செவ்வாய், 12 அக்டோபர், 2010

நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.

நண்பர்களே, இறைவழி மருத்துவம் பற்றி கேட்டிருந்தீர்கள், எங்கு யார்,எப்படிச் செய்கிறார்கள்? என்பது வினா.
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமைகளை நன்கு சிந்தித்துணர்ந்து நண்மையை நாடுவோர்க்கே, சித்த மருத்துவம், இறைவழி மருத்துவம் பயன்தரும்.

இறைவழி மருத்துவத்தை பலர் இயல்பாக்ப் பயன்படுத்துகிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் விரைவில் சுகமாகிவிடும், அமைதியாக இருங்கள், இறைவன் நன்மையுண்டாக்குவான் என்று கூறுபவர்கள் இறைவழி மருத்துவம் செய்தவர்களாகிறார்கள். பெருமைக்காக, அந்த மருத்துவமனைக்குப் போ, இந்த மருந்துகளைச் சாப்பிடு, என்று நிலமை தெரியாமல் பயத்தையும், பதட்டத்தையும் ஊட்டி மேலும் குழப்புபவர்கள் துன்பத்திலிருப்பவரை மேலும் துன்பப் படுத்துபவர்களே.

கண்ட டாக்டர்ட எல்லாம் போய் மேலும், மேலும் துன்பத்தை இழுத்துகிடாம வீட்டில பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுட்டு ஓய்வெடுங்க சரியாகிடும் என்று சொல்பவர்களும் இறைவழி மருத்துவர்கள் தான்.
திருவள்ளுவர் சிறந்த இறைவழி மருத்துவரே, மருந்து பற்றிய குறள்களில் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் சுவையுங்கள் மருந்து தேவையே இல்லை என எளிமையாக நலவாழ்வக்கான வழிகாட்டுகிறார்.

நான் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எந்த ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. என் குழந்தைகளுக்கு மருந்துகளோ,தடுப்பூசிகளோ போட்டது இல்லை. என் குடும்பத்தினரோ, நணபர்களோ அலோபதி பக்கம் திரும்பியதில்லை.

தனக்குள் இருக்கும் இறையாற்றல் தன்னை குணப்படுத்தப் போதுமானது என்ற உணர்வை இறைவழி மருத்துவம் மூலம் பெற்றவர் யாரும் மருந்துகள் என்று எதையும் உட்கொள்வதில்லை. மேலும் அவர்கள் பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ என்னுவதில்லை, தமக்கு வெளியே இறைவனைத் தேடுவதில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைச் சுவைப்பதையே இறைவழிபாடாக செய்வதுவருவதினால் அவர்களால் பிறர்க்கும் துன்பமில்லை.
நண்பர் சித்தர். பஸ்லூர் ரகுமான் மற்றும் அவரால் இறைவழியில் இணைந்தோரும் பல ஆண்டுகளாக  மக்களுக்கு இறைவழியில் வழிகாட்டி வருகிறார்கள். தங்களின் அனுபவத்தையும், ஆங்கில மருத்துவத்தின் கேடுகளையும்  அவரது ஹெல்த் டைம் மாத இதழ் மூலமாகவும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், தொலைக்காட்சி நிகழ்சி (6,30 வெள்ளிக் கிழமை மாலை) மூலமாகவும் வெளிப்படுத்தி மக்களிடம் 
விழிப்புணர்வைத் தூண்டிவருகிறார். அவரது மாணவர்கள், இறைவழிமருத்துவம் பெற்றவர்கள் யாரும் சாதி மதம், இனம், என வேறுபாடு பார்பதில்லை. விழிப்படைந்த மனிதர்களையும் சூழலையும் நேசிப்பவர்களாகவே பார்க்கிறேன்.
சித்தமருத்துவம் என்பது சாகாக் கலையைப் போதிக்கும் தமிழ் அறிவியலின் ஒரு சிறு பகுதியே. மனிதன் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணர்ந்து, கலந்து, அதன் தன்மைகள்ப் பெறும் முயற்சியே சாகாக் கலை. இதில் வெற்றிபெற்றவர்கள் சித்தர்கள்.
உலகெங்கும் சித்தர்கள் இருக்கிறார்கள்.சீனாவின் லாவோட்சு தொகுத்துத் தந்த தாவோ, ஜப்பான் கொரியாவில் ஜென்,கார்லோஸ் வெளிப்படுத்திய டான் ஜுவானின் வழிகள் –இவை போல...
தாவோ சித்தர்கள் போல சொன்னால், ‘சொல்லப்பட்ட தாவோ உண்மையானதல்ல’ இறைவழியை உணரத்தான் இயலும். வாய்ப்பிருந்தால் மரபுவழி நலவாழ்வு மையம் வாருங்கள். பிறருக்கு நான் இறைவழியில் சுகப்படுத்துவதைப் பாருங்கள் நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.