செவ்வாய், 12 அக்டோபர், 2010

இறைவழி மருத்துவம் யாருக்கானது.


மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமையைப் பற்றிய இறையச்சத்தை நன்மையாக கருதி சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுபவர்களுக்கே இறைவழி மருத்துவம்.

திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். படித்தவர்கள் பலர், திருக்குறளில் நலவாழ்வு பற்றிய இறைவழி மருத்துவ-சித்த மருத்துவ நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப் படுகின்றது. உணர்ந்து பின் பற்றுபவர் மிகச் சிலரே.

தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாததா திருக்குறள். நம் நாட்டில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மருத்துவ காப்பீடு என்ற பெயரில் நடப்பது என்ன?

எந்த ஒரு நோயையும் குணப்படுத்த வக்கில்லாத மருந்து-அறுவை வணிகத்துக்கு மக்கள் பணம் விரையமாகிறது. மக்களின் உயிரும் உடலும் பலியிடப் படுகிறது.

இந்திய அரசின் சட்டப்பிரிவு மருத்துவம் மற்றும் அழகு சாதனங்கள் பற்றிய சட்டம் செட்யூல் J 51 படி எயிட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸதுமா, கல்லீரல் சார்ந்த நோய்கள், கர்ப்ப பை சார்ந்த நோய்கள, போன்ற பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க தடைகள் இருந்தும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணம் விளம்பரங்களாகவும், விழாக்களாகவும், கருவிகளாகவும் தடுப்பு மருந்துகளாகவும் வீண்டிக்கப் படுவதும், மனித நலத்துக்கு எதிரான வணிகர்களின் பைகள் நிரப்ப படுவதும் ஏன்?

நம் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மனித எதிரிகளை வெளிப்படுத்தாமல அவர்கள் கொள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க காரணம் தமது செயல்பாடுகளுக்கு பெரிய வணிகர்களின் நிதி உதவியைச் சார்ந்திருப்பது தான்.

மக்கள் நலவாழ்வு பற்றிச் சிந்திக்காமல் இருக்க அனைத்து வழிகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்ற அனைத்து ஊடகங்களும்) தடுக்கப் படுகின்றனர். அடிமைக்கல்வி முறை, அடிப்படைத் தேவைக்கே(உணவு, தண்ணீர், உடை, வீடு) இவற்றுக்கே தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்ற நிலையில் மக்கள் வாழ்க்கை.

காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உழைத்தால்த்தான்- படித்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் எனும் நிலையில் மக்கள் வாழ்க்கை.

இதை எல்லாம் மீறி சிந்திக்க வாய்ப்பு பெற்றோர்தான் நலவாழ்வைத் தேடி நலம் பெறுகிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் விழிப்படையும் போது தான் தனி மனித விடுதலை சாத்தியம். இதற்கே என் எழுத்தும் பேச்சும்.

நீங்கள் குறிப்பிட்டது போல் போலியான தற்போதய மருத்துவ முறைகளையும், மனித நேயமற்ற அறிவியலையும் பழம் பொருள் காட்சியகத்தில் வைக்க போதுமான அறிவியல் மற்றும் நூட்பங்களுக்கு குறைவில்லை இந்த உலகத்தில்-நம் நாட்டில்.

ஆனால் மக்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக இல்லை. நீண்ட நாளைய அடிமைக் கல்வி, வாழ்க்கை முறை, தூய்ப்பு வெறி, இதில் கிடைப்பதாக நிணைக்கும் சுகம், இது கூட இல்லாமல் போய்விடுமோ எனும் பயம், என எல்லாம் தான் மனிதனை நல வாழ்வில் இருந்து தடுக்கிறது.

சிறிது துணிவும், விழிப்புணர்வும் போதும் நலவாழ்வைப் பெற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.