வியாழன், 21 அக்டோபர், 2010

தோழி வாசுகியின் பக்கங்கள்

நம்மாலும் மாற முடியும்...மாற்றவும் தான்............(வாசுகி)

இந்த இறை வழி / இயல் வழி  மருத்துவ முறைகளை பற்றி பேசினாலே....நிறைய நண்பர்கள் என்னை கேட்பதுண்டு....
  • அப்படி என்ன நாம் உலகையே மாற்றி விடவா முடியும்....
  • இந்த உலகத்தில் தானே வாழ்ந்தாக வேண்டும்...
  • உலகத்தோடு ஒத்து வாழ்ந்து விட்டு போக  வேண்டியது தான்
  • இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டியது தான் என்றெல்லாம்.....
உலகம், சமூகம் என்பதெல்லாம், சிறு துளி பேரு வெள்ளம் போல...சிறு சிறு எண்ணங்கள்  வலிமையான மாற்றத்தை கொண்டு வருவதை போல, சிறு சிறு மாற்றங்கள் நமது உடல் மற்றும் மன நலனில் உறுதியான மாற்றத்தை கொண்டு வரும் - கண்டிப்பாக. மெதுவாக இவற்றை கடை பிடித்தாலே, வாழ்வில் பெரும்பாலான மருத்துவ செலவுகளை தவிர்த்து விடலாம்.....
ஆனால் நாம் நினைத்தால் சிறிது சிறிதாக ஆனால் உறுதியாக நிறைய மாற்றங்களை கொண்டு வர முடியும். 
உதாரணத்திற்கு சில....
  1. சமையல் எண்ணெய் : காதி கிராமயோக் பவனில் அருமையான செக்கெண்ணை கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதெல்லாம் கசக்கும் என்று சொல்பவர்களுக்கு. பின்னால் புற்று நோய் வந்து அதற்கான வைத்தியம் பார்பவதை விட, இந்த மிக குறைவான கசப்பிற்கு  மிக விரைவில் பழகிக்கொள்ளலாம். (மற்ற பிற எண்ணெய்கள்  எல்லாமே பெட்ரோலிய பொருள்களை கொண்டு சுத்தம் செய்பவை . அதனால் புற்று நோய்கள் கூட வர வாய்ப்புண்டு). எனது வீட்டில் பெரியவர்களிடம் சிறிய முணுமுணுப்பு இருந்ததே தவிர  குழந்தைகள் ஒரு வித்தியாசத்தையும் உணர வில்லை.  மற்ற பிற எண்ணெய்கள்  எல்லாமே பெட்ரோலிய பொருள்களை கொண்டு சுத்தம் செய்பவை . அதனால் புற்று நோய்கள் கூட வர வாய்ப்புண்டு. 
  2. சோப்புகள்: கடைகளில் விற்கப்படும் "detergent " சோப்புகள் நமது கைகளுக்கு/தோலுக்கு   தீங்கானவை. (இந்த சோப்பை உபயோகபடுத்தினால்  ஏழு முறை கை கழுவ வேண்டுமாம்...தண்ணீர் செலவு வேறு....)அதற்கு மாற்றாக காதியில் விற்கும் நீம் பார் (Neem Bar) சோப்பை உபயோகபடுத்தலாம். இது detergent சோப்பை விட நன்றாகவே தோய்க்கும்.எனது மகனில் வெள்ளை சட்டையில் இருக்கும் அழுக்கை நீக்க இயற்கையான நல்ல வழி. எந்த வாஷிங் மிஷினிலும், எவ்வளவு detergent போட்டாலும் இந்த அழுக்கு அவ்வளவு சீக்கிரம் போகாது.   நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். கடைசியில் வரும் துண்டு சோப்புகளை சேகரித்து செடிகளுக்கு மருந்து(இயற்கை) அடிக்கும்போது ஊற வைத்து / கரைத்து பயன்படுத்துவோம்....மருந்து செடிகளில் நன்றாக ஒட்டிக்கொள்ள  பயன்படும்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
  3. வெள்ளை சர்க்கரை  :இப்பொழுதெல்லாம் வீட்டில்  வெள்ளை சர்க்கரையை அறவே தவிர்த்து வருகிறோம். விருந்தினர் வந்தாலும், கருப்பட்டி தேநீர் தான்.  உண்மையில் நிறைய பேருக்கு கருப்பட்டி தேநீர் தான் பிடிக்கிறது. போன வாரம் கோதுமை ரவையையும், பனங்கற்கண்டை  பொடித்தும் பயன்படுத்தி செய்த கேசரிக்கு நல்ல வரவேற்பு....வந்திருந்த புது மன தம்பதியர்க்கும் அதுவே விருந்து.  (நன்றி : எனது அலுவலக தோழிக்கு. அவளது கணவருடன் தென்னாப்பிரிக்கா சென்று வந்த போது அவள் வாங்கி வந்த "பிரவுன்" - சர்க்கரையையும் (ரசயானம் கொண்டு சுத்தப்படுத்தாத) , கோதுமை ரவையும் வைத்து அவள் செய்த கேசரிதான் எனக்கும் தூண்டுதல்...). இப்பகுதியை படிக்கும் வணிக நண்பர்கள், அதே போல சர்க்கரையை இங்கும் விற்பனைக்கு கொண்டு வந்தால் நலம்.
அதனால் நண்பர்களே, நாம் மாற்ற   வேண்டும் / மாற வேண்டும் என்று நினைத்தால் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் வரும்பொழுது - பயன்படுத்தும் எண்ணம் மட்டுமே நாம் உருவாக்க வேண்டியது...
                                                                             ........இன்னும் தொடரும்..... 
அன்பில்,
          வாசுகி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.