ஞாயிறு, 4 மார்ச், 2012

கடன் அட்டை வசதியும் உண்டுமருத்துவர்கள் நல மையம் வழங்கும்

கட்டண மருத்துவ சிகிச்சை முகாம்....

(கடன் அட்டை வசதியும் உண்டு)
முன் குறிப்பு : சிந்திக்க தெரிந்தவர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்...ஏனெனில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற நேரம் இல்லை......

நேரம் இரவு 11 -12 ........அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும்....

                       அனைத்து நகரங்களிலும்.....கண்டிப்பாக காசற்றவரும் கிராமவாசிகளும் வரவேண்டாம் எனக்கேட்டுகொள்ளப்படுகிரார்கள் 

மருத்துவ முகாமின் சிறப்புகள்....
  • வந்த நோய்கள் மட்டுமின்றி இனி வர இருக்கும் நோய் பற்றிய அறிமுக படம் திரையிடப்படும்
  • கடைக்கு சென்று மருந்து வாங்கும் தொந்தரவு இனி இல்லை...உங்கள் வீடு தேடி வரும். மொத்த பதிவுகளுக்கு சலுகையும் உண்டு...
  • மருந்து கட்டணங்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு....
சிகிச்சை அளிக்கப்பட இருக்குன் நோய்களின் அறிமுகம்....
  1.      இது நிறைய பேருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம்.....ஆனால் கவனித்து படியுங்கள்......உங்கள் உடல் நலனில் உள்ள அக்கறையினாலே பல ஆய்வுகள் செய்து, WHO பரிந்துரையின் பேரிலேயே இதை அளிக்கிறோம்....
  2.     அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றி தெரிந்திருக்கும். ஏற்கனவே போதிய விழிப்புணர்வு கொடுத்தாகி விட்டது.....ஆனால், நம் உடம்பில், உப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு போன்ற நோய்களும்...உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு....இவை பற்றிய ஒரு அறிமுக முகாமாகும் இது.....
  3. இந்த முகாமில் கலந்து பல்வேறு அளவை முறைகளை கண்டு பிற்காலத்தில் வரும் நோய்களுக்கு இப்பொழுதே தடுப்பு முறைகளை அறிந்திடுங்கள்....
உப்பு:

நம் உடம்பில் உப்பு சரியாக 10 mg அளவு மட்டுமே இருக்க வேண்டும்....இது கூடினாலும் குறைந்தாலும் அது நோயாக கருதப்படும்....இதை தவிர்க்க உப்பு சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்....தவிர்க்கப்பட வேண்டியவை

1.iodine கலக்காத சாதாரண உப்பு

2. கரும்பு வெல்லம் (அதிலும் சிறிது உப்பு சத்து உள்ளது)

3.பனை வெல்லம் (மிகுந்த கேடுடையது)

புளிப்பு:
புளிப்பு சத்தானது ஒரு உடலுக்கு 40 mg மட்டுமே தேவை. இந்த அளவில் மாற்றம் இருந்தாலும் அது "புளிப்பு" நோயாகவே கருதப்படும்...எனவே கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்கவும்

1. எலுமிச்சம்பழம்

2. சாத்துக்குடி

3. மாங்காய் 

துவர்ப்பு:

துவர்ப்பு சத்தின் சரியான அளவு 100 mg . அது கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.....

1. வாழைப்பழத்தின் தோல்

2.நெல்லிக்காய்  (அதிலும் பெரிய நெல்லி கூடவே கூடாது)....ஆனால் பூச்சி மருந்துகள் போட்ட ஆப்பிள் சாப்பிடலாம்....உங்கள் வயிற்றிலிருக்கும் பூசிகளும் இறந்து விடும்...மெழுகு பூசிய ஆப்பிள் மேலும் நல்லது...உங்கள் வயிற்றிற்கு மிகவும் நல்லது, அந்த மேழுகுப்படலம் உங்கள் வயிற்றில் படிந்து உங்கள் வயிற்றின் உள் பாகத்தை "அசிடிட்டி"-இலிருந்து காக்கும்.

3. மாதுளம்பழம்....

கசப்பு

கசப்பின் அளவு கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொண்டால் வாழ்நாள் முழுக்க இருதய நோய் இல்லாமல் வாழலாம்..அதன் சரியான அளவு 300 mg .  தவிர்க்க வேண்டிய உணவுகள்.

1. வேப்ப இலை (வாயிற்று பூச்சிக்காக குழந்தைகளுக்கு கூட கொடுக்கும் தாய்மார்கள் கவனிக்க...பின்னாளில் உங்கள் குழந்தைகள் இருதய நோய்க்கு ஆளாகலாம்...)
2. பாகற்காய் (சர்க்கரை நோயாளிகள் மட்டும் ஒரு கிலோ சாப்பிடலாம்)

இவை தவிர பல உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்...முழு தகவலுக்கு, அந்தந்த நோய் பெயரிலிருக்கும் வலைப்பக்கத்தை பார்க்க....(உதாரணம், www .புளிப்ப்பு.com ......).......நாங்கள் ஏதேனும் உணவுப்பொருளை விட்டிருந்தால் நீங்களாகவும் தெரிவிக்கலாம், அடுத்த பதிவில் சேர்த்து விடுவோம்......


மேற்கண்ட நோய்களுக்கு, எலி, மற்றும் பன்றியிடம் சோதனை செய்து பல அருமையான மருந்துகளை வெளியிட்டிருக்கிறோம்...முகாமில், முன் பதிவின் பேரில் அவை கிடைக்கும்....ஒரு குடியகத்தில் இருக்கும் பல பேர் ஒன்றாக பதிவு செய்தால், சலுகை விலையில் மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அளிக்கிறோம்.........போக்குவரத்து செலவு தனி......

பல நோய்கள் கொண்டவர்க்கு நிறைய உணவு வகைகளை தவிர்க்க சொல்வதால் பசி இருக்கலாம், எனவே உணவுக்கு மாற்றாக எங்களிடம் இணைபொருட்களும் உள்ளன. அவையும், powder மற்றும் capsule வடிவத்தில் கிடைக்கும். இவற்றை இரண்டு மணி நேர இடைவெளியில் உட்கொள்ளலாம்....அப்பொழுது பசியையே உணர  மாட்டீர்கள்.......நீரில் சேர்த்து குடிக்கவும் சில இணை பொருட்கள் உள்ளன.......அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் வசதியாக உண்ணலாம்.....


ஏற்கனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பல பழங்கள் மற்றும் இனிப்பு உணவுகளை, தவிர்க்க சொல்வதையும் நினைவில் கொள்க.....அவர்கள் அதனுடன் சேர்ந்து இந்த உணவுபபட்டியலையும் தவிர்க்க வேண்டும்...


IT  துறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மற்றும் பெரிய பதவியிலிருக்கும் அரசு , தனியார் அதிகாரிகளுக்கு  சிறப்பு சலுகைகள் உண்டு..... ...கண்டிப்பாக காசோலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் , கடன் கிடையாது.....


* இந்த விளம்பரம் (சர்க்கரை) நோயாளிகள் என்று நினைத்து அவ்வப்பொழுது தங்களை சோதனை  செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் உட்கொண்டுவரும் எனது நட்பு மற்றும் சுற்றத்தார் வட்டத்திற்கு சமர்ப்பணம்......

Regards
Maheswari
கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி 
...)