திங்கள், 24 பிப்ரவரி, 2014

நம்மாழ்வாரின் மருத்துவ பார்வை

நம்மாழ்வாரின் மருத்துவ பார்வை குறித்துச் சொல்ல வந்திருக்கிறேன்.
நம்மாழ்வாருடன் பழகியவர்கள் அனைவரையும் அவரது சிந்தனைகளும், கருத்துக்களும், எளிமையும், செயலூக்கமும், உறுதித் தன்மையும், மனித நேயமும், விடுதலை வேட்கையும் கவர்ந்திருக்கும் என்பது மட்டுமல்ல அவர்களின் இதயத்தில் கரைந்திருக்கும். அது சரியான சூழலில் வெளிப்பட்டு அவர்களையும் நம்மாழ்வாரைப் போன்ற விடுதலைப் போராளியாக மாற்றிவிடும்.
அந்த அளவுக்கு சக மனிதர்களின் இதயத்தை ஊடுருவக் கூடியவர் அவர். அவரைச் சுவைத்தவர்கள் அவராகவே மாறிப்போகும் அபாயம் அதிகம்.
அதுவும் இப்பொழுது பருஉடலாக  நம்மிடம் இல்லாத போது அவரை அறிந்தவர்கள் எல்லார் உள்ளத்திலும் அவர் தம் தாக்கம் மிக அதிகமாக உள்ளதை காண்கிறேன்.
அவருடன்  எனது அனுபவங்களை சொல்வதை விட அந்த அனுபவங்களின் பயனாக அவருடன் நான் கற்ற மூலிகை மருத்துவம் படிப்படியாக சித்தமருத்துவம் வர்ம மருத்துவம், மலர் மருத்துவம் என எளிமையாகி தற்போது தன் முயற்சிகள் எதுவும் தேவையில்லாத இறைவழி மருத்துவமாக வளர்ந்ததை பற்றி சொல்கிறன்.
வாழ்க்கைத் தேவைகளுக்காக மருத்துவத்தை தொழிலாக ஆரம்பித்த போது நான் எனக்குள் சில கட்டுப்பாடுகள் வளர்த்துக் கொண்டேன். அவை 1.கடையில் வாங்கிய பிறர் செய்த மருத்துகளை பயன்படுத்துவதில்லை. 2. விற்பனைக்காக மருந்துகளை செய்வதில்லை.
இந்த நடைமுறையால் மருந்து செய் அறிவு பல பெரியவர்கள் உதவியோடு வளர்ந்தது.
இந்நிலையில் ஒரு முறை நம்மாழ்வாரிடம் பேசும் போது ஆவாரம் பூ சூரணத்தைப் பயன்படுத்தி பல காலங்களாக இருந்த எரிகுன்மத்தை ஓரிரு வேளை மருந்தில் சரியானதைக் கூறி அந்த மருந்துக்காக ரூபாய் 500 பெற்றதை குறிப்பிட்டேன். பக்கத்தில்
கேட்டுக்கொண்டிருந்த நண்பர் ஒருவர், அட ஆவாரம் பூவுக்கு 500 ரூபாயா? என்றார். அதற்கு நம்மாழ்வார் இல்லை ஐயா ஆவாரம்பூ இலவசம் ஆனால் கொடுப்பது மருத்துவரல்லவா என்றார்.
மருத்துவ அறிவு தனியுடமையாக்கப்படுவதால் மருத்துவம் வணிகமாகிறது.
இது முன்பு எல்லோர்க்கும் பொதுவாக இருந்தது. வீட்டில் விதையும், குழந்தைகளும், உடல் நலமும் பெண்கள், மற்றும் முதியவர்கள் பொறுப்பில் இருந்த வரை மருத்துவமும் மருந்துகளும் வணிகமாயில்லை. என்று பெண்களிடம், முதியவர்களிடம் இருந்து இந்த உரிமைகளை பறித்தார்களோ அன்றே எல்லா சூழல் கேடுகளும், நலக் கேடுகளும் வந்துவிட்டன.
 நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் வார்த்தை எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும்; என்பது.
இந்த வகையில் சிந்தித்த போது நாம் நமது நலத்தை எங்கு தொலைத்தோம்.
 நமது முன்னோர் மருத்துவ அறிவை எளிமையாக்கி சமையல் அறையில் வைத்துவிட்டனர். மருத்துவத்தை நமது பழக்க வழக்கங்களாக்கி விட்டனர். உதாரணத்துக்கு, திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில், பொருந்திய உணவை தேவையறிந்து சுவைத்து சாப்பிடுவதே மருத்துவம் என்கிறார். மேலும், உற்றான், தீர்ப்பான், சுற்றத்தார் {சூழல்} என மருத்துவ அறிவு எல்லோர்க்கும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறார்.
தமிழர்களின் அடையாளத்தில் முக்கியமான ஓர் சிறப்பு அவனது குளியல் முறையே
காலை, மாலை தலை குளிர குளித்தல் நமது பண்பு. இதையே ஔவை, ‘சனிநீராடு’ என்றார். குளித்த பின் தான் உணவுண்ண வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
வாரம் இருமுறை எண்ணெய் குளியல் இது தமிழர் உலகுக்கு ஈந்த நலஅறிவியல். தேவைக்கேற்ப பல நூறுவகையான குளியல்எண்ணெய் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர்.
அதிகாலைத் துயில் எழுவதும் முன்இரவில் தூங்குவதும் உடல், மன நலத்துக்கு  மிக தேவை.
இவை போன்ற நலத்துக்கான நமது அறிவியலைத் தொலைத்தது தான் தற்போதய எல்லா கேடுகளுக்கும் காரணம்.
இதை உணர்ந்ததால், என்னிடம் உதவி நாடிவருவோர்க்கு தமிழ் மரபுவழியான நலவாழ்வுக்கான பழக்க வழக்கங்களை அறிவுறுத்தினேன். இது நல்ல பலனைத் தந்தது.
 மூலிகை மருத்துவம், சித்த மருத்துவம், வர்ம மருத்துவம் போன்றவற்றின் உதவியால்  உடல் உறுப்புகளில் ஏற்பட்டுவந்த ஆற்றல் குறையை நீக்க முடிந்தது. பேட்ச் மலர் மருத்துவத்தின் உதவியால் எண்ணங்களை சீர்படுத்தி உடல் மனத் துன்பத்தை சரிசெய்ய முடிந்தது.
இன்னும் செலவையும், நேரத்தையும், உழைப்பையும் குறைத்து ஆற்றலை அதிகப்படுத்தும் வகையிலும், மென்மையாக பத்தியங்களற்ற, பக்கவிளைவுகளற்ற முறையைத் தேடி மனித நேயமுள்ள நல்ல மனிதர்கள் உதவியுடன் முயன்றதில், நமது நாட்டில் வளரும் மூலிகைகளின் மலர்கள் மற்றும் நாங்கள்  செய்து பயன் படுத்திய மருந்துகளின் தத்துவத்தை - நன்மை செய்யும் ஆற்றலைத் தண்ணீரில் பதிவு செய்து கடந்த பத்தாண்டுகளாக சோதித்ததில் நல்ல வெற்றி.
உதாரணத்துக்கு; பத்தாண்டுகளுக்கு முன் இரண்டு ரோஜாவின் ஆற்றலை நீரில் பதிவு செய்தோம். அது இன்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கையில் நல்ல தூக்கத்தையும், மன அமைதியையும், வயிற்று நோய்களையும் நீக்க சிறப்பாக பயன்படுகிறது. இது போல நூற்றுக்கணக்கான மருந்துகளை செய்து நல்ல நன்மைகளை கண்டுள்ளோம்.
நம்மாழ்வாரின் நினைவு நாளில் இதை மக்கள் அனைவர்கான நலனுக்காய் அறிவிக்கிறோம். இதன் செய்முறை எளிது. பயன்படுத்துவதும் எளிது. நலம் பெறுவது மிக எளிது.
தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
இறைவழி மருத்துவர் ந.தமிழவேள் -93458 12080, 94445 58208
பொறியாளர் ச.நாகலிங்கம்-94434 64341,
குணமளிப்பவர். பாக்ய நாதன்- 91595 93061
இயற்கை வேளாண்மை- மருதம் குமார்-73739 49555

படைப்பாற்றலின் தன்மையை உணர்ந்து தன்னுள்ளிருக்கும் இறைதான் பிற உயிர்களிலும் இருக்கிறது என அறிந்து தனது நலனுக்காக பிற உயிர்களின் நலனுக்கு உதவுபவர்க்கு நற்கொடையாக படைப்பாற்றல் இறைவழி மருத்துவ ஞானத்தை அளித்துள்ளது. 
கடந்த 7 ஆண்டுகளாக எனது அல்லது பிறரது நோய்களை நீக்க நான் எந்த மருந்துகளையோ அல்லது கருவிகளையோ சார்ந்திருக்க வில்லை. சுகமாக வேண்டும் எனும் விருப்பம் மட்டுமே வினாடிகளில் நலம் தருகிறது.
இதன் மூலம் நாம் மனதில் நினைத்த மாத்திரத்தில் உடல், மனத் துன்பங்களை நீக்கி, சுகம் பெறும் ஆற்றலை தனக்கும் பிறர்க்கும் உண்டாக்கி கொள்ள இறைவழி மருத்துவருக்கு இறைக் கருணை வழங்கியுளது.

நம்முடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. நாம் நோய் என நினைக்கும் எந்த துன்பமுமே நம்மை காக்கும் நோக்கத்துடன் உருவானதே.
 நமதுள்ளிருந்தும், புறத்திருந்தும் இயங்கும் - இயக்கும் படைப்பாற்றலுக்கு எதிராக – அல்லது நமது அடிப்படைத் தேவைகளுக்கு எதிராக, பெருமைகாரணமாகவும், விழிப்புணர்வின்மை காரணமாகவும் செல்லும் போது அதை அடையாளப்படுத்தி நம்மை சரியான பாதையில் கொண்டுவரவே நோய்கள் உருவாகின்றன.
நாம் நமது நோய்க்கான காரணத்தை அறிந்து நமது சிந்தனை மற்றும் பழக்கங்களை சீர்படுத்தினால் எந்த நோயாக இருந்தாலும் சுகம் தந்து விலகிச் செல்லும்.
நமது அடிப்படைத் தேவைகள் என இங்கு குறிப்பிடுவது பசி, தாகம், தூக்கம், ஓய்வு, நல்லநட்பு, நல்லஉறவு, அமைதி, அன்பு, பாதுகாப்புணர்வ ,சமாதானம் போன்றவையே
இவற்றை கேவலம் பணத்துக்காக தவறவிட்டால் பிறகு எத்துணை பணம் செலவு செய்தாலும் திரும்ப பெற இயலாது. எனவே இறையச்சத்துடனும் விருப்பத்துடனும், நன்றியுணர்வுடனும் படைப்பாற்றல் நமக்களித்துள்ள அடிப்படைத் தேவைகளான நன்மைகளை நாடிப்பெற வேண்டும். இதுவே இறைவழிபாடாகும்.
இதை புறக்கணித்ததால் வரும் நலக் குறைவை நீக்க மனம் திரும்பி இறையாற்றலிடம் மன்னிப்பு கேட்டு, நமது அன்றாட கடமைகளை செவ்வனே செய்து வர சுகம் பெறலாம்.
இதைவிடுத்து உடல் பற்றியும் உயிராற்றல் படைப்பாற்றல் பற்றியும் ஒன்றும் அறியாத மருத்துவ வணிகர்களிடம் உடலை ஒப்படைத்தால் இத்தனை காலம் உடலை வெறுத்து ஈட்டிய சொத்துகளை விற்று மருந்து வணிகர்களின் கையில் கொடுத்துவிட்டு அவர்கள் கையால் வெட்டி குதறப்பட்டு சாக வேண்டியது தான்.
உடலின் வர்ம ஆற்றல்கள் குறித்தோ அல்லது ஐந்து மூலக ஆற்றல் குறித்தோ எந்த வித அடிப்படை அறிவும் இல்லாதவர்களிடம் கையில் கத்தியைக் கொடுத்தது எந்த வகையில் சரி.
வேளாண்மைக்கோ, உடல் நலனுக்கோ படைப்பாற்றல்  தவிர எந்த சார்பும் தேவையில்லை.
நம்மாழ்வார் போன்ற நல்லவர்கள் காட்டும் வழியில் விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் வாழ்வு இனிமையே.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.