வியாழன், 16 செப்டம்பர், 2010

சித்தர் வழியில்

சித்தர் வழியில்...

        வீட்டு மருத்துவர்

சித்தர் வழியில் தமிழ் என்பது மொழி, இனம், நாடு மட்டுமல்ல, அது கலை, பண்பாடு, நாகரீகம். உணவு, உடை, வாழ்வியல், உறவு, உணர்வு, உயிர்ப்பு, மனம், மெய், மருந்து, அறிவு, ஆற்றல்,ஆளுமை என எல்லாமுமானது

மாந்தர்களுக்கு, சித்தர்கள் அருளிய, தமிழர் மரபு வழி வாழ்வு இந்த உலகத்தை அழிவிலிருந்து காக்க வல்லது. சித்தர்கள தம் அரிய படைப்பை காக்கும் பொறுப்பை வீட்டு மருத்துவர்களாம் பெண்கள் கையில் அளித்துள்ளார்கள.

 இன்று வரை, இந்த ஆணாதிக்க வணிக அறிவியலின் அழிவு தரும் கொடும் வாழ்க்கை முறைகளில்  இருந்து நம்மை மறைமுகமாக காத்து வருபவர்களும் நமது வீட்டு மருத்துவர்களாம் பெண்களே.

ஆணாதிக்க வனிக அறிவியலின் கொடுமையான வாழ்க்கை முறையால் அனாதைகளான இன்றைய பாட்டிகளிடம் நல்லறிவுப் புதையல் உள்ளது. நாம் நமது வீட்டு மருத்துவர்களின் சிறப்பை உணர்ந்து, மதிப்பளித்து அவர்களுடன் இணைந்து, நம்மரபை மீட்டெடுக்க வேண்டிய கடமை  அனைத்து மாந்தர்களுக்கும் உள்ளது. மறந்தால், பயனில்லா கிழம் என்று நம்மை கூப்பிட நமது பேரக்குழந்தைகள் இருக்க மாட்டார்கள்..

நம் மரபு வழி வாழும் முறைகளை கற்று, வாழ்ந்து, பகிர்ந்து நலம் பெறுவோம்.

வீட்டு மருத்துவர்க்காக மரபுவழி நலவாழ்வு மையம்

1 கருத்து:

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.