திங்கள், 8 ஏப்ரல், 2013

நம் உடலை அறிவோம் - Know Your Body - 62


 


Use this area to offer a short preview of your email's content.
View this email in your browser
மகனின் தேர்வுக்காக Set Top Box - ன் அட்டையை எடுத்து   வைத்திருந்தோம்...  மீண்டும் போடலாம் என வீடு முழுக்க தேடியும் காணவில்லை. நிறுவனத்தின்  call centre -ஐ அழைத்து விபரம் கூற, தனது service  engineer -ஐ அனுப்பினார்கள். வந்தவர்கள் தொலைக்காட்சியை போட, தானாக வந்தது. இடையில் ஒரு நாள் முக்கிய செய்தியை பார்க்க அட்டையை போட்டது மறந்தே போயிருந்தது.  வந்தவருக்கு (எங்கள் வீட்டு அட்டையை எங்களுக்கே கண்டு பிடித்து கொடுத்ததற்கு ?)) சேவைக்கட்டனமாக  200 ரூ. கொடுத்து அனுப்பினோம். இதை போல தானே நம்மிடம் உள்ள பிரச்சினையை நமக்கே கண்டு பிடித்து சொல்லும் மருத்துவத்துறையும் எனத் தோன்றியது...நல்ல வேலை வந்த நபர் , மருத்தவரை போல, நோய் கண்டு பிடித்ததால் நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டே ஆக வேண்டும் என சொல்லாமல் , புது அட்டையை தலையில் கட்டாமல் சென்றார்...
 
சிறப்பு நிபுணர் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் என நினைக்கும் வியாதிகள் பலவும் நாமே அறிந்ததே. நீண்ட நாட்களாக தலை வலியில் அவதியுற்ற ஒருவருக்கு பல நுண்ணழுத்த  புள்ளிகளில்  சிகிச்சை அளித்தும் பெரிய  முன்னேற்றமில்லை. பிறகு தான் அவர் மனைவி கூறினார், தினமும் அலுவலகத்தில் கண்ணை கெடுக்கும் கணினி வேலை போதாதென்று வீட்டிற்கு வந்தவுடன் "ரிலாக்ஸ்" செய்கிறேன் என்று தனது mobile -இல் தின்னும் இரவு 12 மணி வரை விளையாடுவாராம்..பல சிறப்பு நிபுணர்களை கண்டு பல ஆயிரங்கள் செலவழித்து வேறு உள்ளனர்...
 
பல தவிர்க்க முடியாத வேலை பளு இருந்தாலும், உடல் நிலை சமப்படுத்த தெரிந்திருந்தால் வியாதி எட்டிப்பார்க்காது வீட்டு வேலைக்கு சுலபமாக "No " சொல்லிவிடும்  பலரும் அலுவலக வேலையை (பெருமைக்காகவாவது) இழுத்துப்போட்டு செய்கின்றனர். பிறகு "shock absorber " போல அவர்களது சுக துக்கங்களை குடும்பம் கவனிக்க வேண்டியுள்ளது. இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்கும்பொழுது உடலின் நச்சு தன்மை அதிகரித்து சளி, உடல் வலி, மன அமைதி பாதிப்பது இயல்பே அதை சமன் படுத்த தேவையான நேரம் ஓய்வு எடுத்து உடலின் சரிப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்தாலே நோய் என்பது ஒன்றே இல்லாமல் ஆகி விடும்...செய்வோமா..!!
 
செய்வோம்:

சுண்டு விரல் பக்கத்தில் உள்ளங்கை முடிவுறும் இடத்தில் உள்ள புள்ளி 14 - ஐ அழுத்தினால் பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். ஏற்கனவே கர்ப்பப்பை பிரச்சினை உள்ளவர்வகளுக்கு, இந்த இடம் வீங்கி இருப்பதையும் மென்மையான தொடுதலால் அது குறைந்து உள்ளுறுப்பு நலம் பெறுவதையும், அருமையாக உணரலாம். அறுவை சிகிச்சையும் தேவையில்லை. குழந்தை பிறப்பிற்கு மட்டுமே கர்ப்பபை என்பதை போலவும் அது முடிந்து விட்டால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பது போலவும், இப்பொழுது பல பெண்கள் மனத்திலேயே ஒரு எண்ணம் உருவாகிவிட்டது ஆனால் இறைவன் எந்த உள்ளுறுப்பையும் அது போல ஒரு வேலைக்காக மட்டுமே படைக்கவில்லை. அனைத்திற்கும் ஒரு முழுமையான செயல் பாடு உள்ளது . பல நெருக்கடிகளால் கர்ப்பபையை எடுத்த பெண்கள், பின்னர் முட்டி வலி, கால் வலி, உடல் அசதி என பல இன்னல்கள் அனுபவிப்பதையும் கண் கூடாக காண்கிறோம். இவ்வாறு ஒரு உள்ளுறுப்பை எடுத்தால் அதன் இணை உறுப்பு (சிறு நீரகம்) அதன் வேலையையும் சேர்த்து செய்வதன் காரணமாகவே, சிறுநீரக சக்தி நாளங்கள் செல்லும் வழியெல்லாம் வலி எட்டிப்பார்க்கிறது இருவர் செய்யும் வேலையை ஒருவரே செய்வது போல. ஆண்களுக்கும் இந்த புள்ளி (15) இனப்பெருக்கம் பிரச்சினைகளை சரி செய்யும்.

 
We had disconnected our TV connection, owing to son's exams. We were searching for the card to reconnect, toppling the whole house, but could not find. Then contacted the Call Centre and the Service Engineer arrived. He switched on the TV and immediately, it came live. The Card was all the time in the Set top box only (in the right place). (We had inserted the card to watch some important program, and forgot to take it back). And for finding this, we had to pay the service charges too.....This made me think that we are doing the same with our health.  We are approaching the medical fraternity to find and tell us what we already have and know...Thank God the Service Engineer didn't force the new card to be bought, as is being done by the Doctors who force us to take their medicines. (for finding the disease with us)
 
A neighbour was suffering from severe headache, and the lengthy treatments did not yield the desired result. Later, it was told by his wife that he used to play with his mobile till 12 pm (as a stress buster !!), even after the heavy (eye-brain intensive) computer work at office. Needless to say, he will only be getting severe headaches. For this, they had already spent a lot with many experts also. Dropping an useless pastime would have saved the whole family a lot of trouble, expenses on medical bills and would have maintained his mental health as well.
 
Many of us who say NO to household work easily, get caught up with office work (just for the heck of doing it) day in and day out. The family members then have to act as "Shock absorbers", for all the ill - effect that these "hard' workers contract. Working (unduly) hard, will surely affect our body's immune system, and increase the level of toxins which will be tried to throw up via flum etc., with inherent body pain and sleep disturbances and this can be easily neutralized by taking proper care / rest and relaxation....with of course, positive attitude.
 
FOLLOW:
Reflex Point No. 14 / 15 is situated just below the palm, on the side of the little finger. This is a very good point for treating uterus related problems. In fact, people suffering from uterus dificulties, can find a bulge in that place (14 or 15 - ovaries) , which can easily be treated with soft touch of the same points regularly for some period. Nowadays, it has become the tendency of women themselves that the purpose of uterus stops with the child bearing aspect and they become ready to remove it when any issue crops up. As per the Natural theory of acupuncture, uterus and kidney are paired organs, and removing one of them puts the load on to the leader, leading to pain in the meridian points of the kidney (that's why many women who removed uterus end up with leg , knee pain and weight gain). Many of us may also be aware that the fluid in the "Adrenalin" glands is being stored by kidney, which is the "Vital Force" for living.  Hope we advice those in and around us to be patient, and get treated easily with acupressure and avoid such unwanted surgeries.
 






Sent to magsbala@gmail.com — why did I get this?
unsubscribe from this list | update subscription preferences
Health · Wellness Street · All is Well · Health is Wealth 600000
Email Marketing Powered by MailChimp
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.