மாறாக என்ன இருக்கிறது? ...
கீழ் காணும் நமது குடிப்பான்கள் சுவையுடன் புத்துணர்வையும், உடல் மன நலத்தையும் அள்ளித் தரும். சுவையுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குளிர் குடிப்புகள்
1.வெள்ளரிக்காய் - 2
மாங்காய் இஞ்சி - சிறு துண்டு
இரண்டையும் சாறு எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழச்சாறு –ஓரிரு சொட்டு
உப்பு வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
குளிர்ந்த பானை நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.
2.நன்னாரி, வெட்டிவேர்-சம அளவு போட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பனை வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
3.கற்றாழைச்சோற்றை நன்கு கழுவி மசித்து அதனுடன் தண்ணீர், பனைவெல்லம் கலந்து குடிக்கலாம்.
4.முந்தய நாள் சோற்று நீரில சிறு கரண்டி வெந்தயம் போட்டு ஊற வைத்து மறுநாள காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிறு குளுமையடையும், வயிற்றுப்புண் தீரும்.
5.தேன் எலுமிச்சை சாறு ஒவ்வொன்றும் அரை சிறுகரண்டி சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க ஒற்றைத் தலைவலி தீரும்.
6. நன்னாரி, விளாமிச்சம் வேர், கருங்காலிப்பட்டை, சந்தன சிறாய் இவற்றை சம அளவு சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பனைவெல்லம் தேன் சேர்த்து குடிக்கலாம். உடல் சூடு தாகம் தணியும்.
7. கருவாப் பூ(கிராம்பு) - 10 கிராம்
சிறு நாகப்பூ - 20 அயிரை
சிறு மணகம்(ஏலக்காய்) - 40 அயிரை
மிளகு - 80 அயிரை
திப்பிலி - 160 அயிரை
சுக்கு - 320 அயிரை
நாட்டு அமுக்குரா - 640 அயிரை
பனை சக்கரை - 1280 அயிரை
ஒரு நாளைக்கு 5 அயிரை அளவு நீரில் போட்டு காய்ச்சிக் குடிக்கவும்.
பயன்- எட்டு வகை வயிற்றுப் புண்கள், வெட்டை, விக்கல் நீங்கும்.
மஞ்சள் பிணி(காமாலை) வந்தவர்க்கு ஊட்டமும், வலுவும் அளிக்கும். இரவு உணவுக்குப்பின் குடித்தால் நல்லுறக்கம் கிடைக்கும்.
8.கருந்துளசி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதில் பனைவெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
சூடான குடிப்புகள்
1. ஆவாரை
தழை நீர் வகைகளில் ஆவாரையும் ஒன்று. குளம்பிக் கொட்டையை கொதிக்க வைப்பதற்கு மாறாக, ஒரு கரண்டி ஆவாரம் பொடியும், ஒரு குவளை தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து தேவைக்கு ஏற்ப பாலில் பனைவெல்லம், தேன் கலந்து குடிக்கலாம். இது 4 பேருக்கு ஆகும்.
பயன்-
இதை காலை மாலை குடித்து வர சர்கரை பிணி தீரும். ஆவாரை கண்டவரை சாவு நெருங்குவது இல்லை.
2. தாமரைப்பூ
தாமரைப்பூ, செம்பரத்தை, மருதம்பட்டை, சுக்கு, மிளகு, ஏலம், தான்றிக்காய், கருவாப்பட்டை, துளசி இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி காய வைத்து நன்றாக பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு கரண்டி போட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்துப் பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
பயன்- இதயத்துக்கு இதமளிக்கும், படபடப்பு, மூச்சுத் தினறல், குருதிக் கொதிப்பு , குருதியில் மிகுந்த கொழுப்பு, இதய நோய் குணமாகும்.
தாமரைப்பூ, செம்பரத்தை, மருதம்பட்டை, சுக்கு, மிளகு, ஏலம், தான்றிக்காய், கருவாப்பட்டை, துளசி இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி காய வைத்து நன்றாக பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு கரண்டி போட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்துப் பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
பயன்- இதயத்துக்கு இதமளிக்கும், படபடப்பு, மூச்சுத் தினறல், குருதிக் கொதிப்பு , குருதியில் மிகுந்த கொழுப்பு, இதய நோய் குணமாகும்.
3. தொண்டை புகைச்சல், இருமல் குடிப்பான்
சாற்றுப்பூடு - 100 அயிரை
திப்பிலி - 50 அயிரை
சிற்றரத்தை - 25 அயிரை
இவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது அரை சிறுகரண்டி அளவு சூடான பாலில் தண்ணீரில் போட்டு குடிக்கவும்.
4, அடுக்குத் தும்மல் குடிப்பான்
ஈயேச்சக்கீரை, துளசி இரண்டையும் சம அளவு கலந்து குடிப்பான் செய்து குடிக்கலாம்.
மூளை, குடல் தூய்மை குடிப்பான்
கொட்டைக்கரந்தை இலையைப் பறித்து நிழலில் காயவைத்து, அரைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பயன்- இதனை காலை, மாலை இரு வேளை குடித்து வர மூளைக்கும், உடலுக்கும் நல்லது.
நீரழிவுக் குடிப்பான்
நாவற்பட்டை -50 அயிரை
வெந்தயம் -50 அயிரை
பொடுகுதலை -50 அயிரை
நாவற்பட்டை -50 அயிரை
வெந்தயம் -50 அயிரை
பொடுகுதலை -50 அயிரை
கடுக்காய -50 அயிரை
நெல்லிக்காய் -50 அயிரை
தான்றிக்காய் -50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
நெல்லிக்காய் -50 அயிரை
தான்றிக்காய் -50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
வல்லாரை குடிப்பான்
வல்லாரை - 100 அயிரை
மருதம்பட்டை - 50 அயிரை
துளசி - 50 அயிரை
சாற்றுப் பூடு - 50 அயிரை
கருவாப் பட்டை(லவங்கப் பட்டை)- 50 அயிரை
தாளிச இலை - 50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
வல்லாரை - 100 அயிரை
மருதம்பட்டை - 50 அயிரை
துளசி - 50 அயிரை
சாற்றுப் பூடு - 50 அயிரை
கருவாப் பட்டை(லவங்கப் பட்டை)- 50 அயிரை
தாளிச இலை - 50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
நீர் கட்டு, வீக்கத்திற்கு குடிப்பான்
பத்து மூலம் – வில்வ வேர், முன்னை வேர், பெருவாகை வேர், குமிழ் வேர், பாதிரி வேர், மூவிலை வேர், ஓரிலை வேர், கண்டங்கத்தரி வேர், நெரிஞ்சில் வேர் , நீர் முள்ளி, வாழைப்பூ, மூக்கிரட்டை இதனை நிழலில் உலர்த்தி காயவைத்து கருக்கு நீர் செய்து வடிகட்டி குடிக்கலாம்.
பயன்- கை, கால், உடல் நீர் கட்டு, வீக்கத்திற்கு, உடல் வலி ,இருமல், இரைப்பு, சளி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.