திங்கள், 8 ஏப்ரல், 2013

நம் உடலை அறிவோம் - Know Your Body - 61

KNOW YOUR BODY - 61

"What is necessary to change a person is to change his awareness of himself."
-- Abraham H. Maslow


நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களா....

  • சமீபத்தில் ஏதாவது பறவையின் செய்கையை கவனித்தீர்களா ?

  • திறந்த வானத்தில் நட்சத்திரங்களை கண்டீர்களா ?

  • கடைசியாக பார்த்த வண்ணத்துப்பூச்சியின் நிறம், தகைவு நினைவிருக்கிறதா ?

  • சென்ற வாரத்தில் யாருடனாவது மனம் விட்டு பேசி / சிரித்து மகிழ்ந்திருந்தீர்களா ?

  • உங்கள் சுற்றுப்புறத்தில் ஒன்றிரண்டு மலர்களாவது தென்படுகிறதா ?

    இந்த கேள்விகளுக்கு பெரும்பாலும் ஆமாம் என்று பதில் கூறினால், உங் கள் உடல், உள்ளம் ஆன்மா

    இசைந்திருக்கிறது, உங்கள் வாழ்வு உங்கள் கையில் !!  இல்லையெனில் கீழ்க்கண்டவற்றை படிக்கவும்..

 

  • உங்கள் அக்கம் பக்கம், சுற்றத்துடன் கோபத்தில் கத்தினீர்களா...

  • எந்த வேலையையும்  பரபரப்புடனே  செய்கிறீர்களா?

  •  நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளின் 80% கடைசி நிமிடம்,கடைசி நாளில் தான் நடைபெறுகிறதா ?

  • செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதா ?

  • மன அழுத்தத்தால், அதிகமாக உணவை உட்கொள்கிறீர்களா ?

பெரும்பாலானவை "ஆமாம்" என்றிருந்தால், தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்...

ஒரு அமைதியான விடுமுறை,அல்லது  செய்யும் செயல்களிலிருந்து ஓய்வு எடுக்கும் நேரம் வந்து விட்டது என்று

அறிந்து கொண்டு "நீங்கள் நீங்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்"

 

 

  • Are you in Control......(Regardless of whatever position type of job or (jobless !) you are in.....)

    • Can you recall the last time you watched a bird doing something...
    • Have you recently watched  stars in the open night sky...
    • Do you remember the colour /design of the butterfly you saw lately..
    • Have you ever laughed or talked with your full heart and soul in the recent one week...
    • When you look around, do you see at least 2 or three flowers with different colours
    • If replies to many of these are "Yes", then your body, mind and soul are in your control.

      Otherwise try these....
      • Did you shout to your near and dear ones recently
      • Are you always in a hurry to finish things
      • Do you complete your tasks (or 80% of them) in the last minute/hour/day only ?
      • Is your pending tasks list always bulging ?
      • Are you over-eating due to stress.....
      If you have "Yes" to many questions, then,Nope...You have to improve a lot....Please practice......

       It is high time you slow down..., to improve your health, take a vacation /break, and be yourself.

 

SHARE THIS EMAIL
FOLLOW on TWITTER
JOIN on FACEBOOK

unsubscribe from this list | update subscription preferences 
Copyright © 2013 Health, All rights reserved.


Email Marketing Powered by MailChimp

திங்கள், 1 ஏப்ரல், 2013

நம்ம சட்டம் இந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது.


இந்திய மருத்துவச் சட்டம்
இந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது. அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.
ஆனால், நடப்பது என்ன? மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.
மருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.
சிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.
அழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.
தமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் மருத்துவம்!
(குறிப்பு:20.௩.௨00௯ முதல் ௨௨.௩.௨00௯ வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)
Posted by முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்