செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

அட நம்ம பேமுழி டாக்டர் கதை தானா?.....



How Indian Doctors Loot Patients.


Most of these observations are either completely or partially true. Corruption has many names, and one of civil society isn't innocent either. Professionals and businessmen of various sorts indulge in unscrupulous practices. I recently had a chat with some doctors, surgeons and owners of nursing homes about the tricks of their trade. Here is what they said

1)      40-60% kickbacks for lab tests. When a doctor (whether family doctor / general physician, consultant or surgeon) prescribes tests - pathology, radiology, X-rays, MRIs etc. - the laboratory conducting those tests gives commissions. In South and Central Mumbai -- 40%. In the suburbs north of Bandra -- a whopping 60 per cent! He probably earns a lot more in this way than
the consulting fees that you pay.

2)      30-40% for referring to consultants, specialists & surgeons. When your friendly GP refers you to a specialist or surgeon, he gets 30-40%.

3)      30-40% of total hospital charges. If the GP or consultant recommends hospitalization, he will receive kickback from the private nursing home as a percentage of all charges including ICU, bed, nursing care, surgery.

4)      Sink tests. Some tests prescribed by doctors are not needed. They are there to inflate bills and commissions. The pathology lab understands what is unnecessary. These are called "sink tests"; blood, urine, stool samples collected will be thrown.

5)      Admitting the patient to "keep him under observation". People go to cardiologists feeling unwell and anxious. Most of them aren't really having a heart attack, and cardiologists and family doctors are well aware of this. They admit such safe patients, put them on a saline drip with mild sedation, and send them home after 3-4 days after charging them a fat amount for ICU, bed charges, visiting doctors fees.

6)      ICU minus intensive care. Nursing homes all over the suburbs are run by doctor couples or as one-man-shows. In such places, nurses and ward boys are 10th class drop-outs in ill-fitting uniforms and bare feet. These "nurses" sit at the reception counter, give injections and saline drips, perform ECGs, apply dressings and change bandages, and assist in the operation theatre. At night, they even sit outside the Intensive Care Units; there is no resident doctor. In case of a crisis, the doctor -- who usually lives in the same building -- will turn up after 20 minutes, after this nurse calls him. Such ICUs admit safe patients to fill up beds. Genuine patients who require emergency care are sent elsewhere to hospitals having a Resident Medical Officer (RMO) round-the-clock.

7)      Unnecessary caesarean surgeries and hysterectomies. Many surgical procedures are done to keep the cash register ringing. Caesarean deliveries and hysterectomy (removal of uterus) are high on the list. While the woman with labour -pains is screaming and panicking, the obstetrician who gently suggests that caesarean is best seems like an angel sent by God! Menopausal women experience bodily changes that make them nervous and gullible. They can be frightened by words like " and "fibroids" that are in almost every normal woman's radiology reports. When a gynaecologist gently suggests womb removal "as a precaution", most women and their husbands agree without a second's
thought.


8)      Cosmetic surgery advertized through newspapers. Liposuction and plastic surgery are not minor procedures. Some are life-threateningly major. But advertisements make them appear as easy as facials and waxing. The Indian medical council
has strict rules against such misrepresentation. But nobody is interested in taking action.

9)      Indirect kickbacks from doctors to prestigious hospitals. To be on the panel of a prestigious hospital, there is give-and-take involved. The hospital expects the doctor to refer many patients for hospital admission. If he fails to send a certain number of patients, he is quietly dumped. And so he likes to admit patients even when there is no need.

10)  "Emergency surgery" on dead body. If a surgeon hurriedly wheels your patient from the Intensive Care Unit to the operation theatre, refuses to let you go inside and see him, and wants your signature on the consent form for "an emergency
operation to save his life", it is likely that your patient is already dead. The "emergency operation" is for inflating the bill; if you agree for it, the surgeon will come out 15 minutes later and report that your patient died on the operation table. And then, when you take  delivery of the dead body, you will pay OT charges, anaesthesiologist's charges, blah-blah-

Doctors are humans too. You can't trust them blindly. Please understand the difference.

Young surgeons and old ones. The young ones who are setting up nursing home etc. have heavy loans to settle. To pay back the loan, they have to perform as many operations as possible. Also, to build a reputation, they have to perform a large number of operations and develop their skills. So, at first, every case seems fit for cutting. But with age, experience and prosperity, many surgeons lose their taste for cutting, and stop recommending operations.

Physicians and surgeons. To a man with a hammer, every problem looks like a nail. Surgeons like to solve medical problems by cutting, just as physicians first seek solutions with drugs. So, if you take your medical problem to a surgeon first, the chances are that you will unnecessarily end up on the operation table. Instead, please go to an ordinary GP first
                                   

வலையில் பிடித்தது

நலம் பற்றிய நல்ல பேச்சு கேளுங்கள்

Dear All,

Kindly watch this speech by the Doctor B M Hegde, a thought provoking speech on our good health....How simple it is to maintain very good health...........

http://bmhegde.com/hegde/viewpage.php?page_id=4


Regards
Maheswari

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மக்கள் போராட்ட திசைவழி மாறல் வேண்டும்





அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!

அண்ணா அசாரே நாடகம் நன்றாகவே அரங்கேறி வருகிறது. இந்த சுற்றுலா போராட்டத்திற்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் இரண்டுபேர் முக்கியமானவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணா ராய், இன்னொருவர் கேரளாவை சேர்ந்த அருந்ததி ராய். (இரண்டுபேருமே வட இந்தியாவில் புகழ்பெற்றவர்கள்).


அருணா ராய்

அருணா ராய் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். இந்திய ஆட்சிப்பணி பதவியை துறந்து மக்கள் பணிக்கு வந்தவர். இன்று ஊழல் ஒழிப்புக்கு மிகப்பெரிய ஆயுதமாக உள்ள தகவல் உரிமை சட்டத்தைக் கொண்டுவர முதன்மை காரணமாக அமைந்தது இவரது கடின உழைப்புதான். இராஜஸ்தான் மாநிலத்தில் அவரது முயற்சியால் வந்த சட்டம்தான் பின்னர் இந்திய சட்டமானது.  அது மட்டுமின்றி நூறு நாள் வேலை சட்டம் வருவதற்கும் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சாதனைகளுக்காக புகழ்பெற்ற மகசாசே விருதுபெற்றவர் அருணா ராய்.

அதுமட்டுமல்ல,  இன்று அண்ணா அசாரே தத்தெடுத்துள்ள "லோக்பால்" எனும் கருத்தை முதலில் முன்னெடுத்ததே இவர் தலைமையிலான தகவல் அறிவதற்கான மக்கள் உரிமை தேசிய பிரச்சார அமைப்புதான்.

இப்போது - அரசு மற்றும் அண்ணா அசாரேவுக்கு மாற்றாக ஒரு மாற்று லோக்பால் மசோதாவை இவர் உருவாக்கிவருகிறார். அண்ணா அசாரேவின் லோக்பால் உண்மையில் சனநாயகத்துக்கு கேடுசெய்யும் என்கிறார் அருணா ராய். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளைக் கொண்ட அமைப்பிடம் உச்ச பட்ச அதிகாரத்தை அளிப்பது மிகப்பெரிய கேடாகவே முடியும். அதிகாரம்தான் ஊழலை உண்டாக்குகிறது. உச்சபட்சமான அதிகாரம் என்பது உச்சபட்சமான ஊழலையே உருவாக்கும் என்கிறார் அவர்.

அருணா ராய் குறிப்பிடும் மற்றொரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 'நீதித்துறை, நிருவாகத்துறை, நாடாளுமன்றம் - இவற்றுக்கு இடையே ஒரு அதிகார சமநிலை உள்ளது. ஒரு அமைப்பு தவறு செய்தால், மற்றொரு அமைப்பு தட்டிக்கேட்க முடியும். ஆனால், வெறும் தன்னிச்சையான அதிகாரிகள் சிலரை இதற்கு மேலாக கொண்டுவர முயல்வது சனநாயகத்தைக் கொலை செய்வதாகும்.

அதிலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் நாடளுமன்றம் திருத்த முற்பட்டால் அண்ணா அசாரேவிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்றும் பேசுவது சனநாயகத்தை அவமானப்படுத்தும் செயல்.

எல்லாம் சரி அண்ணா அசாராவின் போராட்டத்துக்கு பெரிய ஆதரவு உள்ளதே? என்கிற கேள்விக்கு - இதைவிட பெரிதாக இந்தியாவில் போராட்டங்கள் நடந்தது உண்டு, நர்மதா அணை எதிர்ப்புக்கு மிகப்பெரிய கூட்டம் கூடியது - ஆனால், அங்கெல்லாம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புதான் இல்லை என்கிறார் அருணாராய். அவரது கருத்தை இங்கே காண்க: Aruna Roy: Jan Lokpal Bill impractical, undemocratic


அருந்ததி ராய் 
அருந்ததி ராய் வேறுவிதமாக கேள்வி கேட்கிறார். இந்த போராட்டமே அரசாங்கத்தின் துணையுடன் ஊடகங்களினால் நடத்தப்படும் போராட்டம் என்கிறார் அவர்.

அண்ண அசாரே உண்ணா விரதம் இருக்கும் அதே சமயத்தில்தான் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக பத்தாயிரம் பேர் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அதுகுறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாதது ஏன்? 

அண்ணா அசாரேவின் வீடியோ செய்தி திகார் சிறைக்கு உள்ளே பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. வேறு எந்த ஒரு போராட்டத்திலாவது போராடுபவர் சிறைக்கு உள்ளே இருந்து தொலைக்காட்சியில் பேசமுடியுமா? 


அண்ணா அசாரேவின் போராட்டத்திற்கான தேவைகளை புதில்லி மாநகராட்சி செய்துதருகிறது. போபால் நச்சுவாயுவை எதிர்த்து போராட முன்வந்தால் இந்த உதவி கிடைக்குமா?

அரசின் அநீதியை எதிர்த்து அண்ணா அசாரே போராடுகிறார். அதே அரசின் அநீதியை எதிர்த்து மாவோயிசவாதிகளும் போராடுகிறார்கள். ஆனால் மாவோயிச போராளிகளை ஊடகங்கள் ஆதரிக்க மறுப்பது ஏன்? அண்ணா அசாரே போராட்டம் சமூகத்தின் மேல்தட்டு மக்களின் போராட்டம். மாவோயிச போராட்டம் என்பது அடித்தட்டு மக்களின் போராட்டம். ஆக, அநீதிக்கு எதிராக போராடுவது முக்கியமல்ல, யார் போராடுகிறார் என்பதுதான் ஊடகங்களுக்கு முக்கியம் என்கிறார் அருந்ததி ராய்.

நிலத்தையும் வாழ்வாதாரங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழக்கும் மக்கள் வந்தேமாதரம் என்றும் பாரதமாதாகீ ஜே என்றும் எப்படி போராட முடியும்? என்று கேட்கிறார் அருந்ததி ராய்.

இப்போது அண்ணா அசாரே ஆதரவாளர்கள் "நீங்கள் எங்களை ஆதரிக்காவிட்டால், நீங்கள் உண்மை இந்தியர்களே இல்லை" என மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் கூறுகிறார் அருந்ததி ராய்.

ஊழல் என்பது கணக்குத்தணிக்கை சிக்கல் அல்ல. அது சமூக ஏற்றத்தாழ்வுகளுடனும் தொடர்புடையது. அதிகாரக்குவிப்பே ஊழலுக்கு அடிப்படை என்று கூறும் அருந்ததி ராய் - லோக்பால் விசாரணை வரம்பிற்குள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஊடகங்களையும் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

"தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஊடகங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்" என்கிற இந்த ஒரு கோரிக்கையை கேட்டால் அண்ணா அசாரே கூட்டம் ஓடி ஒளிந்துவிடும். ஏனெனில், போராட காசு கொடுப்பதும் ஓசியில் விளம்பரம் கொடுப்பதும் அவர்கள்தானே!

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து போராடிய தமிழரல்லாத மிகச்சிலரில் - அருந்ததி ராய் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கருத்தை இங்கே காண்க: ARUNDHATI ROY: I'd rather not be Anna

--
Regards
Maheswari

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கத்தின் குறிப்பு

சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கத்தின் குறிப்பு
நண்பர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள

Know Your Body - 39


இன்றைய தகவல்

சர்க்கரை நோய்க்கான சோதனை மற்றும் சிகிச்சை சரியானதா என்பதை நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள்........ஒரு செய்முறைப் பயிற்சியின் முடிவில் வரும் திரவத்தின் நிறம் சிவப்பாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்....ஆனால் வந்த திரவமோ, நீல நிறத்தில் உள்ளது....இப்பொழுது என்ன செய்வீர்கள் திரும்ப செய்முறையை செய்து சரியான நிறம் வர முயற்சி செய்வீர்களா, அல்லது வெளி வந்த திரவத்தின் நிறத்தை மாற்ற முயற்சி செய்வீர்களா  ??  தற்பொழுது நவீன மருத்துவம், வெளி வந்த திரவத்தின் நிறத்தை மாற்றும் வேலையையே செய்து வருகிறது........அதனால் தான் அவர்களால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை....வெறும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாக மட்டுமே கூறிக்கொண்டு உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வைத்து மேலும் சிறுநீரக / கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறார்கள்.....தேவையற்ற மருந்துகளை சாப்பிடுவதால் மேலும் பல உடல் நலக் குறைவுகளை  இழுத்து வைத்துக்கொள்கிறார்கள்....நாம்  ஏற்கனவே  பாகம் - 9 இல் படித்தது  போல, புளிப்பு உணவு வகைகளை   (இட்லி தோசை கூட புளிப்பு தான்).....குறைத்து / தவிர்த்து, நல்ல இயற்கை உணவான பழங்களை மற்றும் நார் சத்துள்ள  உண்பதன் மூலமே பெரும்பாலான ஜீரணக் கோளாறுகளை தவிர்த்து விடலாம்.....இயற்கையாகவே "Pancreas " சுரப்பியை வேலை செய்ய வைக்க, REN 13 என்ற புள்ளியை அழுத்தினால் போதும்..

Today's Fact


A simple logic that defies the diabates test. Consider that in an experiment,after a certain process, a pale blue colour should arrive as the resultant solution. But instead, the solution that arrives after the process, is somewhat pale red. In such a situation, will you try to correct the process again for making the resultant colour to be in the desired colour, or will you just try to change the colour of the resultant liquid ??. At present, all diabetics are forced to carry on with the second option only, literally changing the colour of the solution,ie,, which does not in any way correct the core process......But the ultimate desirable fact any person with a common sense would think of is, correcting the process rather than the resultant solution. To be more clear, the sugar or the glucose absorption facility of the body should be increased so that it is not eliminated as a waste in blood/urine.....This can be even done by simple activation of the pancreas glands, and by following correct eating procedures. Avoiding/Reducing sour items (not even idli/ dosa) and having naturally available good fruits and fiber rich food is the best way to combat this digestive disorder.

இன்றைய குறிப்பு  

இயற்கையாகவே "Pancreas " சுரப்பியை வேலை செய்ய வைக்க, REN 13 என்ற புள்ளியை அழுத்தினால் போதும்....இந்தப்புள்ளி, தொப்புளில் இருந்து ஐந்தாவது விரல் வைக்கும் இடத்தில் உள்ளது.....

Today's Tip

For activation of the pancreas glands, press CV13 daily once.  It is the fifth point from the umbilicus. Place your hand above the umbilicus, and where your fifth finger comes, - is the location of CV 13.

அன்புடன்
மகேஸ்வரி
Regards
Maheswari


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

நலவாழ்வுக்குத் தகுதியானவர்களுக்கான தமிழ் மரபுவழி மருந்துவங்களின் அறிமுக விழா


பதஞ்சலி நல மையம், மேடவாக்கம்  மற்றும் மரபுவழி நலவாழ்வு மையம், ஆவடி

இணைந்து நடத்தும்
மரபுவழி மருத்துவங்களின் அறிமுக விழா

நம் உடலில் வரும் நோய்கள் அனைத்தையும் நீக்கி நோயற்ற வாழ்வு வாழ வேண்டுவோர்க்கான எளிய பாதைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். சில பத்தாண்டுகளாக நாம் நம் முன்னோர்களின் நலவாழ்வுக்கான விதிகளை மறந்து தவறான பாதையில் வெகுதூரம் வந்துவிட்டோம். விளைவு;

·         குழந்தை பிறப்பு என்பதே நோயாகிவிட்டது.

·         குழந்தைகளுக்குக் கூட கடும் உடல் நலக் குறைவு.

·         ஆரோக்யமுள்ள சிறுவர், சிறுமியரை, இளைஞர்களை பார்க்க முடியவில்லை.

·         உடல் வலி, மனத் துன்பம் இல்லாத நடுத்தர வயதினரை பார்க்க முடியவில்லை.

·         கர்ப்ப பை சார்ந்த நோயில்லாத பெண்களையோ, மூட்டுவலிகள் இல்லாத முதியவர்களையோ பார்க்க முடியவில்லை.

·         நமது வருவாயில் பெரும் பங்கு நவீன மருத்துவச் சோதனைகளுக்கும், நிரந்தரத் தீர்வு தராத மருந்துகளுக்கான செலவுகளுக்குமே வீணாகிறது.

·         பலர் இந்த நோயின் நரக வாழ்வை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டனர். இதற்குச் செய்யும் செலவுகளைப் பெருமையாக கருதி மேலும் துன்பத்தை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள.

இவர்களுக்காக, நாளும் ஒரு நோய்க்கான சிறப்பு நாட்களை ஒதுக்கி விழாக்கள் கொண்டாடி வருவதைத் தவிர நவீன அறிவியலில் இதற்கு ஒரு தீர்வும் இல்லாததை பார்க்கிறோம்.

ü  நலவாழ்வு என்பது கனவாய் போனதோ?

ü  இந்த நோய்ச் சூழலில் இருந்து விடுபட வழி இல்லையா?

ü  எனது குழந்தைகளை இந்த சூழல் அழிவிலிருந்து எப்படி காப்பேன்?

ü  நல்ல நஞ்சில்லாத உணவுகள் கிடைக்காதா? முன்பு சாப்பிட்ட உணவுகளின் சுவை மீண்டும் கிடைக்காதா?

ü  பக்கவிளைவில்லாத எளிய மருத்துவ முறைகள் உள்ளதா?

ü  மருந்துகளே இல்லாமல் நலவாழ்வு பெறமுடியுமா?

ü  நமக்கு நல்ல கை வைத்தியம் சொல்லித் தர  ஆளில்லையே; யாரிடம் கேட்பது?

ü  எளிய மருத்துவ முறைகளை நாமே கற்றுக்கொள்ள முடியுமா?  
 
ü  உடல் உறுப்புகளையும், பணத்தையும் இழக்காமல் நமது நோய்களைச் சரிசெய்து கொள்ள முடியுமா?

ü  எனது பெற்றோர்களின் கடைசி காலத்தை அவர்கள் மகிழ்ச்சியாக, நோய்த் துனபமில்லாமல் கழிக்க என்ன வழி?

என கவலைப்படுபவர்கள் மிகச் சிலரே! இவர்களே நலவாழ்வுக்குத் தகுதியானவர்கள். அவர்களுடைய நலவாழ்வுக்கான பாதைகளை கண்டறியவும், நம்பிக்கையூட்டவும், பகிர்ந்துகொள்ளவும் உதவுவதே எங்கள் மரபுவழி நலவாழ்வு மையங்களின் நோக்கம்.

நலவாழ்வை விரும்பும் உங்களுக்கு, இங்கு வருகை தருவது உங்கள் உடல்நிலை பற்றி அறியவும், உடல் துன்பங்களை நீக்கும் வழிகளை அறியவும், நல வாழ்வுக்கான முறைகளை பகிர்ந்து கொள்ளவும், சிகிச்சை பெறவும் உதவும்.

மக்கள் மருத்துவத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அனுபவமிக்க மருத்துவ நிபுனர்களை இங்கு நீங்கள் சந்திக்கலாம், நீங்கள் விரும்புபவர்களிடம் உங்கள் நலம் குறித்த ஆலோசனைகளையும், சிகிச்சையையும் பெறலாம். முகாமுக்குப் பின்னரும் தொடர்ந்து மரபுவழி நலவாழ்வு மையத்தின் ஆலோசனைகளும் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

இன்றைய முகாமுக்கு தனது பங்களிப்பைத் தரும் மருத்துவர்கள்,

திரு. ஹதர் முகமது, திரு.ந. தமிழவேள், திரு. ரெய்கி குமார் – இறைவழி மருத்துவம்.
திரு. விஷ்வஜோதி. வேலாயுதம்., திரு.நாகராஜ் – மரபுவழி சித்த மருத்துவம்
திரு தி. . பாலசுப்ரமணியம்                      - ஹோமியோ மற்றும்  சித்த/வர்ம மருத்துவம்
திருமதி. வேல். ரத்னாM.D, PhD (ACU), திரு. ஆர்.சுப்புராஜ் M.D (ACU) - வர்ம மருத்துவம்.
திருமதி. மகேஸ்வரி M.D (ACU)., திருமதி.மாலினி. M.D (ACU)        - வர்ம மருத்துவம்.
திருமதி.பசுங்கிளி. M.D (ACU) , திருமதி.கற்பகம் . M.D (ACU)         - வர்ம மருத்துவம்.
திரு.தியாக ராஜன்       – வர்ம மருத்துவம்
.
நாள்; 21.- 8 – 2011. ஞாயிறு காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை

இடம்; மரபுவழி நலவாழ்வு மையம், எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054.

தொலை பேசி எண்; 93458 12080, 94447 76208
.
மின்னஞ்சல் :  thamizhavel.n@gmail.com

வலைப்பதிவு :  http://siddhahealer.blogspot.com and http://siddhahealer.in

பதிவுக் கட்டணம்; 100 ரூபாய் (பதிவு செய்பவர்களுக்கு ஆலோசனைகளும், சிகிச்சையும் இலவசம்)

பதஞ்சலி நல வாழ்வு மையம்,

செந்தமிழ் நகர், தாம்பரம் - வேளச்சேரி சாலை, மேடவாக்கம், சென்னை 600 100.
மருத்துவர் ரத்னா - திங்கள் - சனி 10AM- 1PM,
மருத்துவர் தமிழவேள் - புதன், சனி - 10AM -7PM, ஞாயிறு - 10AM - 1PM.
மரபுவழி நலவாழ்வு மையம் 

எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054.

மருத்துவர்  தமிழவேள் -திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி 10AM -7PM

மருத்துவர் சுப்புராஜ் திங்கள்- சனி 7 PM -9 PM

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

பணமும், உடல் நலமும் கொள்ளை போகிறது

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.



இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.



திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.



இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:



1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.



2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.



3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.



4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.



5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.


இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.



இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.





--
Thanks and Regards,

Monica Baskar

நன்றி,
மகேஸ்வரி




--