செவ்வாய், 28 டிசம்பர், 2010

நலமாய் வாழ-எளிய வழிகள் simple way to get - health 
நமது நலன் காக்க பல நுட்பமான-எளிய வழிகள் பற்றிய ஞானங்களை படைப்பாற்றல் கருணையோடு மனிதனுக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று தான் சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்.
உடலில் உள்ள பல சத்திகளை –அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள்.

அந்த நுட்பங்களின் அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.
சில ஆண்டிகளுக்கு முன் தேவேந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR HAND புத்தகத்தை படித்தேன். அதில் அழுத்த முறை சிகிச்சை பற்றிய சில பகுதிகள் சிறப்பாக இருப்பதை உணர்ந்து பயின்றேன்.

அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்க்கும் உதவியது. எனது புரிதல் படி அதை தொடர்ந்து பயன் படுத்தியதில் சில நுட்பங்களை அறிய முடிந்த்து. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த படத்தில் உள்ளபடி,

  1. மூளை (BRAIN)
  2. மூளை நரம்புகள் (mental nerves)
  3. பிட்யூட்டரி (Pituitary gland)
  4. பீனியல் (pineal gland)
  5. தலை (head nerves)
  6. தொண்டை(throat)
  7. கழுத்துப் பகுதி (neck)
  8. தைராய்டு சுரப்பிகள் (thyroid glands)
  9. முதுகெலும்பு (spine)
  10. மூலம் (piles)
  11. புரஸ்த கோளங்கள் (prostate glands)
  12. ஆண் பிறப்புறுப்புகள் (penis)
  13. பெண் பிறப்புறுப்ப (vagina)
  14. கர்ப்ப பை (uterus)
  15. விதைப் பை, சிணை (testicles , ovaries)
  16. நிண நீர் சுரப்பிகள் (lymph glands)
  17. இடுப்பு, முழங்கால்கள் (hip, elbows)
  18. சிறுநீர் பை (urinary bladder)
  19. சிறு குடல் (Small Intestine)
  20. பெருங்குடல் (Large Intestine/colon)
  21. குடல் வால் (appendicitis)
  22. பித்தப் பை (gall bladeer)
  23. கல்லீரல் (liver)
  24. தோள் பகுதி (shoulder)
  25. கணையம் (pancreas)
  26. சிறு நீரகங்கள் (kidney) 
  27. வயிறு (stomach)
  28. அட்ரீனல் சுரப்பி (adrenal)
  29. உதர விதாணம் (solar plexus)
  30. நுரையீரல் (lungs)
  31. காதுகள் (ear)
  32. சக்தி தூண்டல் (energy)
  33. காது நரம்புகள் (ear narves)
  34. குளிர்ச்சி (cold)
  35. கண்கள் (eyes)
  36. இதயம் (heart)
  37. மண்ணீரல் (spleen)
  38. தைமஸ் சுரப்பிகள். (thymus glands)
   
இவற்றின் சத்தி தொடர்புக்கான இடங்களை மேலுள்ள உள்ளங்கையின் படங்களில் பார்க்கலாம்.

இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும் போது அவ்விடத்தில் வலி தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில்- உறுப்பில் உள்ள நலக் குறைவை காட்டுகிறது.

இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் எந்தவிதமான துன்பங்கள்-நலக் குறைபாடுகள் இருப்பினும் அதற்கான சத்திப் புள்ளியை மிக மென்மையாகச் சில வினாடிகள் தொடுவதன் மூலம் அத் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் நலம் முழுமையாக கிடைக்கும் என்பது எனது பல ஆண்டு சோதனைகளின் முடிவு.

உதாரணமாக சில,

குடல் வால் (apandisis) 

சில நாட்களுக்கு முன் 15 வயதுள்ள சிறுவனை, கடும் வலியுடன் அவனது பெற்றோர் கூட்டி வந்தனர்.

அவனுக்கு heகுடல் வால் (apandisis)
வீங்கிப் பழுத்து மோசமான நிலையில் (4 வது நிலை என்றனராம்) இருப்பதால், 'உடன் அறுவை செய்து நீக்க வேண்டும் இல்லையெனில் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும்' என ஆங்கில மருத்துவர்கள் கூறியதால், அறுவைக்கு நேரம் குறித்தவர்கள்; பக்கத்து வீட்டில் (இறைவழி மருத்துவம் பெற்று- அனுபவம் உள்ளவர்கள்) கூறியதைத் தட்டமுடியாமல் அவர்களின் வற்புறுத்தலுக்காக வந்திருந்தனர்.

அறுவைச் சிகிச்சை தான் ஒரே தீர்வு என நம்பி இருந்த அவர்களிடம், இது ஒரு எளிமையான விசயம் தான் எளிய மூலிகை மருந்துகளாலோ, வர்ம மருத்துவத்திலோ, குடல் வாலில் வரும் புண் எந்த நிலையில் இருந்தாலும் சரி செய்ய முடியும் என விள்க்கினேன்.

இது உடனே தோன்றிவிட்ட துன்பம் அல்ல. நீண்ட காலமாக இதற்கான துன்பங்கள் – வலிகள் மற்றும் பல வழிகளில் உடல் நமக்கு இந்த தொல்லை வரப் போவதை உணர்த்த முயலும் நீங்கள் சரியான விழிப்பு நிலையில் இல்லாத்தால் தான் இதை இந்த அளவு முற்ற விட்டிருக்கிறீர்கள் என விளக்கினேன்.

அந்த சிறுவனும் நீண்ட நாளாக விட்டு, விட்டு வயிற்றின் வலதுபுறம் வலி வந்ததாகவும் அவ்வப்போது ஆங்கில மருந்துகள், என்ன நோய் எனத் தெரியாமலேயே சாப்பிட்டு வந்த்தையும் சொன்னான்.

பிறகு கை அழுத்த முறைப்படி வலது கையில் உள்ள 21 ம் எண் குறிப்பிடும் பகுதியில் கடுமையான வலி இருக்கும் தொட்டுப் பார் என்றேன். தொட்டுப் பார்த்துவிட்டு நன்றாக ஊசியில் குத்துவது போல் வலியை உணர்வதாக கூறினான். இந்த இடத்தில் வலி நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து இருக்கும் ஒரு வர்ம மருத்துவரிடம்- அல்லது அக்குபஞ்சரிடம் சென்றிருந்தால் இது அப்பொழுதே தீர்க்கப் பட்டிருக்கும்.

குடல் வால் பகுதியில் கழிவுகள் தேக்கத்தால் தான் இந்த நிலை இதை சரிசெய்ய அனுபவம் உள்ள பெரியோர் வாழைத்தண்டுச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கல்ந்து குடிக்கச் சொல்வார்கள். நாள் இடைவெளியில் ஒன்றிரண்டு முறை சாப்பிட்டாலே குடல் வாலில் தேங்கியிருந்த கழிவுப் பொருள் நீங்கிப் புண்ணும் ஆறி விடும்.

இறைவன் தேவை இல்லாமல் ஒன்றை படைப்பதில்லை. தனக்குத் தெரியாததை தேவை இல்லை என்று கூறும் முட்டாள் தனமான மனித அறிவை நம்பி அறுத்துப் போட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஊணமாகி அதன் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றேன்.

பின் இறைவழி மருத்துவ முறையில் வலியை நீக்கி விட்டு உள்ளங்கையில் உள்ள 21 எண் பகுதியை மென்மையாக சில விணாடிகள் காலையும் மாலையும் தொடும் படி கூறினேன். ஒரு வாரத்திற்குள் முழுமையான சுகம் பெற்றான் சிறுவன். அதற்கு மேல், அவன் கையில் 21ம் எண் பகுதியில், வயிற்றில் வலியோ துன்பமோ இல்லை. நண்மையை நாடுவோர்க்கு எவ்வளவு எளிய துன்பமற்ற வழிகள் உள்ளது பாருங்கள்!


 
புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate glands)

 

இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர். விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கடினமாகி வீக்கமடைந்து, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன. 

இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்பு, சதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன.சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள்.மேலும், அனைத்து சிறு நீரக கொளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்.

இங்கு உள்ளங்கையின் படத்தில் காட்டிய 11 ம் எண்ணுக்கான இடத்தில் வீக்கம் வலி இருப்பின் புரோஸ்டேட் சுரப்பியில் நலமற்ற தண்மை இருப்பதை உணரலாம்.

அந்த இடத்தினை காலை, மாலை சில விணாடிகள் மிக மென்மையாகத் தொடுவதன் மூலம் புரோஸ்டேட் தொல்லைகள் எதுவானாலும் மிக விரைவில் சீராகும்.


 

மூலத்துக்கு (piles)

 

மூல நோய் என்பது ஆசனவாய் பகுதியில் வெளிப்படுகிறது. ஆனால் இது ஒரு வெளிப்பாடே தவிர நோய் அங்கு மட்டும் இல்லை பெருங்குடல் பகுதி முழுவதுமே புண்ணாகி-சீர்கெட்டு இருக்கிறது என்பதின் அடையாளமே மூல நோயாகும்(ppills)pppr p. மேலும் உடல் முழுமையும் சீர்கேடு உள்ளது என கொள்ளலாம். இதைச் சரிசெய்ய

 1. அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.
 2. வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை
 3. நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.
 4. இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்
 5. புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.
 6. காலை, இரவு உணவு 7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
 7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.
 8. கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.
 9. உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
 10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.
 11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.
 12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.
வயிற்றில் இருந்து தான் பெருங்குடலிற்கு சத்தி கிடைக்கிறது எனவே மேறகண்ட பழக்கங்கள் மூல நோயை முழுமையாக களைய தேவை.

படத்தில் 10 ம் எண் குறிக்கும் இடத்தை அழுத்தும் போது வலி ஏற்படின் அது மூல நோய்க்கு அடையாளம் அங்கு மென்மையாக சில விணாடிகள் காலை மாலை தொடுவது மூல நோயை முழுமையாக நீக்கும்.

குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலம் பொறலாம்.


 
கர்ப்ப பை கட்டிகளுக்கு- நோய்களுக்கு (uterus)


 

கர்ப்ப பை நலத்துக்கு மேலே கூறியுள்ள நோயணுகா விதிகள் மிக முக்கியம். இவ் விதிகளை மீறுபவர்களுக்கு கர்ப்ப பை நோய்கள் வருவது நிச்சயம்.

கர்ப்ப பை நோய்களை நீக்கி சுகப் படுத்த கீழ்காண்ட மூலிகைகள் சிறப்பானவை.


 1. கறிவேப்பிலை.

 2. அம்மான் பச்சரிசி.

 3. குப்பைமேனி.
 4. சிறு செறுபடை

 5. அருகம் புல்

 

இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும்.

இங்கு உள்ளங்கை படத்தில் 11 முதல் 16 வரை உள்ள இடங்கள் மற்றும் 37 ஆகிய சத்தி தூண்டும் இடங்களை மிக மென்மையாக தூண்டுவது (முன்கூறிய முறைப்படி) மிக விரைவில் முழுமையான நலம் தரும்.

இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart)

இதயம் நமது உடலின் மிக சிறப்பான வலுவான கருவியாக இறைவன் வடிவமைத்துள்ளான். அது தன்னையும் காத்துக் கொண்டு மற்ற அனைத்து உறுப்புகளையும் காத்துக்கொள்ளத் தேவையான வலுவும், நுட்பங்களும் நிறைந்த்து.

தற்பொதய மருந்து வணிகம் இதயத்தை பற்றிய தேவையற்ற பயத்தையும், கருத்துக்களையும் மக்களிடம் திணித்து - அதனால் தான் பிழைக்கிறது. இரத்த அழுத்தம் என்பதை நோயாக்கியுள்ள எதிர்முறையம்; இதற்கான காரணமும் தீர்க்கும் வகையும் தெரியாத்தால்_ இதற்கான தான் kislமனிதர்களிடத்து மருத்துவம் செய்யத் தடையிருந்தும், கட்டுப்படுத்துகிறோம் என்று கதைவிட்டு அக்கதையை நம்புபவர்களிடம் அவர்கள் நலத்தை அழித்துக் காசுபண்ணிக் கொண்டிருக்கிறது.

ஆனால், என்ன கொடுமையென்றால் - நிறைய பேர் சிந்திக்க தயாராக இல்லாததால் அவர்கள் காட்டில் மழை தான்.

நாளும் ஓர் உளறல் எனும் தலைப்பில் நான் இணைத்துள்ள ஆங்கில மருத்துவரின் ஒப்புதல வாக்குமூலம் போன்ற செய்தி படித்திருப்பீர்கள். இல்லையெனில் படித்துப் பார்க்கவும்.

நிற்க, இதயத்தில் உண்மையாகவே ஒரு நோய் அல்லது பலவீனம் இருப்பின் அதை எளிய வழியில் சீராக்க உதவும் மூலிகைகள் சில.


 

 1. 1. செம்பரத்தை

 2. மருதம்பட்டை

 3. சீந்தில்

 4. தாமரை

 5. முளரி (ரோஜா)
 6. அமுக்காரா

 7. விஸ்ணு கரந்தை

 8. நீர் முள்ளி
 9. வேம்பு
என பல மூலிகைகள் இதயத்துக்கு வலிவு தரும்.

மேலே கூறியுள்ள மூலிகைகளில் 1 முதல் 7 வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலா, திரிகடுகு, அதிமதுரம், சிறு நாகப்பூ, கருவாப்பூ, சிறு மணகம் சேர்த்து செய்யும் சூரணங்கள், லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.

இங்கு கொடுத்துள்ள படத்தில்,

8,28,30,36 ஆகிய இடங்களை மென்மையாக அழுத்திப்
பார்த்து வலியிருப்பின் மிக மென்மையாகத் தூண்டி வந்தாலே போதும்; எப்பேர்பட்ட இதய நோயாக இருந்தாலும் மிக விரைவில் குணம் ஆகும். பணச் செலவும், மனக் கவலையும் வேண்டாம்.

முதலில் நாம் நம்மைப் படைத்த படைப்பாற்றல் மீது நம்பிக்கை கொள்வோம். தான் படைத்த உயர்ந்த படைப்பாகிய மனிதனை இறைவன் நோயாளியாக படைக்கவில்லை. மனித அறிவாலேயே இறைவிதிகளுக்கு முரணாக சென்று நாம் துன்ப படுகின்றோம். இதை அடையாளப் படுத்தி நம்மை நல்வழிப்படுத்தவே நோய்களும், வறுமையும் நாம் மனந்திருந்தி இறைவிதிகளை முறைப்படி கொள்வோமேயானால் - உலகம் அழகானதே.

இறையாற்றலின் அடிப்படை விதிகள்.

படைப்பாற்றல் நமக்களித்திருக்கும் அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து எதற்காகவும தேவைகளைப் புறக்கணிக்காமல் இருத்தல் வேண்டும். (பசி, தாகம், ஓய்வு, உறக்கம், நல்ல நட்பு, உறவுகள் போன்றவை)

இரத்த அழுத்தம் எப்பொழுதும் நல்லதே இது நமது தேவைகளுக்காக (உடல் மனம்) இதயம் நன்கு இயங்குகிறது என காட்டுகிறது. இதை அளந்து பார்த்துக் கொண்டுருப்பது உடலியக்கத்தின் அடிப்படை புரியாதோரின் அறிவற்ற செயல்.

இரத்தக் கொதிப்பு என்பது தவறு தான். இது பிற மனிதர்களை உயர்வாகவோ - தாழ்வாகவோ மதிப்பதால் வரும் பெரும் தீங்கு. இதிலிருந்து விடுபட பிற மனிதர்களை அனைத்து வகையிலும் சமமாக நடத்திப் பழகுவோம். இரத்தக் கொதிப்பு எனும் இந்தச் சமூக நோய் நீங்கும்.

சரி நண்பர்களே, இப்பொழுது நிறுத்துகிறேன் உங்கள் தேவை அறிந்து பின், எழுதுகிறேன் - தொடர்ந்து. 
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
மரபுவழி நலவாழ்வு மையம்,
31.அண்ணா தெரு,
காந்தி நகர்,
ஆவடி, 
சென்னை-600054
தமிழ் நாடு, இந்தியா


கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com