வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மரபுவழி நலவாழ்வு மையம்,

பதஞ்சலி நல மையம், மேடவாக்கம் மற்றும் மரபுவழி நலவாழ்வு மையம், ஆவடி
இணைந்து நடத்தும் நலவாழ்வுக்கான பயிற்சிகள்


 நோயற்ற வாழ்வுக்கான எளிய பாதைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். சில பத்தாண்டுகளாக நாம் அவ்விதிகளை மறந்து தவறான பாதையில் வெகுதூரம் வந்துவிட்டோம். விளைவு:

·         ஆரோக்யமுள்ள குழந்தைகள், சிறுவர், இளைஞர்களையும், உடல் வலி, மனத் துன்பம் இல்லாத நடுத்தர வயதினரையும் பார்க்க முடியவில்லை.
·         ‘முதியவர்களின் கடைசிக் காலம் நமது காலம் முழுவதும் நினைத்து மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளது.
·         நமது வருவாயில் பெரும் பங்கு நவீன மருத்துவச் சோதனைகளுக்கும், நிரந்தரத் தீர்வு தராத புதிய நோய்களைத் தரும் மருந்துகளுக்கான செலவுகளாக வீணாகிறது.
·         எவ்வளவு பணம் இருந்தாலும் நலம் தரும் நீரும், நஞ்சில்லாத சுவையான உணவும், மன நிம்மதியும், நல்ல நண்பர்களும் இல்லை.

இந்த நிலைமாற வேண்டும்

Ø சுகமான வாழ்வு பெற வழி என்ன? உடல் நலனும், மனநலனும் கொண்ட அழகான குழந்தைகளை வலியின்றி சுகமாகப் பெற்றுக் கொள்வது எப்படி?
Ø குழந்தைகள், பெற்றோர்களின் உடல், மனநலத்தைக் காப்பது எப்படி?
Ø பக்க விளைவில்லாத எளிய மருத்துவ முறைளை கற்றுக் கொள்ளது எப்படி?
Ø ஓய்வுக்கான, மகிழ்ச்சிக்கான நேரம் ஒதுக்குவது எப்படி?
Ø எளியவழிகளில் நலவாழ்வுக்கான பொருளீட்டுவது எப்படி?
Ø சேர்த்த பணத்தை நமது குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துவது எப்படி?
Ø நலவாழ்வினை பெற நினைப்பவர்களின் துணையை - உதவியைப் பெறுவது எப்படி?

என தேடும் நாம் மிக பலர்! நாம் நலவாழ்வுக்குத் தகுதியானவர்கள். நம்முடைய மகிழ்ச்சிக்கான பாதைகளை கண்டறியவும், ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுவதே மரபுவழி நலவாழ்வு மையத்தின் நோக்கம்.

இடம: மரபுவழி நலவாழ்வு மையம், எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054

நேரம். காலை 10.00 முதல் 1.00 மாலை 4.30 முதல் 7.00

புதன், சனி தவிர மற்ற நாட்களில் முன் அனுமதி பெற்று வருக.

 கை பேசி எண்: 93458 12080,; 94447 76208.

மின்னஞ்சல்thamizhavel.n@gmail.com

வலைப்பதிவு:  http://siddhahealer.blogspot.com


ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

உண்மை அறிவோம்

இந்திய மருத்துவச் சட்டம்

இந்திய அரசு இயற்றியமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது

அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.

ஆனால், நடப்பது என்ன? மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.

மருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.

சிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.
அழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.

தமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் மருத்துவம்!



(குறிப்பு:20..00 முதல் ௨௨..00 வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்

நன்றி.