ்நிலையில் இயற்கை வழி விவசாயத்தை மக்கள் மத்தியில் பரவுவதில் வெற்றி அடைந்தாலும் கூட, மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் அடுத்த கட்டம் செல்லமுடியவில்லை. அந்த சூழ்நிலையில் தன்னுடைய தொண்டர்களிடத்தில் , இந்த சமூதாயம் தவறான வழியைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ” வணிகத்திற்காக மட்டுமே குழந்தைகளிடத்தில் திணிக்கப்படும் அடிமைக்கல்வி தான் “ என்பதை தன்னுடைய வாழ்நாளில் கற்ற சில அனுபவங்களுடன் விளக்கினார். ஐயா அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் இறுதி வரையிலும் “ சுவரில்லா கல்வி முறைக்கு வடிவம் கொடுக்கத் “ தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து வந்தார்.
அந்த வகையில் நம்முடைய கரங்களுக்கு வலுசேர்த்த மற்றும் அனைவரின் மனதிலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திய ” இது யாருடைய வகுப்பறை “ என்கிற உளவியல் கல்விக்கான புத்தகத்தை எழுதிய & சாயித் அகடாமி விருது பெற்ற ,
மாற்றுக்கல்விக்கான ஆவணம் தயாரித்த :
1. திரு.ஆயிஷா இரா .நடராசன் அவர்கள்
ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவார் , இந்த ஏற்றத்தாழ்வுள்ள சமூதாயத்தை திருத்தி அமைக்க அனைவரும் கல்வி என்பதே ஆயுதம் என்பதைக் கூறுவார். அப்படிப்பட்ட ஆயுதம் ( கல்வி உரிமை ) இந்த மண்ணில் பிறந்த அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றளவும் போரடிவரும்
சமூக நல கல்விப் போராளியான
திரு. பிரின்ஸ் கஜேந்திரன் அவர்கள்
5. மக்கள் வாழ்வாதரங்ளை பாதிக்கும் இயற்கை வளங்களை சூறையாடுபவர்களை தடுப்பது ” இயற்கை நமக்கு வழங்கிய உரிமை ” என்று முழங்குவதோடு நில்லாமல் , அதை பொதுமக்களை ஒன்று கூட்டி செயத்து முடித்தவரும், அந்த மக்களைக் கொண்டே அழிந்துவரும் நீர் ஆதரங்களான குளங்களைக் காப்பாற்றி அதில் நீர் சேமித்து அதிலே பல தீவுகளை உருவாக்கியவரும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க “ மூங்கில் பொருள்களிலே “ அனைத்தையும் வடிவமைத்து “ புழுதியிலும் புழுதியாய் உள்ளவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும்
இளைய வழிகாட்டி
சேலம் திரு. பியூஸ் மனுஸ் அவர்கள்,
6. பிரான்சு நாட்டில் தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு சொல் மூலம் மாற்றங்களை கூறுவதை விட “ காட்சிகள் மூலம் மாற்றங்களை “ கட்டமைத்து அழிந்துவரும் கலை உருவாக்குத் திறனை அனைவரின் மனதிலும் கொண்டு சேர்ப்பவரும், உயர் குடிமக்கள் மட்டுமே ரசித்துவரும் நவீன நாடகத்தை எளியோர் மற்றும் குழந்தைகளுக்காவே உருவாக்கிவரும்,
திரு. குமரன் வளவன் அவர்களின் “ நவீன நாடகமும்” இடம் பெறும்.
7. நம்மாழ்வார் ஐயாவின் மெய்யுணர்வினை சுமந்து தொண்டாற்றும் அனைத்து அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் முன்னெடுக்கும் அஞ்சலி நிகழ்வு.
8. ” விதைகளே பேராயுதம் “ என்பதை ஐயா அவர்கள் உணர்ந்திருந்ததால் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி விட்டுதான் சென்றுள்ளார். மேலும் அதற்குத் தடையாக இருக்கும் காப்புரிமை சட்டங்களை எதிர்த்து “ நம்முடைய வேம்பின் உரிமையை “ மீட்டெடுத்தவர், ஐயா அவர்கள்.
எனவே ஐயாவின் வழியைப் போற்றும் விதமாக ஐயாவின் நினைவு நாளில் “ மறுமலர்ச்சி பெற்றுவரும் பல்லாயிரக்கனக்கான நமது பாரம்பரிய விதைகளை “ பரிமாற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது. ஆகவே அந்நாளில் தங்களால் முடிந்த ஒரு விதையாயினும் பரவாயில்லை , ஒருவர் மற்றொருவருக்கு மரபு விதைகளை பரிசளித்து, அதை பல லட்சம் விதைகளாக மறு உற்பத்தி செய்து வலிமை மிக்க ஆயுதமான விதைகளை காப்பாற்றுவோம்.
9. புகைப்படக் கண்காட்சி :
சமூக மாற்றத்திற்கான புகைப்படங்கள் மற்றும் ஐயாவின் அரிய புகைப்படங்கள் & ஒவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. எனவே ஓவியக் கலைஞர்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைவரும் தங்களை இந்த பணியில் இணைத்துக் கொள்ளலாம்.
10. நூல்கள் வெளியீட்டு விழா
11. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமையில்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் ஓர் அணியில் செயல்படுவதற்கான கலந்துரையாடல் நிகழ்வு.
மேலே உள்ள நட்சத்திரங்களை இயக்கி வரும் சக்தி எது ?
அவற்றை உருவாக்கிய சக்தி எது ?
கடலை உருவாக்கிய சக்தி எது ?
இந்த சக்தி வேறு எதுவாக இருக்க முடியும் ,
அன்பைத் தவிர.......
மூமியா அபு ஜமாலின் கவிதையுடன்
வாருங்கள் அன்பைப் பரிமாறும் நிகழ்வுக்காக.....
குடும்பம் குடும்பமாய் குழந்தைகளுடனும்,
நண்பர்களுடனும்.......
அன்புடனும் பணிவுடனும் இவ்வளவு முக்க்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் தங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் குறையேதும் நிகழாமல் இருக்க .....
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்....
தங்களுடைய வருகையை முன்பதிவு செய்ய :
99942 77505, 94425 93448 , 94435 75431
இப்படிக்கு,
வானகம் ஒருங்கிணைப்புக் குழு
ம.குமார் மற்றும் லெ. ஏங்கல்சு ராஜா, இவர்களுடன் நம்மாழ்வார் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.