போலி மருத்துவர்கள் யார்?
நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மருத்துவ சம்மந்தமான ஓர் கலந்துரையாடல்...
( !) பொதுவாக இதுபோன்ற கலந்துரையாடல்களில் மக்கள் மருத்துவங்களை தங்கள் அறியாமையால் விமர்சனம் செய்து கடைசியாக அதை காப்பாற்ற விரும்புவதாகவும் செல்லிக்கொள்வார்கள். ஆங்கில மருத்துவத்தை போல வளரவேண்டும் அறிவியல் பார்வை வேண்டும் என்று அறிவுரை கூறி படித்தவர் மத்தியில் தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள்.
( !) பொதுவாக இதுபோன்ற கலந்துரையாடல்களில் மக்கள் மருத்துவங்களை தங்கள் அறியாமையால் விமர்சனம் செய்து கடைசியாக அதை காப்பாற்ற விரும்புவதாகவும் செல்லிக்கொள்வார்கள். ஆங்கில மருத்துவத்தை போல வளரவேண்டும் அறிவியல் பார்வை வேண்டும் என்று அறிவுரை கூறி படித்தவர் மத்தியில் தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள்.
நவீன மருத்துவம் ஏதோ அறிவுப்பூர்வமானது, தூய்மையானது, சட்டபூர்வமானது போலக் காட்டி, அதன் தரத்துக்கு மாற்று மருத்துவங்களை ( !) கொண்டுவர பாடுபடுபவர்கள் போலவும் பேசிக்கொள்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது( அவர்கள் வாரிசுகளை நினைத்து).
நமது நாட்டு மற்றும் பிற நாட்டு மக்களின் மருத்துவங்கள் எதையும் இவர்கள் வளர்க்கத் தேவையில்லை. தற்போதும் 85% க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சுயசிந்தனையில் தான் உள்ளனர். சில தன் மரபுவழி நலவாழ்வின்
வழிகாட்டியான மூத்தோரின் தொடர்பைத் தொலைத்த மனநோயாளிகள் மட்டுமே மருத்துவ(!) வணிகர்களுக்கு பலியாகிக் கொண்டுள்ளனர். இவர்களது எண்ணிக்கையை
பெருக்குவதே இவர்களது நோக்கம்.
உங்களுக்குத் தெரிந்து ஏதாவது நோயை இவர்களால் (நவீன
அறிவியல் மருத்துவத்தால்- அலோபதி) குணப்படுத்த முடிவதாகக் கூறுங்கள் நானும் இவர்களை அந்த நோயைப்பொருத்தவரையாவது
மருத்துவம் என ஏற்றுக்கொளகிறேன்.
அலோபதியின் அறியாமையின் காரணமாக அலோபதி மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க கூடாது என சட்டப்பூர்வமாக தடுக்கப்பட்ட நோய்கள் (sedule 51J இந்திய மருத்துவ மற்றும் அழகு சாதனசட்டம்) பொருத்தவரையாவது இந்த ஆங்கில மருத்துவத்தை பற்றி பெருமைப்படுவதை குறைத்துக் கொள்வார்களா? இந்த பேச்சாளர்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx8V-YKKAxLrXqXwFTaj3-Em-WUpbfP4ztzKUVHaaju9Aj8MjALCUB1exF00wXyO6O6lGSClJU1fEJ3xWV76119jte4gWdjzi-b2LRxfkJ5FD-YsnPJ4OtExFtXhvpRLiqz4na10HQjoR_/s1600/pg1.JPG
இன்னும் போலி மருத்துவர்கள் எனும் வார்த்தை
ஏதோ மரபுவழி மருத்துவர்களைக் குறிப்பது போல இவர்களது பேச்சு பொதுவாக உள்ளது இவ்வாறு கூறுவது கண்டிக்கப்பட வேண்டும்..
மக்களின் மரபு மருத்துவங்களாகிய சித்தமருத்துவம் முதல் மலர் மருத்துவம் வரை
அனைத்தும் நல்ல மனமுள்ள எளிய மனிதர்களின் அனுபவ அறிவால் உருவாகி அவர்களால் தொகுக்கப்பட்டு-
ஆளவந்தவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மதவாதிகளிடம் இருந்து பாதுகாக்கப்பட்டும் எளியவடிவில் மக்களின் நடைமுறை வாழ்க்கையாக முறைப்படுத்தப்பட்டும்
உள்ளது.
நமது மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த மக்களின் அறிவே இன்றும், நேற்றும் வந்தேறிகளால்
பலவிதமான வழிகளில் களவாடப்பட்டு பல்வேறு நாட்டு
கருவூலங்களில் வைத்து தங்கள் முன்னேற்றத்துக்காக
அதன் இரகசியங்களை ஆய்வு செய்துவருவதும் எல்லோரும் அறிந்ததே. இன்று நமது நாட்டு மக்கள் அறிவும் வளமும் கொள்ளை போவதற்க்கு காரணம் பொறுப்பில்லாத அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊடகங்களும், பல்கலைக்கழகங்களும் தான். தங்களை சித்தவைத்திய நிபுணர்களாக காட்டிக் கொள்பவர்கள் பின்னால் பசித்தலையும் செந்நாய்கள்போல இவர்கள் அலைகிறார்கள்.
இப்போதுள்ள சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பல்கலைக்கழகங்களோ தங்கள் பிழைப்புக்காக அதில் படித்து பட்டம் பெற்றவர்களோ எந்த ஓர் அடிப்படைத் தத்துவத்தையோ, மருத்துவ அறிவையோ இயற்கையைக் கவணித்துப் பெறவில்லை. அவர்களால் முடியவும் முடியாது. அதற்க்கு இப்பொழுதுள்ள அடிமை வணிக கல்வி முறையில் இடமும் இல்லை.
இவர்களது எல்லா பெருமைக்கும் வாழ்வுக்கும் ஒரே காரணம் நம் முன்னோர்கள் மற்றும் தற்போதுள்ள மரபுவழி மருத்துவர்கள் தான். இதை உணர்ந்தால் இவர்களது பேச்சு வேறாயிருக்கும் அது இவர்களது வாரிசுகளுக்கும், கேட்பவர்க்கும் நலம் தரும
சட்டப்படியே பார்த்தாலும் அலோபதி மருந்துகளை உரிய படிப்பு இல்லாமல் பயன்படுத்துபவர்களைத் தான் போலிமருத்துவர் என்கின்றனர். சுயநலத்துக்காக சில படித்த சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களும் அவர்களுக்கு துணையாக இருக்க படித்த மருந்தாளுனர்கள் அரசினால் ஏமாற்றப்பட்ட பதிவு செய்த மருத்துவ பயிற்சியாளர்களும், செவிலியர்கள் போன்றவர்கள் தான் இதுவரை போலி மருத்துவர்கள் என கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த கூட்டம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் மரபுவழி மருத்துவத்துக்கு பாதுகாப்பில்லை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி தம்மை மறைத்துப் பிழைக்கிறது.இந்த கூட்டத்திலிருந்து இப்போது படித்த சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர் விலக்கப்பட்டுவிட்டனர் !
நன்மை எதையும் தராதது, எந்தவிதமான உண்மையின் அடிப்படையும் இல்லாதது, எந்த நோயையும் குணப்படுத்த இயலாதது, சுற்றுச்சூழலுக்கும், எல்லா உயிருக்கும் கேடானது, எளிய மக்களால் புரிந்துகொள்ள முடியாதது உடலியற்கைக்கு எதிரானது, என அனைத்துப் தற்பெருமைகளும் கொண்ட இந்த போலி மருத்துவத்தை எந்த ஒரு மனிதநேயமுள்ள மரபுவழி மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அழுத்தமான உண்மையான அன்பின் வெளிப்பாடு ! உண்மையான மரபுவழி வாழ்க்கை உணர்வோடு வாழும் நாள் ...உணர்வாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விட்டது....சிறப்பாக வாழ்வோம் ! வாழ வழி செய்வோம் ! நன்றி ! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்கு