இட்லி-தோசை உணவா? இல்லை சாவக்கேடா?
நாம் சாப்பிட்ட உணவு சீரணமாக, உணவின் தன்மையைப் பொருத்து 3 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக உடல்க் கருவிகள் உழைக்க வேண்டியுள்ளது. இதில் நமது அறிவுக்கான தேவை-முயற்சி எதேனும் உள்ளதா?
அனைத்து வேலைகளையும் உடல் தன்னியல்பாகச் செய்கிறது. நாம் செய்யும் – செய்ய வேண்டிய ஒரே வேலை உணவைச் சுவைத்துச் சாப்பிட வேண்டியது தான். இதை ஒழுங்காகச் செய்தால் உடல் மற்ற அனைத்துச் சீரன வேலைகளையும் சீராகச் செய்து முடித்து உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது.
உணவின் தேவையையும், நீரின் தேவையையும் பசியாக, தாகமாக மென்மையாக நம் அறிவுக்கு நம் உடல் உணர்த்துகிறது. அதுபோல ஈற்றுணவுக் கழித்தலுக்காகவும், கழிவு நீர் வெளியேற்றத்துக்காகவும் ஆன உணர்வினையும் மிக மென்மையாக நம் அறிவுக்கு உடல் உணர்த்துகிறது.
மேலும் நாம் உண்ணும் உணவை நமக்கு-நமது உடலியற்கைக்குப் பொருந்தியதா? இல்லையா? என்பதையும் சுவையின் மூலம் நமது அறிவுக்குத் தெரிவிக்கிறது நம் உடல்.
உணவினை நன்கு மென்று, சுவையறிந்து சாப்பிடும் போது தான் உமிழ்நீர் சுரக்கும் இதையே சான்றோர் அமுதம் என்கின்றனர். இந்த அமுதம் கலந்து வயிற்றுனுள் சென்றால்த் தான் உணவும், நீரும் சீரணமாகும். அவ்வாறு இல்லையேல் நஞ்சாகும்.
இதையே,
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்க்கும
களிபேர் இரையான்கண் நோய்.
என்றார்கள் நம் முன்னோர்கள்.
சாப்பிடும் போது உணவு உமிழ்நீருடன் கலந்து எந்த துன்பமும் இல்லாமல் தொண்டையில் இறங்க வேண்டும். – ஈற்றுணவுக் கழிப்பின் போது கழிவுகள் நம் முயற்சியில்லாமல் வெளியேற வேண்டும். இதுவே மேற்கூறிய குறளின் வழி.
தற்போது ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒருவேளை உணவை 5 ஆகப் பிரித்து மணிக்கொருமுறை சாப்பிடக் கூறுகிறார்கள். அதைச் சிந்தித்துப் பார்ப்பதையே மறந்து போன மனிதர்கள்! வழிகெடுகிறார்கள்.
பெரியவர்கள் ‘ஒரு வேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி’ என்பர் மூன்று வேளை உண்பவர்கள் உடலுக்கும், உயிருக்கும், பிறருக்கும் துரோகி என்பர் பல வேளை உணவெடுக்கும் இவர்களை எப்படி அழைப்பது?.
திருக்குறள் தன் மருந்து எனும் அதிகாரத்தில வரும் 6 பாடல்கள் உணவு உணபதைப் பற்றியதாகத்தான் உள்ளது. ‘வாயும், வயிறும் நன்றாயிருந்தால் நோயும், நொடியும் இல்லை’ என்பது படிக்காதவர் மொழி.
கடும் பசியில், களைப்புடன் உணவருந்துபவர்கள் இரண்டு வாய் உணவு சாப்பிட்டதுமே களைப்பு நீங்கி, உணவின் சுவையை பற்றிப் பேசுவது எவ்வாறு? மீண்டும் சத்தி பெற்று உழைக்கச் செல்வது எப்படி? உறுதியாக அப்பொது சப்பிட்ட உணவிலிருந்து சத்தியை பெற வாய்ப்பில்லை.
பசியோடு நன்கு சுவைத்துச் சாப்பிட்ட உணவு, உமிழ்நீரோடு கலந்து வயிற்றில் இறங்கும்போது- அதற்கு முன்பே நாக்கில் உள்ள சுவைச் சத்தியால் கணிக்கப்பட்டு, வயிற்றுக்கு வரும் உணவின் தரமும், அளவும், தன்மையும் மண்ணீரல் அறிகிறது உடன் வெவ்வேறு வகையான உணவினை சீரனிக்கத் தேவையான உடல்க் கருவிகள் அனைத்தையும தூண்டிச் சத்தியளிக்கிறது. இந்த சத்தியைப் பயன்படுத்தியே நாம் வேலைகளையும் செய்கிறோம்.
இந்த சீரணத்துக்கு அடிப்படையான வேலை. சுவைத்துச் சாப்பிடாதவர்களிடம் நடக்காது உமிழ்நீர் கலவாது வயிற்றினுள் செல்லும் உணவு நீண்ட நேரம் சீரணமாகாது. வயிற்றினுள் கிடப்பதால் புளிப்பேறி வயிற்றினுள் 2 நாள் மூடிவைத்த உணவு எப்படி மாறுமோ அப்படி ஆகி விடுகிறது. பலன் புளித்தேப்பம், வாயுத் தொல்லைகள்,வயிற்றில் கல்லைப் போட்டது போல துன்பம், நெஞ்சுக் கரிப்பு, ...
தலைப்புக்கு வருவோம். இட்லி, தோசை மிக மென்மையானது இது சுவைப்பதற்காக வாயில் காத்திருப்பதில்லை. அது பொதுவாகச் சேரும் கடும் கார, கடும் புளிப்புச் சட்னிகளுடன் கலந்து அல்லது சட்னி, சாம்பாரில் நனைந்து, உடன் வயிற்றில் இறங்கி விடுகிறது. அது போதுமான அளவு சுவைக்கப் படாததால் சீரனிக்கப் படுவதில்லை.
வயிற்றுனுள் நீண்ட நேரம் கிடக்கிறது. அங்கு மீண்டும் தன் நொதித்தல் வேலையைத் தொடர்கிறது. மாலையில் கரைத்து வைக்கும் மாவு மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கி வருவது போல் நமக்குள்ளும் செய்கிறது, காலையில் உண்டது மாலை வரை உடல்க்கும் மனதுக்கும் மிகத் துன்பம் தருகிறது.
மருதமலை சித்தமருத்துவர் சுப்பிரமணியன். இட்லி, தோசை சாப்பிடுவோரை வயிற்றில் சாராயம் காய்ச்சுபவர் என அழைப்பார் உண்மைதான். தற்போது வேலையில் எளிமை கருதி, பல நாட்களுக்கான மாவை அரைத்துச் சவப் பெட்டியில்(பிரிஜ்) வைத்துவிடுகிறார்கள். அதைவிட புத்திசாலிகள் கடையில் விற்கும் 6 ரூபாய்ப் பொட்டலத்தை வாங்கித் தக்காளிச் சட்னி, கடைப் பொடியுடன் உணவைத் தள்ளுகிறார்கள்.
சில நாட்களில் மூன்று வேளையும் இட்லி, தோசை பொடியுடன், 2 நாட்களுக்கு முன் அரைத்து வைத்த சட்னியுடனும் பயன்படுத்தும் குடும்பங்களை பெருவாரியாகப் பார்க்கிறேன்.
15 ஆண்டுகளுக்கு முன் வரை இட்லி, தோசை விழாக் காலங்களில் செய்யும் உணவாக இருந்த்து. அதைப் பணக்காரர்கள் உணவு என்றும் கூறுவார்கள். சீரணக் கோளாறுகளை, நீரிழிவை (சர்கரைப் பிணியை) வாத நோய்களை பணக்கார நோயென்றே மக்கள் அழைப்பார்கள் கருத்தில் கொள்க.
இட்லி, தொசை இல்லாத அந்தக் காலத்திலேயே மாப்பண்டம் தவிர் என்றனர் பெரியோர். முன்பு நம்மிடம் இருந்தது தொட்டாலே கைமணக்கும் நம்முடைய அரிசி. இப்பொழுது நாம் பயன்படுத்துவது நஞ்சுள்ள, சொத்தையான, சக்கை அரிசி!?..
இந்த குப்பைக் கல்வியைப் படிக்கச் செல்லும் தன் பிள்ளைகளுக்கு, மதிய உணவாக இட்லி, தோசையைக் கொடுத்தனுப்பும் தாய், தந்தையர் மாலையில் அவர்கள் சரியாகச் சாப்பிடாமல் கொண்டுவரும் இட்லியை சிறிது சுவைத்துப் பார்த்தால் நல்லது. மாட்டேன், நான் அதை-மிஞ்சியதை அடுத்த நாள் உப்புமாவாக்கித் தான் தருவேன் என்றால்,, அது உங்கள் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.