பதஞ்சலி நல மையம், மேடவாக்கம் மற்றும் மரபுவழி நலவாழ்வு மையம், ஆவடி
இணைந்து நடத்தும்
மரபுவழி மருத்துவங்களின் அறிமுக விழா
நம் உடலில் வரும் நோய்கள் அனைத்தையும் நீக்கி நோயற்ற வாழ்வு வாழ வேண்டுவோர்க்கான எளிய பாதைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். சில பத்தாண்டுகளாக நாம் நம் முன்னோர்களின் நலவாழ்வுக்கான விதிகளை மறந்து தவறான பாதையில் வெகுதூரம் வந்துவிட்டோம். விளைவு;
· குழந்தை பிறப்பு என்பதே நோயாகிவிட்டது.
· குழந்தைகளுக்குக் கூட கடும் உடல் நலக் குறைவு.
· ஆரோக்யமுள்ள சிறுவர், சிறுமியரை, இளைஞர்களை பார்க்க முடியவில்லை.
· உடல் வலி, மனத் துன்பம் இல்லாத நடுத்தர வயதினரை பார்க்க முடியவில்லை.
· கர்ப்ப பை சார்ந்த நோயில்லாத பெண்களையோ, மூட்டுவலிகள் இல்லாத முதியவர்களையோ பார்க்க முடியவில்லை.
· நமது வருவாயில் பெரும் பங்கு நவீன மருத்துவச் சோதனைகளுக்கும், நிரந்தரத் தீர்வு தராத மருந்துகளுக்கான செலவுகளுக்குமே வீணாகிறது.
· பலர் இந்த நோயின் நரக வாழ்வை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டனர். இதற்குச் செய்யும் செலவுகளைப் பெருமையாக கருதி மேலும் துன்பத்தை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள.
இவர்களுக்காக, நாளும் ஒரு நோய்க்கான சிறப்பு நாட்களை ஒதுக்கி விழாக்கள் கொண்டாடி வருவதைத் தவிர நவீன அறிவியலில் இதற்கு ஒரு தீர்வும் இல்லாததை பார்க்கிறோம்.
ü நலவாழ்வு என்பது கனவாய் போனதோ?
ü இந்த நோய்ச் சூழலில் இருந்து விடுபட வழி இல்லையா?
ü எனது குழந்தைகளை இந்த சூழல் அழிவிலிருந்து எப்படி காப்பேன்?
ü நல்ல நஞ்சில்லாத உணவுகள் கிடைக்காதா? முன்பு சாப்பிட்ட உணவுகளின் சுவை மீண்டும் கிடைக்காதா?
ü பக்கவிளைவில்லாத எளிய மருத்துவ முறைகள் உள்ளதா?
ü மருந்துகளே இல்லாமல் நலவாழ்வு பெறமுடியுமா?
ü நமக்கு நல்ல கை வைத்தியம் சொல்லித் தர ஆளில்லையே; யாரிடம் கேட்பது?
ü எளிய மருத்துவ முறைகளை நாமே கற்றுக்கொள்ள முடியுமா?
ü உடல் உறுப்புகளையும், பணத்தையும் இழக்காமல் நமது நோய்களைச் சரிசெய்து கொள்ள முடியுமா?
ü எனது பெற்றோர்களின் கடைசி காலத்தை அவர்கள் மகிழ்ச்சியாக, நோய்த் துனபமில்லாமல் கழிக்க என்ன வழி?
என கவலைப்படுபவர்கள் மிகச் சிலரே! இவர்களே நலவாழ்வுக்குத் தகுதியானவர்கள். அவர்களுடைய நலவாழ்வுக்கான பாதைகளை கண்டறியவும், நம்பிக்கையூட்டவும், பகிர்ந்துகொள்ளவும் உதவுவதே எங்கள் மரபுவழி நலவாழ்வு மையங்களின் நோக்கம்.
நலவாழ்வை விரும்பும் உங்களுக்கு, இங்கு வருகை தருவது உங்கள் உடல்நிலை பற்றி அறியவும், உடல் துன்பங்களை நீக்கும் வழிகளை அறியவும், நல வாழ்வுக்கான முறைகளை பகிர்ந்து கொள்ளவும், சிகிச்சை பெறவும் உதவும்.
மக்கள் மருத்துவத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அனுபவமிக்க மருத்துவ நிபுனர்களை இங்கு நீங்கள் சந்திக்கலாம், நீங்கள் விரும்புபவர்களிடம் உங்கள் நலம் குறித்த ஆலோசனைகளையும், சிகிச்சையையும் பெறலாம். முகாமுக்குப் பின்னரும் தொடர்ந்து மரபுவழி நலவாழ்வு மையத்தின் ஆலோசனைகளும் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.
இன்றைய முகாமுக்கு தனது பங்களிப்பைத் தரும் மருத்துவர்கள்,
திரு. ஹதர் முகமது, திரு.ந. தமிழவேள், திரு. ரெய்கி குமார் – இறைவழி மருத்துவம்.
திரு. விஷ்வஜோதி. வேலாயுதம்., திரு.நாகராஜ் – மரபுவழி சித்த மருத்துவம்
திரு தி. அ. பாலசுப்ரமணியம் - ஹோமியோ மற்றும் சித்த/வர்ம மருத்துவம்
திருமதி. வேல். ரத்னாM.D, PhD (ACU), திரு. ஆர்.சுப்புராஜ் M.D (ACU) - வர்ம மருத்துவம்.
திருமதி. மகேஸ்வரி M.D (ACU)., திருமதி.மாலினி. M.D (ACU) - வர்ம மருத்துவம்.
திருமதி.பசுங்கிளி. M.D (ACU) , திருமதி.கற்பகம் . M.D (ACU) - வர்ம மருத்துவம்.
திரு.தியாக ராஜன் – வர்ம மருத்துவம்
.
நாள்; 21.- 8 – 2011. ஞாயிறு காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை
இடம்; மரபுவழி நலவாழ்வு மையம், எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054.
தொலை பேசி எண்; 93458 12080, 94447 76208
.
மின்னஞ்சல் : thamizhavel.n@gmail.comபதிவுக் கட்டணம்; 100 ரூபாய் (பதிவு செய்பவர்களுக்கு ஆலோசனைகளும், சிகிச்சையும் இலவசம்)
பதஞ்சலி நல வாழ்வு மையம்,
மருத்துவர் ரத்னா - திங்கள் - சனி 10AM- 1PM,
மருத்துவர் தமிழவேள் - புதன், சனி - 10AM -7PM, ஞாயிறு - 10AM - 1PM.
மரபுவழி நலவாழ்வு மையம்
எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054.
மருத்துவர் தமிழவேள் -திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி 10AM -7PM
மருத்துவர் சுப்புராஜ் திங்கள்- சனி 7 PM -9 PM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.