செவ்வாய், 5 அக்டோபர், 2010

விருந்தும் மருந்தும் மூன்று நாள் (JUST THREE DAYS OK)

'நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்' இந்தச் செல்வத்தைப் படைப்பாற்றல் மனிதனுக்கு வழங்கியுள்ளது.

தனது உடலியற்கையை அறிந்து நடப்பவர்க்கு இந்த செல்வம் பயன் படும். இந்த செல்வத்தைப் பாதுகாக்க உள்ளதே, நமது தற்காப்பு ஆற்றல் (நோயெதிர்ப்பு ஆற்றல்). இதற்கு உதவுவதே மருத்துவம்.

விழிப்புணர்வுள்ள மனிதர்களுக்கு, விருந்துக்கும் மருந்துக்கும் மூன்று நாள் தான் தேவைப்படும். ஏனெனில், தற்காப்பு ஆற்றலைத் தூண்டுவது மட்டுமே தான் மருந்தின் வேலை.

அதற்கு மேல் தேவையானது உடல் ஆற்றலுக்கு ஊறு செய்யாது உதவி செய்யக் கூடிய வாழ்க்கை முறைகளே, சிந்தனை முறைகளே ஆகும்.

மருத்துவரின் வேலை என்பது, உடல் ஆற்றல் தன்னைச் சீர் செய்யும போதும்,நோய் சத்தியுடன் நடக்கும் போராட்டத்தின் போதும் நிகழும் மாற்றங்களை பிணியிலிருந்து விடுபட்டுக் கொண்டிருப்பவருக்கு புரிய வைப்பதும்,  மென்மைப்படுத்துவதுமே ஆகும்.

விழிப்புணர்வில்லாது அறியாமையை மருத்துவம் என (உதாரணம்-அலோபதி) தேடுவோர் பரம்பரைகளாய் மருந்துண்ண வேண்டியது தான்.