வெள்ளி, 4 ஜூலை, 2014

இறைவழி மருத்துவத்தின் சிறப்பு



இறைவழி மருத்துவம்.
 
மனிதனையும் பிற உயிர்களையும் படைத்த படைப்பாற்றல் தான் படைத்த படைப்புகளில் உயர்வான படைப்பாகிய மனிதனை முழுமையானவனாக படைத்துள்ளது.

மனிதனது உடலையும், மனதையும் - மனித அறிவின் சார்பற்றதாகவும், விடுதலையுடையதாகவும் படைத்துள்ளது. படைப்பாற்றல் தான் படைத்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனிதனுக்கு வழங்கியுள்ளது.
மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டதாக இயற்கையை – சூழலையும் அமைத்துள்ளது. எல்லா உயிர்களயும் மனிதனுக்கு கட்டுப்பட்டும், இயற்கைக்குக் கட்டுப்பட்டும் வாழும்படி அமைத்திட்ட படைப்பாற்றல் மனிதனுக்கு மட்டும் தன்னை உணரும், படைப்பாற்றலை உணரும் மேல்நிலையடையும் வாய்ப்பினை கொடுத்துள்ளான் இதுவே மனிதனின் சிந்தனைத்திறன். இதன் மூலம் இயற்கையின் அடிமை எனும் நிலையிலிருந்து விடுதலையாகி தனது வாழ்க்கையை அழகானதாக, சுதந்திரமானதாக, நன்மை தருவதாக மனிதனால் மாற்றிக்கொள்ள முடியும்.
நன்மை, தீமைகளை சிந்தித்தறிந்து நன்மையை நாடுபவனே மனிதன். மனிதனால் மட்டுமே தனது மனிதன் எனும் நிலையிலிருந்து மேலான நிலைக்கு செல்ல முடியும். அதே போல விலங்கை விட கீழான நிலைக்கும் செல்ல முடியும்.
     
நமது முன்னோர்கள் தன்னையும், தனது வாழ்வின் சூழலையும், தன்னைப்படைத்த படைப்பாற்றலையும் உணர்ந்து தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கொண்டவர்களாயிருந்தனர்.

அவர்கள் தம் வாழ்க்கை முறைகளை பிற மனிதர்க்கும், மற்ற உயிர்களுக்கும் உதவுவதாக எளிமையாக-இனிமையாக அமைத்துக் கொண்டனர். தம்முள் உள்ள படைப்பாற்றலின் தன்மையை, அதன் அருளால் உணர்ந்தறிந்து சித்தர் நிலையை-சாகா நிலையை அடைந்தனர். நம் முன்னோர்கள் சாகாக் கல்வியையே உயர்ந்த கல்வியாக் நினைத்து பயின்றவர்கள்.

தற்பொதுள்ள மனித அறிவு நம் முன்னோர்களின் ஞானத்துக்கு முன் தூசுக்கும் ஒப்பிட முடியாது. சித்த மருத்துவத்தின் உயர்ந்த நிலையாக இறைவழி மருத்துவம் உள்ளது. இதை பல்வேறு நிலைகளில் பல பெயரில் (வேதசத்தி, வாசி நிலை, ஏகமூலி, முப்பு, குரு என பலவாறாக) குறிப்பிடுகிறார்கள்.

சித்த மருத்துவத்தின் உயர்ந்த மருந்துகளை செய்யும் முறைகளில் இறைவழி மருத்துவத்தினைக் கற்பதற்கான அடிப்படைப் பயிற்சிகள் உள்ளன.
எல்லாம் இறைச்செயல் என்றுணர்ந்து, தனது மனித அறிவை வெறுத்து, தனமுனைப்பில்லாது, படைப்பாற்றலிடம் - இறைவனிடம் நன்றியுணர்வோடும், இறையச்சத்தோடும் தனக்கும் பிறர்க்கும் நன்மையை சிந்தித்துணர்ந்து நாடுபவர்களின் தேவைகளை இறைவன் அழகான-மறைவான வழிகளில் உடன் நிறைவேற்றுகிறான். இதுவே இறைவழி மருத்துவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.