புதன், 24 ஆகஸ்ட், 2016

மருந்தில்லா மருத்துவர்க்கு - நோக்கத்தில் கவணம் குறித்து

மரபுவழி நலவாழ்வு மையம் நோக்கமும், செயல்களும்
04 August 2016
09:38
நான் இறைவழி மருத்துவ ஞானத்தை பெற்ற பின் இது எல்லா மனிதர்களுக்கும் பயன்பட வேண்டும் என விரும்பினேன். எனது மதிப்புக்குரிய நண்பர்கள் பலரிடம் அவர்களுக்கும், அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கும் உள்ள உடல், மனத் தொல்லைகளை  நீக்கி சுகம் பெறும் வாய்ப்பு கொடுத்து பின், இறைவழி மருத்துவம் எல்லோர்க்கும் போய் சேர வேண்டும் எனும், என் விருப்பத்தை கூறினேன்.
பலர், நிறைந்த பாத்திரமாகவே இருந்தனர். சிலர் இதை வருவாய் தரும் வகையில் எப்படி மாற்றுவது என விதவிதமான யோசனை கூறினர். சிலர் தங்களை, தாங்கள் சார்ந்த அமைப்பை வளர்க்க, பயன்  படுத்தவிரும்பினர்.
பொது உடமை, தேச நலன், இன நலம், நாத்திகம், மக்கள் நலம்உடல் நலம், ஆன்மீகம் என பேசும் எனக்குப் பழக்கமுள்ள  அனைத்து நண்பர்களும் உண்மையில் தாங்கள் பேசுவதில் உறுதியாகவோ, திறந்த மனதுடையவர்களாகவோ இல்லை. தங்கள் தனித் தன்மையை தலைமையைப் பாதுகாப்பதிலும், பெருமையை வளர்க்கவும்தங்கள் இயலாமையை மறைக்கவும்  கிடந்து தத்தளிப்பவர்களாகவே கண்டேன்.

முழுமையின் - எளிமையும், தூய்மையும், நேர்மையும், அன்பும், மென்மையும் மனதின் பெருமைக்கு அடிமைகளான மனிதர்களை அஞ்ச வைப்பதாகவே உள்ளது.

மனம் மேலும், மேலும் சிக்கலையே விரும்புகிறது. மனம் பயன்படுத்தும் படிப்பறிவோ மனிதனை நல்லது, கெட்டதென கூறுபோட்டு விடுகிறது. மனிதனுக்கு - அவனையே எதிரியாக்கி விடுகிறது.
..........
மனிதனின் படிப்பறிவால்  அறிந்த - எளிமையும், தூய்மையும், நேர்மையும், அன்பும், மென்மையும், காதலும், தேசப்பற்றும், பக்தியும்  அவனது செறுக்குக்கு போர்வையாகவே உள்ளது.

 மனிதர்கள் மனதின் பெருமைக்கு அடிமையாகி, இறைவனுக்கு நன்றி மறந்தவர்களாகவே இருக்கின்றனர்.

பிச்சைக்காரர்களை இறைவன்  திருப்தி படுத்த இயலாது. கிடைத்ததை  பயன்படுத்தவும், மேம்படுத்ததவும் அறியாது மேலும், மேலும் தேடிக்கொண்டே இருப்பவர்கள் பிச்சைக்கார மன நிலையில் உள்ளவரே.

நன்றியுணர்வு நம்மை வெறுமையாக்கி விடும். முழுமையாக்கிவிடும். நம்மை எல்லாம் உடையவர்களாக மாற்றிவிடும். அதுவே இறையின் சாந்தமும், சமாதானமும் பெற்றுத் தரும் திறவுகோல்.

நான் உணர்ந்த - கற்ற இறைஞானங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மரபுவழி நலவாழ்வு மையத்தை உருவாக்கி இறைவழிமருத்துவம் மற்றும்  தமிழ் மரபுவழி மருத்துவம், மலர் மருத்துவம் ஆகியவற்றை தேவையுள்ளவர்க்கு சுகமளித்தும்,  தேடுபவர்களுக்கு கற்றுக் கொடுத்தும் வருகிறேன்.

மூன்று வழியில் மரபுவழி நலவாழ்வு மையம் நலவாழ்வை  பார்க்கிறது.

  1. உடலை - தன்னைத் தானே சுகப்படுத்திக் கூடியதாக, பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையதாக இறைவன் படைத்துள்ளான்.
  2. மனம் - நன்மை தீமையைப் பிரித்துணரக்கூடியது, நன்மையை நாடுவதால் சுகமாக - செம்மையாகக் கூடியது.
  3.  ஆன்மா -  இறைஞானங்களைக் கோண்டு மனதை நெறிப்படுத்துவது. இறையுடன் உள்ள தொடர்பால் தன்னை சுகமாக்கி கொள்ளும்.

ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் இணைந்ததே  மனிதனின் நான் எனும் இறைத்துளி.

மனிதனின் நான் தனது இயல்பான இறைத் தன்மையுடன் இருக்கும் போது மகிழ்வுடன் இருக்கும். எல்லாம் வல்லதாக இருக்கும். இறைவன் படைப்புகள் அனைத்தோடும் ஒத்தியைந்து சாந்தமும் சமாதானமும் மிக்கதாக இருக்கும். நானின் ஓர்மையுடன் கூடிய இருப்பே நலவாழ்வு.

படைப்பின் விளையாட்டால் - தன் படைப்பை சுவைக்கதன்னை தானே உணர  பிரிந்த இறைத்துளிகள் வாழ்வின் அனுபவத்துக்குப் பின் மீண்டும் இறையுடன் இணைவதே  வாழ்வெனும் பயனம்.

எனது எனும் மாயையால்; செய்யும் செயல்களின் விளைவும், தான் எனும் செறுக்கும் இறைவனிடமிருந்து பிறந்த நான்  துன்பம் அடைய காரணமாகிறது.

நன்மை, தீமைகளைப் பிரித்தறிய கொடுக்கப்பட்டதே பகுத்தறிவு. நான் இதில் நன்மையை நாடினால் நலம்.

இறைவன் நன்மைக்காக இறக்கும் எண்ணங்களை, வசதிக்காக நல்லது, கெட்டது என பிளவுண்ட மனதால் பிரித்துப் பார்த்தால்  முழுமைக்கு எதிரானவர்களாகி முரண்பாடுகளில் சிக்க வேண்டியுள்ளது.

அறியாமை, பயம், கவலை, வெறுப்பு, தனிமை, சுயநலம், விழிப்பிண்மை போன்ற மனதின் கேடுகளால் நானின் - ஆன்மாவின் இயல்புக்கு எதிராக மனம் செயல்படுகிறது.

இதை சரி செய்ய இறையருளால் தற்காப்பு அமைப்பு உடல், மன துன்பங்களை ஏற்படுத்துகிறது. இத் துன்பங்கள் மூலம் நமது தவறுகளை உணர்த்தவே, சரி செய்யவே, இறையன்பு விளைகிறது.

மனிதன் செறுக்கின் மிகுதியால், மனம் போன போக்கில் போய்,தன்னைச் சரிசெய்யவில்லை என்றால் இறையுடனான இடைவெளி அதிகரிப்பதால் அதற்கேற்ப மனிதனுக்குத் துன்பங்களும், வலிகளும், கேடுகளும் சூழ்கிறது.

தன்னை உணர்ந்த மனிதன் தனது மனதின் கேடுகளை நீக்கி இறைவழியில் தனது இயல்பை புதுப்பித்துக் கொண்டு, இறையச்சத்துடன் நலமாக வாழ்கிறான்.

பட்டும் தெளியாத அளவு மனதின் கேடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்க,  மன எண்ணங்களை சீராக்க இறைவன், எத்தனையோ வழிகளையும், மூலிகை மலர்களையும், நல்ல மீட்பர்களையும், கொடுக்கிறான்.

 எந்த வழியிலாவது தனது குழந்தைகளை நல்வழிப் படுத்த, தம்மிடம் மீட்க இறையாற்றல் விரும்புகிறது.

இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் வகுத்த வாழ்க்கை முறைகள், உடலைப் பேணவும், மனதை செம்மையாக்கவும், இறையை அடையவும் உதவுகின்றன.


தன்னை உணர்ந்து இன்புற்ற சித்தர்கள், மதில் மேல் பூணைகளாக நிற்கும் தேடுபவர்களுக்கு தாம் சென்ற வழியை காட்டவே மரபுவழி மருத்துவ-வாழ்க்கை நெறிகளை தொகுத்து அளித்துள்ளனர்.

தற்காலத்தில், மருந்தில்லா மருத்துவம் என பல மருத்துவ முறைகள் நன்மையை தேடுவோர்களிடம் பரவி வருகிறது. நல்லது தான்; ஆனால், மருந்தில்லா மருத்துவ முறை எனும் கருத்து பல தவறான புரிதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

தங்கள் சில்லரை நலன்களுக்காக சிலர்  இந்த கருத்தை அறிந்தோ, அறியாமலோ தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த போக்கு மனிதனின் தற்சார்புக்கான மக்கள் அறிவியலுக்கும் எதிராக போய் விடுகிறது.

நவீன அறிவியல் மருத்துவம் எனும் பேரில் மனிதர்களுக்கும், சூழலுக்கும் கேடாகி  பூமியின் உயிர்சூழல் இருப்புக்கே இடர் விளைக்கும் வணிகத்தை அடிப்படையாய் கொண்ட போலி மருத்துவ வணிகர்களிடமிருந்து மக்களை நல்வழி படுத்தவே மருந்தில்லா மருத்துவம் எனும் கருத்தை முன் வைத்தனர் நம் முன்னோர்கள்.

உடலைத் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள கூடிய அறிவுள்ளதாக இறைவன் படைத்துள்ளான்.  உடல் தன்னை சுகமாக வைத்துக்கொள்ளக் கூடிய சூழலை, விதிகளை, வாழ்க்கை முறைகளை கற்பிப்பதும், தவறும் போது உடலுக்கு சரிசெய்து கொள்ள உதவுவதும் தான் மருத்துவம்.

இதற்காகத்தான் நமது உணவையே மருந்தாகவும், பழக்க வழக்கங்களையே மருத்துவமாகவும் பழக்கினர்  நம் சான்றோர்கள். இதன் விரிவாகவே சித்த மருத்துவமும், சீன சித்தர்களின் தாவோக்களின் அறிவியலான சீனமருத்துவமும் உருவானது.

சித்த மருத்துவத்தினுடைய சிறப்பு உட்பிரிவே வர்ம மருத்துவம். சீன மருத்ததுவத்தின் உட்பிரிவே அக்குபஞ்சர் எனும் குத்தூசி மருத்துவம்.

அக்குபிரசர், ஆயுர்வேதம், ரிப்ளக்ஸாலஜி, காந்த மருத்துவம், தடவல் முறை, பிரமீடு, ரெய்கி, பிராணிக் ஹீலிங், சக்ரா ஹீலிங், கற்கள், மாந்திரிகம் என்பதெல்லாம்  மேற்கூறிய சித்தமருத்துவம், தாவோக்களின் சீன மருத்துவம், சூபிகளின் யுனானி மருத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்த பகுதிகளே.

 மக்கள் நலம் நாடும் மருத்துவர்கள்,  மருத்துவத்தை முழுமையாக கற்றுக் கொள்ள தொடர்ந்து மாணவனாக இருக்க வேண்டும். தனக்குத் தெரிந்த சில நுட்பங்கள் போதுமானது இதுவே முழுமையானது எனும் முடிபுக்கு வரவே கூடாது. இது அவர்களையும் அவர்களை நம்பி வருபவர்களையும் அழித்துவிடும்.

மூலிகைகளையும், தாதுக்களையும், உப்புக்களையும்,உயிரினங்களையும் என இறைவன் கொடுத்த அனைத்தினையும் கொண்டு உடல், மனதை சீராக்க அறிந்தவர்களே சிறந்த மருத்துவர்கள்.

 இவர்களிடம் இருந்த, நேர்மையும், உண்மையும், முழுமையும், இறைவனை பற்றிய புரிதலும் இவர்களை சித்தர்களாயும், தாவோக்களாகவும், சூபிகளாகவும், இறைத் தூதர் களாகவும் உயர்த்தியது.

இவர்களேஉண்மையான மருந்தில்லா மருத்துவர்கள். மற்றவர்கள் போலிகளும் நடிகர்களும் தான்.

இந்த உயர்நிலைக்கு வர தொடர்ந்து கற்க வேண்டும். தேங்குவதெல்லாம் அழுகி அழிந்து விடும். சான்றிதழுக்காகவோ, வருவாய்காகவோ ஒருவர் தனது முன்னேற்றத்தை வீணாக்கி விடவேண்டாம்.

உங்களை தற்சார்புள்ளவர்களாக மாற்ற உதவும் வகையில் மரபுவழி நலவாழ்வு மையத்தின் செய்ல்பாடுகள் அமையும்.

அதற்கு உதவ உங்கள் கருத்துகளை பதிய வேண்டுகிறேன்.

அன்பை மறவா,
 தமிழவேள் நளபதி
மரபுவழி நலவாழ்வு மையம்,
  1. அண்ணா தெரு, ஆவடி, சென்னை -600054.
கைபேசி; 9345812080, 9444776208, 7010560588

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.