வியாழன், 7 அக்டோபர், 2010

அடிப்படைத் தேவைகள் (BASIC NEEDS)

பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, நல்ல மனித உறவுகள், நிம்மதி, உடல்நலம், மனஅமைதி இவை போன்றவைகள் நமது அடிப்படைத் தேவைகள்.

 நாம் எவ்வளவு முயன்றாலும் இவற்றை உருவாக்கிக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் செலவு செய்தாலும் வாங்க முடியாது.


(எ.கா) பணத்தை வைத்து உணவைத்தான் பெற முடியும், பசியை வாங்க முடியாது. தூக்க மருந்துகளால் மயக்கத்தைத்தான் வாங்க முடியும் தூக்கத்தை வாங்க முடியாது.


நமது அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றித்தர இயலாத பணத்துக்காக, படிப்பறிவிற்காக நமது விலைமதிக்க இயலாத நண்மைகளைப் புறக்கணிக்கிறோம்.


இவ்வாறான அடிப்படைத் தேவைகளை புறக்கணித்து சேர்க்கும் பணம் இழந்தவைகளை ஈடுசெய்ய இயலாது, பின்னர் பயனற்ற மருத்துவர்க்கும், வழக்கறிஞர்க்கும், போதைப் பொருள்களுக்குமாக அழிகிறது என்பதை பார்கிறோம்.


படைப்பாற்றலின் அருட்கொடையாகப் பெற்ற இயல்பான இன்பங்களை மதிக்காமல், புறக்கணிப்பதே மனிதர்களின் துன்பங்களுக்குக் காரணம்.


இந்த இன்பங்களை மீண்டும் பெற விழிப்புணர்வுடன், வாழப் பழகுவோம்.